உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. யோசுவா 19:31சுமார் கி.மு. 1443

    இந்நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சொத்துரிமை.

  2. யோசுவா 19:32சுமார் கி.மு. 1443

    ஆறாவது சீட்டு வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்கு விழுந்தது.

  3. யோசுவா 19:33சுமார் கி.மு. 1443

    அவர்களின் எல்லை ஏலேப்பிலும், சானானிமின் பெரிய மரத்தடியிலுமிருந்து ஆதமி நெகேப், யாப்னியேலைக் கடந்து லக்கூமை அடைந்து, யோர்தானில் முடிவடைந்தது.

  4. யோசுவா 19:34சுமார் கி.மு. 1443

    எல்லை மேற்கே சென்று அஸ்னோத் தாபோர் வழியாகப்போய் உக்கொத்தில் முடிவடைந்தது. தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், கிழக்கே யோர்தானையும் தொட்டுச் சென்றது.

  5. யோசுவா 19:35சுமார் கி.மு. 1443

    அங்கிருந்த அரணிடப்பட்ட பட்டணங்களாவன: சித்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

  6. யோசுவா 19:36சுமார் கி.மு. 1443

    ஆதமா, ராமா, ஆத்சோர்,

  7. யோசுவா 19:37சுமார் கி.மு. 1443

    கேதேஸ், எத்ரேயி, என் ஆத்சோர்

  8. யோசுவா 19:38சுமார் கி.மு. 1443

    ஈரோன், மிக்தாலேல், ஒரேம், பெத் ஆனாத், பெத்ஷிமேஷ் ஆகியன. அங்கே பத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.

  9. யோசுவா 19:39சுமார் கி.மு. 1443

    இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.

  10. யோசுவா 19:40சுமார் கி.மு. 1443

    ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது.

  11. யோசுவா 19:41சுமார் கி.மு. 1443

    அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை: சோரா, எஸ்தாவோல், இர்ஷெமேஸ்,

  12. யோசுவா 19:42சுமார் கி.மு. 1443

    சாலாபீன், ஆயலோன், இத்லா,

  13. யோசுவா 19:43சுமார் கி.மு. 1443

    ஏலோன், திம்னா, எக்ரோன்,

  14. யோசுவா 19:44சுமார் கி.மு. 1443

    எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

  15. யோசுவா 19:45சுமார் கி.மு. 1443

    யெகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

  16. யோசுவா 19:46சுமார் கி.மு. 1443

    மேயார்கோன், ராக்கோன் யோப்பாவுக்கு எதிரே உள்ள பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

  17. யோசுவா 19:47சுமார் கி.மு. 1443

    ஆனால் தாண் கோத்திரத்தாருக்கோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பைத் தமக்குரியதாக்கிக்கொள்வது கடினமாயிருந்தது. எனவே லெஷேம் என்னும் இடத்திற்குச் சென்று அதைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் குடிகளை தம் வாளுக்கு இரையாக்கி, அதில் தாங்கள் குடியேறினார்கள். அவர்கள் லெஷேமில் குடியேறி தங்கள் முற்பிதாவின் பெயரின்படி அதற்குத் தாண் என்று பெயரிட்டார்கள்.

  18. யோசுவா 19:48சுமார் கி.மு. 1443

    இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.

  19. யோசுவா 19:49சுமார் கி.மு. 1443

    இவ்வாறு நிலம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சொத்துரிமையாக வழங்கப்பட்டபின், இஸ்ரயேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவுக்குத் தங்கள் மத்தியில் சொத்துரிமையைக்

  20. யோசுவா 19:50சுமார் கி.மு. 1443

    யெகோவாவின் கட்டளைப்படி கொடுத்தார்கள். அவன் கேட்ட திம்னாத் சேராக் என்ற பட்டணத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். இது எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. யோசுவா அவ்விடத்தில் நகரத்தைக் கட்டி அங்கே குடியேறினான்.

  21. யோசுவா 19:51சுமார் கி.மு. 1443

    இவ்வாறு இந்த நிலப்பரப்புகளை ஆசாரியனான எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீட்டுப்போட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் சீலோவின் சபைக்கூடார வாசலில் இவ்வாறு நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்கள் நாட்டைப் பங்கிட்டு முடித்தார்கள்.

  22. யோசுவா 20:1சுமார் கி.மு. 1443

    பின்பு யெகோவா யோசுவாவிடம் கூறியதாவது:

  23. யோசுவா 20:2சுமார் கி.மு. 1443

    “நான் மோசேயின் மூலமாக உனக்குச் சொன்னபடியே அடைக்கலப் பட்டணங்களை நியமித்துக்கொள்ளும்படி இஸ்ரயேலருக்குச் சொல்.

  24. யோசுவா 20:3சுமார் கி.மு. 1443

    ஒருவன் தற்செயலாகவோ, தவறுதலாகவோ ஒரு கொலையைச் செய்திருந்தால், செய்தவன் தன்னை இரத்தப்பழிவாங்க வருபவனிடமிருந்து தப்பி, அங்கே ஓடிப்போய் பாதுகாப்புப் பெறலாம்.

  25. யோசுவா 20:4சுமார் கி.மு. 1443

    அவன் ஒரு அடைக்கலப் பட்டணத்திற்குத் தப்பி ஓடிப்போனால் அவன் பட்டண நுழைவாசலில் நின்று, தன் வழக்கை பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் சொல்லவேண்டும். அப்பொழுது அவர்கள் அவனைத் தங்கள் பட்டணத்துக்குள் அழைத்துச்சென்று, அவர்கள் மத்தியில் வாழ்வதற்கு ஓர் இடத்தைக் கொடுக்கவேண்டும்.