உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. யோசுவா 18:9சுமார் கி.மு. 1443

    உடனே அவர்கள் புறப்பட்டு நாட்டின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் நாட்டின் விவரங்களைப் பட்டணம் பட்டணமாக ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஒரு புத்தகச்சுருளில் எழுதி சீலோவில் கூடாரத்தில் இருந்த யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.

  2. யோசுவா 18:10சுமார் கி.மு. 1443

    அப்பொழுது யோசுவா, சீலோவில் யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்கு சீட்டுப்போட்டு, இஸ்ரயேலரின் கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களுக்குரிய நிலத்தை பிரித்துக்கொடுத்தான்.

  3. யோசுவா 18:11சுமார் கி.மு. 1443

    வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு முதலாவது சீட்டு விழுந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பின் பங்கு யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு இடையில் இருந்தது.

  4. யோசுவா 18:12சுமார் கி.மு. 1443

    அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தான் நதியில் ஆரம்பித்து, எரிகோவின் வடமலைச் சாரலைக் கடந்து, மேற்கே உள்ள மலைநாட்டிற்குச் சென்று, பெத் ஆவென் பாலைவனத்தை வந்து சேர்ந்தது.

  5. யோசுவா 18:13சுமார் கி.மு. 1443

    அங்கிருந்து பெத்தேல் என்னும் லூஸின் தெற்கு மலைச்சரிவைக் கடந்து, பின்னர் கீழ் பெத் ஓரோனின் தெற்கே மலையில் அமைந்துள்ள அதரோத் ஆதாருக்குச் சென்றது.

  6. யோசுவா 18:14சுமார் கி.மு. 1443

    அந்த எல்லையானது தெற்கே பெத் ஓரோனை நோக்கியுள்ள குன்றிலிருந்து, மேற்குப்புறமாகத் தெற்கே திரும்பி, யூதாவின் நகரமான கீரியாத்யாரீம் அதாவது கீரியாத் பாகாலில் முடிவடைந்தது. இதுவே பென்யமீனின் மேற்கு எல்லை.

  7. யோசுவா 18:15சுமார் கி.மு. 1443

    தெற்கு எல்லையானது கீரியாத்யாரீம் நகர்ப்புறத்தில் ஆரம்பித்து, மேற்கே சென்று நெப்தோவின் நீர் நிலையருகில் முடிவடைந்தது.

  8. யோசுவா 18:16சுமார் கி.மு. 1443

    மேலும் இவ்வெல்லை ரெப்பா பள்ளத்தாக்கின் வடக்கே உள்ள, பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்கு எதிரே உள்ள மலையடிவாரத்தை அடைந்தது. அங்கிருந்து கின்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் நகர் அமைந்த மலைச்சாரலின் தென்புற வழியேசென்று, என்ரொகேலை அடைந்தது.

  9. யோசுவா 18:17சுமார் கி.மு. 1443

    அங்கிருந்து எல்லையானது வடக்கே வளைந்து, என்சேமேசுக்குத் திரும்பி அதும்மீம் ஏற்றத்தின் எதிரே உள்ள கெலிலோத்தை அடைந்து, “போகனின் கல்” என்னும் இடத்திற்குச்சென்றது. போகன் ரூபனின் மகன்.

  10. யோசுவா 18:18சுமார் கி.மு. 1443

    அது தொடர்ந்து பெத் அரபாவின் வடக்கு மலைச்சரிவுக்குச்சென்று, கீழே அரபாவை நோக்கிச்சென்றது.

  11. யோசுவா 18:19சுமார் கி.மு. 1443

    பின்னர் பெத் ஓக்லாவின் வடக்கே மலைச்சரிவிலே சென்று, சவக்கடலின் வளைகுடாக்கடலில் முடிவடைந்தது. உப்புக்கடல் தெற்கே யோர்தான் நதியின் முகத்துவாரத்தில் இருந்தது. இது பென்யமீனின் தெற்கு எல்லை.

  12. யோசுவா 18:20சுமார் கி.மு. 1443

    அவர்களுடைய கிழக்கு எல்லையாக யோர்தான் நதி அமைந்தது. இவைகளே பென்யமீன் குடும்பங்களுக்குரிய சொத்துரிமையாய் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லை.

  13. யோசுவா 18:21சுமார் கி.மு. 1443

    வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களாவன: எரிகோ, பெத் ஓக்லா, எமேக் கேசீஸ்,

  14. யோசுவா 18:22சுமார் கி.மு. 1443

    பெத் அரபா, செமராயீம், பெத்தேல்,

  15. யோசுவா 18:23சுமார் கி.மு. 1443

    ஆவீம், பாரா, ஒப்ரா

  16. யோசுவா 18:24சுமார் கி.மு. 1443

    கேம்பார் அம்மோனி, ஒப்னி, கேபா, ஆகிய பன்னிரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  17. யோசுவா 18:25சுமார் கி.மு. 1443

    கிபியோன், ராமா, பேரோத்,

  18. யோசுவா 18:26சுமார் கி.மு. 1443

    மிஸ்பா, கெபிரா, மோத்சா,

  19. யோசுவா 18:27சுமார் கி.மு. 1443

    ரெக்கேம், இர்பெயேல், தாராலா,

  20. யோசுவா 18:28சுமார் கி.மு. 1443

    சேலா, ஏலேப், எபூசியப் பட்டணம் அதாவது எருசலேம், கிபியா, கீரியாத் ஆகிய பதினான்கு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். இவையே பென்யமீன் கோத்திர வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துரிமை.

  21. யோசுவா 19:1சுமார் கி.மு. 1443

    இரண்டாவது சீட்டு வம்சம் வம்சமாக சிமியோன் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளே அமைந்தது.

  22. யோசுவா 19:2சுமார் கி.மு. 1443

    அப்பட்டணங்களாவன: பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா,

  23. யோசுவா 19:3சுமார் கி.மு. 1443

    ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம்,

  24. யோசுவா 19:4சுமார் கி.மு. 1443

    எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,

  25. யோசுவா 19:5சுமார் கி.மு. 1443

    சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,