உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. யோசுவா 15:50சுமார் கி.மு. 1443

    ஆனாப், எஸ்தெமொ, ஆனிம்,

  2. யோசுவா 15:51சுமார் கி.மு. 1443

    கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  3. யோசுவா 15:52சுமார் கி.மு. 1443

    அராப், ரூமா, எஷான்,

  4. யோசுவா 15:53சுமார் கி.மு. 1443

    யானூம், பெத் தப்புவா, ஆப்பெக்கா

  5. யோசுவா 15:54சுமார் கி.மு. 1443

    உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  6. யோசுவா 15:55சுமார் கி.மு. 1443

    மாகோன், கர்மேல், சீப், யுத்தா,

  7. யோசுவா 15:56சுமார் கி.மு. 1443

    யெஸ்ரயேல், யோக்தெயாம், சனோகா,

  8. யோசுவா 15:57சுமார் கி.மு. 1443

    காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  9. யோசுவா 15:58சுமார் கி.மு. 1443

    அல்கூல், பெத்சூர், கேதோர்,

  10. யோசுவா 15:59சுமார் கி.மு. 1443

    மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  11. யோசுவா 15:60சுமார் கி.மு. 1443

    கீரியாத் பாகால், அதாவது கீரியாத்யாரீம், ரபா ஆகிய இரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  12. யோசுவா 15:61சுமார் கி.மு. 1443

    பாலைவனத்தில் இருந்த நகரங்களாவன: பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,

  13. யோசுவா 15:62சுமார் கி.மு. 1443

    நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி ஆகிய நகரங்களும் அவற்றின் கிராமங்களும் உட்பட ஆறு ஆகும்.

  14. யோசுவா 15:63சுமார் கி.மு. 1443

    ஆனாலும் எருசலேம் பட்டணத்தில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்ற யூதாவினால் முடியவில்லை. எனவே அவர்கள் யூதா மக்களுடன் இன்றுவரை எருசலேமில் வாழ்ந்து வருகிறார்கள்.

  15. யோசுவா 16:1சுமார் கி.மு. 1443

    யோசேப்பின் பங்கு, எரிகோவின் நீர் நிலைகளுக்குக் கிழக்கே, யோர்தானிலிருந்து எரிகோவுக்கு அப்பால், பாலைவன வழியாகச் சென்று பெத்தேல் மலைநாட்டை அடைந்தது.

  16. யோசுவா 16:2சுமார் கி.மு. 1443

    பெத்தேல் என்னும் லூஸில் இருந்து அதரோத்திலுள்ள அர்கியின் பிரதேசத்தைக் கடந்து,

  17. யோசுவா 16:3சுமார் கி.மு. 1443

    பின் மேற்குத் திசையில் யப்லெத்திரின் பிரதேசத்தை நோக்கிக் கீழ் இறங்கி, அப்பிரதேசத்திலுள்ள கீழ் பெத் ஓரோன், கேசேர்வரை சென்று அங்கிருந்து கடலில் முடிவடைந்தது.

  18. யோசுவா 16:4சுமார் கி.மு. 1443

    இவ்வாறு யோசேப்பின் மகன்களான மனாசேயும், எப்பிராயீமும் தங்கள் சொத்துரிமையைப் பெற்றுக்கொண்டார்கள்.

  19. யோசுவா 16:5சுமார் கி.மு. 1443

    எப்பிராயீம் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாகக் கொடுக்கப்பட்ட பிரதேசமாவது: அவர்களுடைய சொத்துரிமை நிலத்தின் எல்லை, கிழக்கே அதரோத் அதாரில் ஆரம்பித்து, மேல் பெத் ஓரோன் வழியாக,

  20. யோசுவா 16:6சுமார் கி.மு. 1443

    அங்கிருந்து மத்திய தரைக்கடலுக்குச் சென்றது. வடக்கிலுள்ள மிக்மேத்தா என்னும் இடத்தில் இருந்து, தானாத் சீலோவுக்குக் கிழக்கே வளைந்துசென்று அதனை கடந்து கிழக்கிலுள்ள யநோகாவைச் சென்றடைந்தது.

  21. யோசுவா 16:7சுமார் கி.மு. 1443

    பின் யநோகாவிலிருந்து கீழ்நோக்கிச்சென்று, அதரோத்தையும் நாராவையும் கடந்து எரிகோவை நெருங்கி யோர்தான் நதியில் முடிந்தது.

  22. யோசுவா 16:8சுமார் கி.மு. 1443

    தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.

  23. யோசுவா 16:9சுமார் கி.மு. 1443

    இதைவிட மனாசேயின் கோத்திரத்தாருக்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலத்தில் எப்பிராயீமியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களும் இதற்குள் அடங்கியிருந்தன.

  24. யோசுவா 16:10சுமார் கி.மு. 1443

    ஆனால் எப்பிராயீமியர் கேசேர் பகுதியில் வாழ்ந்த கானானியரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. கானானியரும் எப்பிராயீம் மக்கள் மத்தியில் இன்றுவரை வாழ்கின்றார்கள். அவர்கள் கட்டாய வேலைசெய்ய வேண்டியிருந்தது.

  25. யோசுவா 17:1சுமார் கி.மு. 1443

    யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசே கோத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட நிலப்பங்கு இதுவே. இது மனாசேயின் மூத்த மகன் மாகீருக்கே கொடுக்கப்பட்டது. மாகீர் என்பவன் கீலேயாத் மக்களின் முற்பிதா. மாகீர் மக்கள் சிறந்த போர் வீரராயிருந்தபடியால் கீலேயாத், பாசான் ஆகிய பிரதேசங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.