- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
- புலம்பல் 4:16சுமார் கி.மு. 588
யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்; அவர் அவர்கள்மேல் கண்காணிப்பாய் இருப்பதில்லை. ஆசாரியரைக் கனம்பண்ணுவதுமில்லை, முதியோருக்கு தயவு காண்பிப்பதுமில்லை.
- புலம்பல் 4:17சுமார் கி.மு. 588
அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் எங்கள் கண்கள் மங்கிப்போயின; எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே!
- புலம்பல் 4:18சுமார் கி.மு. 588
மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை. எங்கள் முடிவு நெருங்கியிருந்தது, ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது.
- புலம்பல் 4:19சுமார் கி.மு. 588
எங்களைப் பின்தொடர்ந்தவர்கள், ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளைப் பார்க்கிலும் வேகமாய் இருந்தார்கள்; அவர்கள் மலைகளில் எங்களைத் துரத்தி பாலைவனத்தில் எங்களுக்காய் பதுங்கியிருக்கிறார்கள்.
- புலம்பல் 4:20சுமார் கி.மு. 588
யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும், அவர்களுடைய கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்டான். அவனுடைய நிழலின்கீழ், நாடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்வோம் என்று நினைத்திருந்தோம்.
- புலம்பல் 4:21சுமார் கி.மு. 588
ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே, நீ மகிழ்ந்து சந்தோஷப்படு. ஆனால் உனக்குங்கூட இறை கோபத்தின் பாத்திரம் கொடுக்கப்படும்; நீ குடித்து வெறிகொண்டு, ஆடையில்லாமல் கிடப்பாய்.
- புலம்பல் 4:22சுமார் கி.மு. 588
சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார். ஆனால் ஏதோமின் மகளே, அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார்.
- புலம்பல் 5:1சுமார் கி.மு. 588
யெகோவாவே, எங்களுக்கு நடந்ததை நினைவுகூரும்; எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
- புலம்பல் 5:2சுமார் கி.மு. 588
எங்கள் உரிமைச்சொத்துக்கள் அந்நியருக்கு கொடுக்கப்பட்டன. எங்கள் வீடுகள் பிறநாட்டவருக்குக் கொடுக்கப்பட்டன.
- புலம்பல் 5:3சுமார் கி.மு. 588
நாங்கள் அநாதைகளானோம், தகப்பன் இல்லை. எங்கள் தாய்மார்கள் விதவைகளைப் போலிருக்கிறார்கள்.
- புலம்பல் 5:4சுமார் கி.மு. 588
நாங்கள் குடிக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது; எங்கள் விறகும் பணத்திற்கே வாங்கப்படுகிறது.
- புலம்பல் 5:5சுமார் கி.மு. 588
எங்களைப் பின்தொடர்கிறவர்கள் எங்கள் காலடியில் நிற்கிறார்கள்; நாங்கள் களைத்துப்போனோம். ஆனால் எங்களுக்கு ஓய்வு இல்லை.
- புலம்பல் 5:6சுமார் கி.மு. 588
நாங்கள் உணவு பெறுதவதற்காக எகிப்திற்குக் கீழும், அசீரியாவுக்குக் கீழும் அடங்கிப்போனோம்.
- புலம்பல் 5:7சுமார் கி.மு. 588
எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்து, இல்லாமற்போனார்கள்; நாங்களோ அவர்களுடைய தண்டனைகளைச் சுமக்கிறோம்.
- புலம்பல் 5:8சுமார் கி.மு. 588
அடிமைகள் எங்களுக்கு மேலாக ஆளுகிறார்கள், அவர்களுடைய கையிலிருந்து எங்களை விடுவிக்க யாருமேயில்லை.
- புலம்பல் 5:9சுமார் கி.மு. 588
பாலைவனத்தில் இருக்கும் வாளின் நிமித்தம், எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே, எங்கள் உணவைத் தேடுகிறோம்.
- புலம்பல் 5:10சுமார் கி.மு. 588
பசியின் கொடுமையினால், காய்ச்சல் வந்து எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போயிற்று.
- புலம்பல் 5:11சுமார் கி.மு. 588
பெண்கள் சீயோனிலும், கன்னிகைகள் யூதா பட்டணத்திலும் மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.
- புலம்பல் 5:12சுமார் கி.மு. 588
இளவரசர்களை அவர்கள் கைகளைக் கட்டி தூக்கிலிட்டார்கள்; முதியோருக்கு மரியாதை காட்டப்படுவதுமில்லை.
- புலம்பல் 5:13சுமார் கி.மு. 588
இளைஞர்கள் ஆலைகளில் செக்கு இழுக்க கொண்டுசெல்லப்படுகிறார்கள்; சிறுவர்கள் பாரமான மரங்களைச் சுமந்து தள்ளாடுகிறார்கள்.
- புலம்பல் 5:14சுமார் கி.மு. 588
முதியோர் பட்டணத்தின் வாசலிலிருந்து போய்விட்டார்கள்; வாலிபர் தாங்கள் இசை மீட்பதை நிறுத்திவிட்டார்கள்.
- புலம்பல் 5:15சுமார் கி.மு. 588
எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது; எங்கள் நடனம் புலம்பலாக மாறிற்று.
- புலம்பல் 5:16சுமார் கி.மு. 588
எங்கள் தலையிலிருந்த மகுடம் விழுந்து விட்டது. நாங்கள் பாவம் செய்தோமே; எங்களுக்கு ஐயோ கேடு!
- புலம்பல் 5:17சுமார் கி.மு. 588
இதனால் எங்கள் இருதயம் சோர்ந்துபோயிற்று, இவைகளினால் எங்கள் கண்கள் மங்கிப்போகின்றன;
- புலம்பல் 5:18சுமார் கி.மு. 588
ஏனெனில், சீயோன் மலை பாழாகிக் கிடக்கிறது; அங்கே நரிகள் இரைதேடித் திரிகின்றன.