உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 வசனங்கள் · 3 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. புலம்பல் 3:57சுமார் கி.மு. 588

    நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர்.

  2. புலம்பல் 3:58சுமார் கி.மு. 588

    யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.

  3. புலம்பல் 3:59சுமார் கி.மு. 588

    யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்!

  4. புலம்பல் 3:60சுமார் கி.மு. 588

    அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர்.

  5. புலம்பல் 3:61சுமார் கி.மு. 588

    யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;

  6. புலம்பல் 3:62சுமார் கி.மு. 588

    அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.

  7. புலம்பல் 3:63சுமார் கி.மு. 588

    அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.

  8. புலம்பல் 3:64சுமார் கி.மு. 588

    யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.

  9. புலம்பல் 3:65சுமார் கி.மு. 588

    அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.

  10. புலம்பல் 3:66சுமார் கி.மு. 588

    கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.

  11. புலம்பல் 4:1சுமார் கி.மு. 588

    தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன.

  12. புலம்பல் 4:2சுமார் கி.மு. 588

    ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள், இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள். குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள்.

  13. புலம்பல் 4:3சுமார் கி.மு. 588

    நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல, கொடூர மனமுள்ளவர்களானார்கள்.

  14. புலம்பல் 4:4சுமார் கி.மு. 588

    தாகத்தினால் குழந்தையின் நாவு அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை.

  15. புலம்பல் 4:5சுமார் கி.மு. 588

    சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள்.

  16. புலம்பல் 4:6சுமார் கி.மு. 588

    உதவும் கரம் எதுவுமின்றி ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் தண்டனையைவிட, என் மக்களின் தண்டனை பெரிதாயிருக்கிறது.

  17. புலம்பல் 4:7சுமார் கி.மு. 588

    அவர்களின் இளவரசர்கள் உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன.

  18. புலம்பல் 4:8சுமார் கி.மு. 588

    ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.

  19. புலம்பல் 4:9சுமார் கி.மு. 588

    பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள்.

  20. புலம்பல் 4:10சுமார் கி.மு. 588

    இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, என் மக்கள் அழிக்கப்படுகையில் பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!

  21. புலம்பல் 4:11சுமார் கி.மு. 588

    யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்; அவர் தமது கடுங்கோபத்தை ஊற்றிவிட்டார். அவர் சீயோனில் நெருப்பை மூட்டினார். அது அவளின் அஸ்திபாரங்களை எரித்துப்போட்டது.

  22. புலம்பல் 4:12சுமார் கி.மு. 588

    பகைவர்களும் எதிரிகளும், எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று, பூமியின் அரசர்களோ உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை.

  23. புலம்பல் 4:13சுமார் கி.மு. 588

    ஆனால் அது நடந்தது. அவளுடைய இறைவாக்கு உரைப்போரின் பாவங்களினாலும், ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இது நடந்தது. அவர்களால் எருசலேமுக்குள் நேர்மையானவர்களின் இரத்தம் சிந்தப்பட்டது.

  24. புலம்பல் 4:14சுமார் கி.மு. 588

    இப்பொழுதோ அவர்கள் குருடரான மனிதரைப்போல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் இரத்தத்தினால் கறைப்பட்டிருப்பதால், அவர்களுடைய உடைகளைத் தொடுவதற்குக்கூட ஒருவரும் துணியவில்லை.

  25. புலம்பல் 4:15சுமார் கி.மு. 588

    “விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்” என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள். அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள், “இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள்.