- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
- புலம்பல் 1:1சுமார் கி.மு. 588
ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே.
- புலம்பல் 1:2சுமார் கி.மு. 588
இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
- புலம்பல் 1:3சுமார் கி.மு. 588
துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
- புலம்பல் 1:4சுமார் கி.மு. 588
நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
- புலம்பல் 1:5சுமார் கி.மு. 588
அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
- புலம்பல் 1:6சுமார் கி.மு. 588
சீயோன் மகளின் சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத மான்களைப் போலானார்கள்; அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
- புலம்பல் 1:7சுமார் கி.மு. 588
எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
- புலம்பல் 1:8சுமார் கி.மு. 588
எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள். அவளை கனம்பண்ணின யாவரும் அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால், அவளை அவமதிக்கிறார்கள்; அவள் தனக்குள் அழுது, தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
- புலம்பல் 1:9சுமார் கி.மு. 588
அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை. ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது; அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை. “யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்; என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள்.
- புலம்பல் 1:10சுமார் கி.மு. 588
பகைவன் எருசலேமின் இன்பமான எல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான். அவளுடைய பரிசுத்த இடத்திற்குள் பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள். யெகோவா தடைசெய்தவர்கள் அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள்.
- புலம்பல் 1:11சுமார் கி.மு. 588
அவளுடைய மக்கள் யாவரும் அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களை உணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள். அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்! நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள்.
- புலம்பல் 1:12சுமார் கி.மு. 588
“இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே, உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ? சுற்றிலும் நோக்கிப்பாருங்கள். யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில், என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்ற வேதனை ஏதும் உண்டோ?
- புலம்பல் 1:13சுமார் கி.மு. 588
“யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார். அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து, என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார். அவர் என்னைப் பாழாக்கி, நாள்தோறும் மயக்கமடையச் செய்தார்.
- புலம்பல் 1:14சுமார் கி.மு. 588
“என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு, என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன. யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார். என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில் என்னை ஒப்புக்கொடுத்து விட்டார்.
- புலம்பல் 1:15சுமார் கி.மு. 588
“என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் யெகோவா புறக்கணித்துவிட்டார்; என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி, எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார். யூதாவின் கன்னிகையை யெகோவா தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார்.
- புலம்பல் 1:16சுமார் கி.மு. 588
“இதனால்தான் நான் அழுகிறேன். என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை. என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை. பகைவன் வெற்றிகொண்டபடியினால், என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.”
- புலம்பல் 1:17சுமார் கி.மு. 588
சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள், அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை. யாக்கோபின் அயலவர் அவனுக்குப் பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்; அவர்கள் மத்தியில் எருசலேம் ஒரு அசுத்தப் பொருளாயிற்று.
- புலம்பல் 1:18சுமார் கி.மு. 588
“யெகோவா நேர்மையுள்ளவர், இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன். மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்; என்னுடைய துன்பத்தைப் பாருங்கள். என் இளைஞரும், இளம்பெண்களும் நாடுகடத்தப்பட்டுப் போனார்கள்.
- புலம்பல் 1:19சுமார் கி.மு. 588
“நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள். என்னுடைய ஆசாரியரும், முதியோரும் தங்கள் உயிரைக் காக்க உணவு தேடுகையில், பட்டணத்தில் அழிந்துபோனார்கள்.
- புலம்பல் 1:20சுமார் கி.மு. 588
“யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன். நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன். என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன். ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன். வெளியே, வாள் அழிக்கிறது; உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது.
- புலம்பல் 1:21சுமார் கி.மு. 588
“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை. என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு, நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களும் என்னைப் போலாகும்படி நீர் அறிவித்த நாளை வரப்பண்ணும்.
- புலம்பல் 1:22சுமார் கி.மு. 588
“அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்; என்னுடைய எல்லா பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோலவே, அவர்களுக்கும் செய்யும். என் புலம்பல்கள் அநேகம், என் இருதயமும் சோர்ந்துபோகிறது.”
- புலம்பல் 2:1சுமார் கி.மு. 588
யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்; இஸ்ரயேலின் சீர்சிறப்பை வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்; அவர் தமது கோபத்தின் நாளில் தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை.
- புலம்பல் 2:2சுமார் கி.மு. 588
யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; யூதா மகளின் கோட்டைகளை தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். அரசுகளையும், அதன் இளவரசர்களையும் அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார்.
- புலம்பல் 2:3சுமார் கி.மு. 588
அவருடைய கோபத்தினால் இஸ்ரயேலின் முழு பலத்தையும் இல்லாமல் பண்ணினார். அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். அவர் யாக்கோபின் நாட்டில், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார்.