உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 1 நாளாகமம் 11:17சுமார் கி.மு. 1055

    தாவீது, “பெத்லெகேமின் வாசலில் இருக்கும் கிணற்றிலிருந்து எனக்கு யாராவது குடிக்க தண்ணீர் கொண்டுவந்தால் எவ்வளவு நல்லது!” என ஆவலுடன் கூறினான்.

  2. 1 நாளாகமம் 11:18சுமார் கி.மு. 1055

    எனவே அந்த மூவரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேமின் வாசலின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி, கொண்டுவந்து தாவீதுக்குக் கொடுத்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து அதை யெகோவாவுக்கு முன்பாக வெளியே ஊற்றினான்.

  3. 1 நாளாகமம் 11:19சுமார் கி.மு. 1055

    அவன், “இறைவனே, நான் இதைச் செய்வதற்கு எண்ணியும் பார்க்கமாட்டேன். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தண்ணீர் கொண்டுவந்த இந்த மனிதர்களின் இரத்தத்தை நான் குடிப்பேனோ?” என்றான். இவர்கள் தங்கள் உயிருக்கு வர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அதைக் கொண்டுவந்ததால் தாவீது அதைக் குடிக்கவில்லை. இத்தகைய துணிகரமான செயல்களை இந்த மூன்று வலிமைமிக்க மனிதர்களும் செய்தார்கள்.

  4. 1 நாளாகமம் 11:20சுமார் கி.மு. 1055

    யோவாபின் சகோதரன் அபிசாய் இந்த மூன்றுபேருக்கு தலைவனாயிருந்தான். இவன் தன் ஈட்டியை உயர்த்தி முந்நூறுபேரைக் கொன்றதினால், அந்த மூன்றுபேரைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான்.

  5. 1 நாளாகமம் 11:21சுமார் கி.மு. 1055

    அவன் அந்த மூன்று பேருக்கும் மேலாக இரண்டு மடங்கு கனப்படுத்தப்பட்டு, அவர்களோடு சேர்க்கப்படாதபோதும், அவர்களுக்குத் தளபதியானான்.

  6. 1 நாளாகமம் 11:22சுமார் கி.மு. 1055

    கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான்.

  7. 1 நாளாகமம் 11:23சுமார் கி.மு. 1055

    அதோடு ஏழரை அடி உயரமான ஒரு எகிப்தியனையும் வெட்டிக்கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளனின் கோலைப்போலுள்ள ஈட்டியைக் கையில் பிடித்திருந்தான். ஆனால் பெனாயாவோ கையில் ஒரு கம்புடன் அவனுக்கெதிராகச் சென்று, அவனுடைய கையில் இருந்த ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான்.

  8. 1 நாளாகமம் 11:24சுமார் கி.மு. 1055

    இவ்விதமான வீரச்செயலை யோய்தாவின் மகன் பெனாயா செய்ததினால் அவன் அந்த மூன்று மாவீரர்களைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான்.

  9. 1 நாளாகமம் 11:25சுமார் கி.மு. 1055

    இவன் அந்த முப்பது பேரிலும் மேன்மையுள்ளவனாக எண்ணப்பட்டான். ஆயினும் முன்கூறிய அந்த மூவருள் ஒருவனாகவில்லை. தாவீது அவனைத் தனது மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.

  10. 1 நாளாகமம் 11:26சுமார் கி.மு. 1055

    படையின் மற்ற மாவீரர்கள்: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

  11. 1 நாளாகமம் 11:27சுமார் கி.மு. 1055

    ஆரோதியனான சம்மோத், பெலோனியனான ஏலேஸ்,

  12. 1 நாளாகமம் 11:28சுமார் கி.மு. 1055

    தெக்கோவாவைச் சேர்ந்த இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,

  13. 1 நாளாகமம் 11:29சுமார் கி.மு. 1055

    ஊஷாத்தியனான சிபெக்காய், அகோகியனான ஈலாய்,

  14. 1 நாளாகமம் 11:30சுமார் கி.மு. 1055

    நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,

  15. 1 நாளாகமம் 11:31சுமார் கி.மு. 1055

    பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனான பெனாயா,

  16. 1 நாளாகமம் 11:32சுமார் கி.மு. 1055

    காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,

  17. 1 நாளாகமம் 11:33சுமார் கி.மு. 1055

    பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,

  18. 1 நாளாகமம் 11:34சுமார் கி.மு. 1055

    கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனான சாகியின் மகன் யோனத்தான்,

  19. 1 நாளாகமம் 11:35சுமார் கி.மு. 1055

    ஆராரியனான சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால்,

  20. 1 நாளாகமம் 11:36சுமார் கி.மு. 1055

    மெகராத்தியனான ஏப்பேர், பெலோனியனான அகியா,

  21. 1 நாளாகமம் 11:37சுமார் கி.மு. 1055

    கர்மேலியனான ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி,

  22. 1 நாளாகமம் 11:38சுமார் கி.மு. 1055

    நாத்தானின் சகோதரன் யோயேல், அகரியின் மகன் மிப்கார்.

  23. 1 நாளாகமம் 11:39சுமார் கி.மு. 1055

    அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,

  24. 1 நாளாகமம் 11:40சுமார் கி.மு. 1055

    இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப்,

  25. 1 நாளாகமம் 11:41சுமார் கி.மு. 1055

    ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,