- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1010–970 BC
The Reign of David
David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.
- 1 நாளாகமம் 10:1சுமார் கி.மு. 1056
பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினர். அநேகர் கில்போவா மலையில் வெட்டப்பட்டு விழுந்தனர்.
- 1 நாளாகமம் 10:2சுமார் கி.மு. 1056
பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று அவர்களில் யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள்.
- 1 நாளாகமம் 10:3சுமார் கி.மு. 1056
சவுலைச் சுற்றிலும் யுத்தம் தீவிரமடைந்தது. வில்வீரர்கள் நெருங்கிவந்து அவனைக் காயப்படுத்தினர்.
- 1 நாளாகமம் 10:4சுமார் கி.மு. 1056
அப்பொழுது சவுல் தனது யுத்த ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு உனது வாளினால் என்னை உருவக்குத்து” என்றான். ஆனால் அவனுடைய யுத்த ஆயுதங்களைச் சுமப்பவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. எனவே சவுல் தன் சொந்த வாளை எடுத்து அதன்மேல் விழுந்தான்.
- 1 நாளாகமம் 10:5சுமார் கி.மு. 1056
யுத்த ஆயுதம் சுமப்பவன் சவுல் இறந்ததைக் கண்டதும் தானும் தனது வாள்மேல் விழுந்து இறந்தான்.
- 1 நாளாகமம் 10:6சுமார் கி.மு. 1056
இவ்வாறு சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் இறந்தனர்; அவனுடைய முழுக் குடும்பமும் ஒருமித்து அழிந்துபோயிற்று.
- 1 நாளாகமம் 10:7சுமார் கி.மு. 1056
பள்ளத்தாக்கிலே இருந்த இஸ்ரயேல் மக்கள் போர்வீரர் ஓடிப்போவதையும், சவுலும் அவன் மகன்களும் இறந்துபோனதையும் கண்டபோது, அவர்களும் தாங்கள் இருந்த பட்டணங்களைவிட்டு தப்பியோடினர். உடனே பெலிஸ்தியர் அங்கே வந்து குடியேறினர்.
- 1 நாளாகமம் 10:8சுமார் கி.மு. 1056
மறுநாள் இறந்தவர்களின் உடைமைகளை எடுத்துக்கொள்ள பெலிஸ்தியர் வந்தபோது, சவுலும் அவனுடைய மகன்களும் கில்போவா மலையில் இறந்துகிடக்கக் கண்டார்கள்.
- 1 நாளாகமம் 10:9சுமார் கி.மு. 1056
எனவே அவர்கள் அவனுடைய உடையைக் கழற்றி, தலையை வெட்டி அவனுடைய யுத்த கவசங்களையும் எடுத்துக்கொண்டார்கள். பின்பு அச்செய்தியை தங்கள் தெய்வங்களுக்கும் தங்கள் மக்களுக்கும் அறிவிக்கும்படி, தூதுவர்களை பெலிஸ்திய நாடு எங்கும் அனுப்பினார்கள்.
- 1 நாளாகமம் 10:10சுமார் கி.மு. 1056
அவர்கள் அவனுடைய ஆயுதங்களை தங்கள் தெய்வங்களின் கோவிலில் வைத்தனர். அவனுடைய தலையையோ தாகோனின் கோவிலில் கட்டித் தொங்கவிட்டனர்.
- 1 நாளாகமம் 10:11சுமார் கி.மு. 1056
பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையும் கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டண மக்கள் கேள்விப்பட்டார்கள்.
- 1 நாளாகமம் 10:12சுமார் கி.மு. 1056
அப்பொழுது அவர்களின் வலிமைவாய்ந்த மனிதர்கள் சென்று, சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் யாபேசுக்குக் கொண்டுவந்தார்கள். அங்கே யாபேசிலுள்ள ஒரு கர்வாலி மரத்தின் கீழே எலும்புகளை அடக்கம்பண்ணி ஏழு நாட்கள் உபவாசம் இருந்தார்கள்.
- 1 நாளாகமம் 10:13சுமார் கி.மு. 1056
சவுல் யெகோவாவுக்கு முன்பாக உண்மையற்றவனாகக் காணப்பட்டதால் இறந்தான்; அதோடு அவன் யெகோவாவினுடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் குறிபார்ப்பவர்களிடத்திலும் ஆலோசனை பெற்றான்.
- 1 நாளாகமம் 10:14சுமார் கி.மு. 1056
அவன் யெகோவாவிடம் விசாரிக்கவில்லை. எனவே யெகோவா அவனைக் கொன்று, அரசாட்சியை ஈசாயின் மகனான தாவீதிற்குக் கொடுத்தார்.
- 1 நாளாகமம் 11:1சுமார் கி.மு. 1048
இஸ்ரயேலர் யாவரும் ஒன்றுகூடி, எப்ரோனில் இருந்த தாவீதினிடத்திற்கு வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம்.
- 1 நாளாகமம் 11:2சுமார் கி.மு. 1048
கடந்த நாட்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், இஸ்ரயேலர்களைப் போரில் வழிநடத்தியவர் நீரே. உமது இறைவனாகிய யெகோவா உம்மிடம், ‘நீ எனது மக்களாகிய இஸ்ரயேலரை மேய்த்து, அவர்களுடைய ஆளுநனாகவும் இருப்பாய்’ என்று சொன்னாரே” என்றார்கள்.
- 1 நாளாகமம் 11:3சுமார் கி.மு. 1048
இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் தாவீது அரசனிடம் எப்ரோனுக்கு வந்தபோது, தாவீது யெகோவா முன்னிலையில் எப்ரோனில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். சாமுயேலுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குப்படியே அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள்.
- 1 நாளாகமம் 11:4சுமார் கி.மு. 1048
தாவீதும் இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் எபூசு எனப்பட்ட எருசலேமுக்கு அணிவகுத்துப் போனார்கள்.
- 1 நாளாகமம் 11:5சுமார் கி.மு. 1048
அங்கு வாழ்ந்த எபூசியர் தாவீதிடம், “நீ இதற்குள் நுழையமாட்டாய்” எனச் சொன்னார்கள். ஆயினும், தாவீது சீயோனின் கோட்டையைக் கைப்பற்றினான். அதுவே தாவீதின் நகரம் எனப்பட்டது.
- 1 நாளாகமம் 11:6சுமார் கி.மு. 1048
எபூசியரை முதலில் தாக்குகிறவன் எவனோ அவனே பிரதம படைத்தளபதியாய் இருப்பான் என தாவீது சொல்லியிருந்தான். செருயாவின் மகன் யோவாப் முதலில் போனதால் அவனே படைத்தளபதி ஆனான்.
- 1 நாளாகமம் 11:7சுமார் கி.மு. 1048
பின்பு தாவீது அந்த கோட்டையில் குடியமர்ந்தான். ஆகையால் அது தாவீதின் நகரம் என அழைக்கப்பட்டது.
- 1 நாளாகமம் 11:8சுமார் கி.மு. 1048
அவன் அந்த கோட்டையைச் சுற்றி மில்லோவிலிருந்து சுற்றியிருக்கும் மதில்வரை நகரத்தைக் கட்டினான். யோவாப் மிகுதியான நகரத்தைப் புதுப்பித்துக் கட்டினான்.
- 1 நாளாகமம் 11:9சுமார் கி.மு. 1048
சேனைகளின் யெகோவா தாவீதுடன் இருந்ததால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.
- 1 நாளாகமம் 11:10சுமார் கி.மு. 1055
எல்லா இஸ்ரயேல் மக்களோடும் சேர்ந்து தாவீதுடன் இருந்த வலிமைமிக்க தலைவர்கள் இவர்களே. இவர்கள் இஸ்ரயேலைக் குறித்து யெகோவா கொடுத்த வாக்குத்தத்தத்திற்கு ஏற்றபடி, தாவீதின் அரசை விரிவடையச் செய்தார்கள்.
- 1 நாளாகமம் 11:11சுமார் கி.மு. 1055
தாவீதின் வலிமைமிக்க மனிதர்களின் பட்டியல் இதுவே: அக்மோனியனான யாஷோபியாம் அதிகாரிகளுக்குத் தலைவனாயிருந்தான்; இவனே தனக்கு எதிர்பட்ட முந்நூறுபேரை ஒரே நேரத்தில் தன் ஈட்டியால் கொன்றான்.