உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 31:41சுமார் கி.மு. 1452

    யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் பங்காக இதை ஆசாரியன் எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.

  2. எண்ணாகமம் 31:42சுமார் கி.மு. 1452

    யுத்தம் செய்த மனிதர்களின் அரைப்பங்குபோக இஸ்ரயேலருக்கு மோசே பிரித்துக்கொடுத்த

  3. எண்ணாகமம் 31:43சுமார் கி.மு. 1452

    மற்ற அரைப்பங்கில் உள்ளவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்,

  4. எண்ணாகமம் 31:44சுமார் கி.மு. 1452

    36,000 மாடுகள்,

  5. எண்ணாகமம் 31:45சுமார் கி.மு. 1452

    30,500 கழுதைகள்,

  6. எண்ணாகமம் 31:46சுமார் கி.மு. 1452

    16,000 மக்களுமே.

  7. எண்ணாகமம் 31:47சுமார் கி.மு. 1452

    மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலரின் அரைப்பங்கில் ஒவ்வொரு ஐம்பது மிருகங்களிலிருந்து ஒன்றையும், ஆட்களிலிருந்து ஒருவரையும் இறைசமுகக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்த லேவியருக்குக் கொடுத்தான்.

  8. எண்ணாகமம் 31:48சுமார் கி.மு. 1452

    அப்பொழுது ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளுமாயிருந்த இராணுவ அதிகாரிகள் மோசேயினிடத்திற்கு வந்தார்கள்.

  9. எண்ணாகமம் 31:49சுமார் கி.மு. 1452

    அவர்கள் மோசேயிடம், “எங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட போர்வீரர்களை உமது பணியாட்களான நாங்கள் கணக்கிட்டோம். ஒருவருமே தவறிப்போகவில்லை.

  10. எண்ணாகமம் 31:50சுமார் கி.மு. 1452

    ஆகையால், எங்களில் ஒவ்வொருவனும் கைப்பற்றிய தங்கநகைகளான காப்புகள், கைவளையல்கள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், அட்டியல்கள் ஆகியவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்காக யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யும்படி இவற்றைக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார்கள்.

  11. எண்ணாகமம் 31:51சுமார் கி.மு. 1452

    மோசேயும் ஆசாரியன் எலெயாசாரும் அவர்கள் கொண்டுவந்த தங்கத்தையும் நகைகளாகச் செய்யப்பட்டிருந்தவைகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.

  12. எண்ணாகமம் 31:52சுமார் கி.மு. 1452

    ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.

  13. எண்ணாகமம் 31:53சுமார் கி.மு. 1452

    ஒவ்வொரு இராணுவவீரனும் தனக்கென்றும் கொள்ளைப்பொருட்களை எடுத்திருந்தான்.

  14. எண்ணாகமம் 31:54சுமார் கி.மு. 1452

    மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் ஆயிரம்பேரின் தளபதிகளிடமும், நூறுபேரின் தளபதிகளிடமும் இருந்து தங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதை யெகோவாவுக்கு முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவந்தார்கள்.

  15. எண்ணாகமம் 32:1சுமார் கி.மு. 1452

    ரூபனியருக்கும், காத்தியருக்கும் திரளான மாட்டு மந்தைகளும், ஆட்டு மந்தைகளும் இருந்தன. யாசேர் நாடும், கீலேயாத் நாடும் தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானது என அவர்கள் கண்டார்கள்.

  16. எண்ணாகமம் 32:2சுமார் கி.மு. 1452

    எனவே அவர்கள் மோசேயிடமும், ஆசாரியன் எலெயாசாரிடமும், மக்கள் சமுதாயத் தலைவர்களிடமும் வந்து,

  17. எண்ணாகமம் 32:3சுமார் கி.மு. 1452

    “அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலே, சேபாம், நேபோ, பெயோன்

  18. எண்ணாகமம் 32:4சுமார் கி.மு. 1452

    ஆகிய நாடுகளை யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினார். அந்த நாடுகள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானவை. உங்கள் அடியாரான எங்களிடம் வளர்ப்பு மிருகங்கள் இருக்கின்றன.

  19. எண்ணாகமம் 32:5சுமார் கி.மு. 1452

    உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியாரான எங்களுக்கு உரிமைச்சொத்தாக இந்த நாடே கொடுக்கப்படட்டும். எங்களை யோர்தானைக் கடக்கச்செய்யவேண்டாம்” என்றார்கள்.

  20. எண்ணாகமம் 32:6சுமார் கி.மு. 1452

    மோசே காத்தியரிடமும், ரூபனியரிடமும், “நீங்கள் இங்கே இருக்க உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போவார்களோ?

  21. எண்ணாகமம் 32:7சுமார் கி.மு. 1452

    யெகோவா இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கும் நாட்டிற்கு அவர்களைப் போகவிடாமல் நீங்கள் ஏன் அவர்களை திடனற்றுப்போகச்செய்கிறீர்கள்?

  22. எண்ணாகமம் 32:8சுமார் கி.மு. 1452

    நான் காதேஸ் பர்னேயாவிலிருந்து உங்கள் முற்பிதாக்களை அந்த நாட்டைப் பார்த்துவரும்படி அனுப்பியபோது, அவர்களும் இப்படியே செய்தார்கள்.

  23. எண்ணாகமம் 32:9சுமார் கி.மு. 1452

    அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்குப் போய் நாட்டைப் பார்த்த பின்னர் யெகோவா இஸ்ரயேலருக்குக் கொடுத்த அந்த நாட்டிற்குள் அவர்களைப் போகவிடாமல் திடனற்றுப்போகச்செய்தார்கள்.

  24. எண்ணாகமம் 32:10சுமார் கி.மு. 1452

    அதனால் அந்நாளில் யெகோவாவுக்குக் கோபம்மூண்டு, அவர் ஆணையிட்டுச் சொன்னதாவது,

  25. எண்ணாகமம் 32:11சுமார் கி.மு. 1452

    ‘அவர்கள் என்னை முழு இருதயத்தோடு பின்பற்றவில்லை. ஆகையால், நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக்கொடுத்த அந்நாட்டை எகிப்திலிருந்து வெளியேவந்த இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையுமுடைய மனிதர்களில் ஒருவருமே காணமாட்டார்கள்.