உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 1:1சுமார் கி.மு. 1490

    இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது:

  2. எண்ணாகமம் 1:2சுமார் கி.மு. 1490

    “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.

  3. எண்ணாகமம் 1:3சுமார் கி.மு. 1490

    நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.

  4. எண்ணாகமம் 1:4சுமார் கி.மு. 1490

    இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.

  5. எண்ணாகமம் 1:5சுமார் கி.மு. 1490

    “உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;

  6. எண்ணாகமம் 1:6சுமார் கி.மு. 1490

    சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,

  7. எண்ணாகமம் 1:7சுமார் கி.மு. 1490

    யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,

  8. எண்ணாகமம் 1:8சுமார் கி.மு. 1490

    இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,

  9. எண்ணாகமம் 1:9சுமார் கி.மு. 1490

    செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,

  10. எண்ணாகமம் 1:10சுமார் கி.மு. 1490

    யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,

  11. எண்ணாகமம் 1:11சுமார் கி.மு. 1490

    பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான்,

  12. எண்ணாகமம் 1:12சுமார் கி.மு. 1490

    தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,

  13. எண்ணாகமம் 1:13சுமார் கி.மு. 1490

    ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்,

  14. எண்ணாகமம் 1:14சுமார் கி.மு. 1490

    காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,

  15. எண்ணாகமம் 1:15சுமார் கி.மு. 1490

    நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.”

  16. எண்ணாகமம் 1:16சுமார் கி.மு. 1490

    தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் இவர்களே.

  17. எண்ணாகமம் 1:17சுமார் கி.மு. 1490

    மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள்.

  18. எண்ணாகமம் 1:18சுமார் கி.மு. 1490

    இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  19. எண்ணாகமம் 1:19சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான்.

  20. எண்ணாகமம் 1:20சுமார் கி.மு. 1490

    இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  21. எண்ணாகமம் 1:21சுமார் கி.மு. 1490

    ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர்.

  22. எண்ணாகமம் 1:22சுமார் கி.மு. 1490

    சிமியோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  23. எண்ணாகமம் 1:23சுமார் கி.மு. 1490

    சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர்.

  24. எண்ணாகமம் 1:24சுமார் கி.மு. 1490

    காத்தின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  25. எண்ணாகமம் 1:25சுமார் கி.மு. 1490

    காத் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 45,650 பேர்.