உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 1:26சுமார் கி.மு. 1490

    யூதாவின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  2. எண்ணாகமம் 1:27சுமார் கி.மு. 1490

    யூதாவின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 74,600 பேர்.

  3. எண்ணாகமம் 1:28சுமார் கி.மு. 1490

    இசக்கார் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  4. எண்ணாகமம் 1:29சுமார் கி.மு. 1490

    இசக்காரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 54,400 பேர்.

  5. எண்ணாகமம் 1:30சுமார் கி.மு. 1490

    செபுலோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  6. எண்ணாகமம் 1:31சுமார் கி.மு. 1490

    செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர்.

  7. எண்ணாகமம் 1:32சுமார் கி.மு. 1490

    யோசேப்பின் மகனான எப்பிராயீமின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  8. எண்ணாகமம் 1:33சுமார் கி.மு. 1490

    எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 40,500 பேர்.

  9. எண்ணாகமம் 1:34சுமார் கி.மு. 1490

    யோசேப்பின் மகனான மனாசேயின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  10. எண்ணாகமம் 1:35சுமார் கி.மு. 1490

    மனாசேயின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 32,200 பேர்.

  11. எண்ணாகமம் 1:36சுமார் கி.மு. 1490

    பென்யமீனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  12. எண்ணாகமம் 1:37சுமார் கி.மு. 1490

    பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர்.

  13. எண்ணாகமம் 1:38சுமார் கி.மு. 1490

    தாணின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  14. எண்ணாகமம் 1:39சுமார் கி.மு. 1490

    தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர்.

  15. எண்ணாகமம் 1:40சுமார் கி.மு. 1490

    ஆசேரின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும், உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  16. எண்ணாகமம் 1:41சுமார் கி.மு. 1490

    ஆசேரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 41,500 பேர்.

  17. எண்ணாகமம் 1:42சுமார் கி.மு. 1490

    நப்தலியின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.

  18. எண்ணாகமம் 1:43சுமார் கி.மு. 1490

    நப்தலியின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 53,400 பேர்.

  19. எண்ணாகமம் 1:44சுமார் கி.மு. 1490

    மோசேயினாலும், ஆரோனாலும், தன்தன் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இஸ்ரயேலரின் பன்னிரண்டு தலைவர்களினாலும் எண்ணப்பட்ட மனிதர்கள் இவர்களே.

  20. எண்ணாகமம் 1:45சுமார் கி.மு. 1490

    இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிசெய்யக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய இஸ்ரயேலர் எல்லோரும் அவர்களுடைய குடும்பங்களின்படியே எண்ணப்பட்டார்கள்.

  21. எண்ணாகமம் 1:46சுமார் கி.மு. 1490

    மொத்த எண்ணிக்கை 6,03,550 பேர்.

  22. எண்ணாகமம் 1:47சுமார் கி.மு. 1490

    ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை.

  23. எண்ணாகமம் 1:48சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்ததாவது:

  24. எண்ணாகமம் 1:49சுமார் கி.மு. 1490

    “நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம்.

  25. எண்ணாகமம் 1:50சுமார் கி.மு. 1490

    ஆனால் நீ லேவியரை சாட்சிபகரும் இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் எல்லா பணிப்பொருட்களுக்கும், அதற்குரிய எல்லாவற்றிற்கும்மேல் பொறுப்பாக நியமிக்கவேண்டும். இறைசமுகக் கூடாரத்தையும், அதன் பணிமுட்டுகளையும் அவர்களே சுமக்கவேண்டும். அவர்களே அதைப் பராமரித்து, அதைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.