உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 1:51சுமார் கி.மு. 1490

    எப்பொழுதாவது இறைசமுகக் கூடாரத்தை நகர்த்தவேண்டுமானால், லேவியரே அதைக் கழற்றவேண்டும். இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டுமென்றாலும் அதை லேவியரே செய்யவேண்டும். அதற்கு அருகில் செல்லும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்.

  2. எண்ணாகமம் 1:52சுமார் கி.மு. 1490

    இஸ்ரயேலர் தங்கள் பிரிவுகளின்படியே கூடாரங்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்தக் கூடாரத்தில் தன் சொந்தக் கொடியின்கீழ் இருக்கவேண்டும்.

  3. எண்ணாகமம் 1:53சுமார் கி.மு. 1490

    ஆனாலும், இஸ்ரயேல் சமுதாயத்தின்மேல் கோபம் வராதபடிக்கு லேவியர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றி தங்கள் முகாமிடவேண்டும். உடன்படிக்கைக் கூடாரத்தின் பராமரிப்புக்கு லேவியரே பொறுப்பாயிருக்க வேண்டும்.”

  4. எண்ணாகமம் 1:54சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் இவற்றையெல்லாம் செய்தார்கள்.

  5. எண்ணாகமம் 2:1சுமார் கி.மு. 1490

    யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:

  6. எண்ணாகமம் 2:2சுமார் கி.மு. 1490

    “இஸ்ரயேலர் சபைக் கூடாரத்தைச் சுற்றி சற்றுத் தொலைவில் தங்கள் முகாம்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன்தன் சின்னத்தின்கீழ் குடும்பத்தின் கொடியுடன் இருக்கவேண்டும்.”

  7. எண்ணாகமம் 2:3சுமார் கி.மு. 1490

    சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன்.

  8. எண்ணாகமம் 2:4சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 74,600 பேர்.

  9. எண்ணாகமம் 2:5சுமார் கி.மு. 1490

    இசக்காரின் கோத்திரத்தார் அவர்களுக்கு அருகில் முகாமிடவேண்டும். சூவாரின் மகன் நெதனெயேல், இசக்கார் மக்களுக்குத் தலைவன்.

  10. எண்ணாகமம் 2:6சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர்.

  11. எண்ணாகமம் 2:7சுமார் கி.மு. 1490

    செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன்.

  12. எண்ணாகமம் 2:8சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 57,400 பேர்.

  13. எண்ணாகமம் 2:9சுமார் கி.மு. 1490

    யூதாவின் பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,86,400 பேர். அவர்களே முதலில் புறப்படுவார்கள்.

  14. எண்ணாகமம் 2:10சுமார் கி.மு. 1490

    தென்புறத்தில் ரூபனின் முகாம் பிரிவுகள், தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். சேதேயூரின் மகன் எலிசூர், ரூபன் மக்களுக்குத் தலைவன்.

  15. எண்ணாகமம் 2:11சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 46,500 பேர்.

  16. எண்ணாகமம் 2:12சுமார் கி.மு. 1490

    சிமியோன் கோத்திரம் அவர்களை அடுத்து முகாமிடவேண்டும். சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் மக்களுக்குத் தலைவன்.

  17. எண்ணாகமம் 2:13சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர்.

  18. எண்ணாகமம் 2:14சுமார் கி.மு. 1490

    காத் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். தேகுயேலின் மகன் எலியாசாப், காத் மக்களுக்குத் தலைவன்.

  19. எண்ணாகமம் 2:15சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர்.

  20. எண்ணாகமம் 2:16சுமார் கி.மு. 1490

    ரூபனுடைய பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,51,450 பேர். அவர்கள் இரண்டாவதாகப் புறப்படுவார்கள்.

  21. எண்ணாகமம் 2:17சுமார் கி.மு. 1490

    சபைக் கூடாரமும், லேவியரின் முகாமும் மற்ற முகாம்களுக்கு நடுவிலிருந்து புறப்படும். அவர்கள் தாம் முகாமிட்ட அதே ஒழுங்கின்படி ஒவ்வொருவரும் தன்தன் சின்னத்தின் கீழாகப் போவார்கள்.

  22. எண்ணாகமம் 2:18சுமார் கி.மு. 1490

    மேற்குப் பக்கத்தில் எப்பிராயீமின் முகாமின் பிரிவுகள், தங்கள் கொடியின்கீழ் இருக்கும். அம்மியூதின் மகன் எலிஷாமா, எப்பிராயீம் மக்களுக்குத் தலைவன்.

  23. எண்ணாகமம் 2:19சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர்.

  24. எண்ணாகமம் 2:20சுமார் கி.மு. 1490

    மனாசே கோத்திரம் அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும். பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே மக்களுக்குத் தலைவன்.

  25. எண்ணாகமம் 2:21சுமார் கி.மு. 1490

    அவனுடைய பிரிவின் தொகை 32,200 பேர்.