உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 3:13சுமார் கி.மு. 1490

    ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.

  2. எண்ணாகமம் 3:14சுமார் கி.மு. 1490

    சீனாய் பாலைவனத்தில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  3. எண்ணாகமம் 3:15சுமார் கி.மு. 1490

    “நீ லேவியரைக் குடும்பங்களாகவும், வம்சங்களாகவும் கணக்கிடு. ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஒவ்வொரு ஆணையும் கணக்கிடு” என்றார்.

  4. எண்ணாகமம் 3:16சுமார் கி.மு. 1490

    யெகோவாவின் வார்த்தையினால் கட்டளையிடப்பட்டபடியே மோசே அவர்களைக் கணக்கிட்டான்.

  5. எண்ணாகமம் 3:17சுமார் கி.மு. 1490

    லேவியின் மகன்களின் பெயர்களாவன: கெர்சோன், கோகாத், மெராரி,

  6. எண்ணாகமம் 3:18சுமார் கி.மு. 1490

    கெர்சோன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள் ஆவர்.

  7. எண்ணாகமம் 3:19சுமார் கி.மு. 1490

    கோகாத் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள் ஆவர்.

  8. எண்ணாகமம் 3:20சுமார் கி.மு. 1490

    மெராரி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். தங்களுடைய குடும்பங்களின்படி லேவிய வம்சத்தினர் இவர்களே.

  9. எண்ணாகமம் 3:21சுமார் கி.மு. 1490

    லிப்னீ வம்சமும், சீமேயி வம்சமும் கெர்சோனுக்கு உரியவர்கள். இவர்கள் கெர்சோனிய வம்சத்தினர்.

  10. எண்ணாகமம் 3:22சுமார் கி.மு. 1490

    ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எண்ணப்பட்ட ஆண்களின் தொகை 7,500 பேர்கள்.

  11. எண்ணாகமம் 3:23சுமார் கி.மு. 1490

    கெர்சோனிய வம்சங்கள் இறைசமுகக் கூடாரத்திற்குப் பின்னே மேற்குப் பக்கத்தில் முகாமிட வேண்டியதாயிருந்தது.

  12. எண்ணாகமம் 3:24சுமார் கி.மு. 1490

    லாயேலின் மகன் எலியாசாப் கெர்சோனிய குடும்பங்களின் தலைவனாய் இருந்தான்.

  13. எண்ணாகமம் 3:25சுமார் கி.மு. 1490

    சபைக் கூடாரத்தில், இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் கூடாரத்திற்கும், அதன் மூடு திரைகளுக்கும், சபைக்கூடார வாசல் திரைக்கும் கெர்சோனியரே பொறுப்பாயிருந்தார்கள்.

  14. எண்ணாகமம் 3:26சுமார் கி.மு. 1490

    முற்றத்தின் திரைகளுக்கும், இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்த முற்றத்தின் வாசல் திரைகளுக்கும், கயிறுகளுக்கும், அதன் பயன்பாட்டோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பாயிருந்தார்கள்.

  15. எண்ணாகமம் 3:27சுமார் கி.மு. 1490

    அம்ராமிய வம்சமும், இத்சேயார் வம்சமும், எப்ரோனின் வம்சமும், ஊசியேலின் வம்சமும் கோகாத்திற்கு உரியவர்கள். இவர்கள் கோகாத்திய வம்சத்தினர் ஆவர்.

  16. எண்ணாகமம் 3:28சுமார் கி.மு. 1490

    ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஆண்களின் தொகை 8,600 பேர்கள். பரிசுத்த இடத்தின் பராமரிப்புக்கு கோகாத்தியர் பொறுப்பாயிருந்தார்கள்.

  17. எண்ணாகமம் 3:29சுமார் கி.மு. 1490

    இறைசமுகக் கூடாரத்திற்குத் தெற்கு பக்கத்தில், கோகாத்திய வம்சங்கள் முகாமிட வேண்டியதாயிருந்தது.

  18. எண்ணாகமம் 3:30சுமார் கி.மு. 1490

    ஊசியேலின் மகன் எலிசாபான், கோகாத்திய வம்சங்களின் தலைவனாய் இருந்தான்.

  19. எண்ணாகமம் 3:31சுமார் கி.மு. 1490

    சாட்சிப்பெட்டி, மேஜை, விளக்குத்தாங்கி, பலிபீடங்கள், குருத்துவப் பணிக்கு பரிசுத்த இடத்தில் பயன்படுத்தும் பொருட்கள், திரை மற்றும் அவற்றின் பயன்பாட்டிற்குச் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பாயிருந்தார்கள்.

  20. எண்ணாகமம் 3:32சுமார் கி.மு. 1490

    ஆசாரியனான ஆரோனின் மகன் எலெயாசார் லேவியரின் பிரதான தலைவனாக இருந்தான். பரிசுத்த இடத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்தவர்களுக்கு மேற்பார்வை செய்ய அவன் நியமிக்கப்பட்டான்.

  21. எண்ணாகமம் 3:33சுமார் கி.மு. 1490

    மகேலிய வம்சமும், மூசிய வம்சமும் மெராரிக்கு உரியவர்கள். மெராரி வம்சத்தினர் இவர்களே.

  22. எண்ணாகமம் 3:34சுமார் கி.மு. 1490

    ஒரு மாதமும் அதற்கு மேற்பட்டதுமான கணக்கிடப்பட்ட எல்லா ஆண்களின் தொகை 6,200 பேர்கள்.

  23. எண்ணாகமம் 3:35சுமார் கி.மு. 1490

    அபியாயேலின் மகன் சூரியேல், மெராரி வம்சங்களின் குடும்பங்களுக்குத் தலைவனாயிருந்தான். இறைசமுகக் கூடாரத்தின் வடபகுதியில் அவர்கள் முகாமிட வேண்டியிருந்தது.

  24. எண்ணாகமம் 3:36சுமார் கி.மு. 1490

    இறைசமுகக் கூடாரத்தின் சட்டப்பலகைகள், குறுக்குச் சட்டங்கள், கம்பங்கள், அடித்தளங்கள், அதற்குரிய எல்லா உபகரணங்களும், அதன் பயன்பாட்டோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றின் பராமரிப்புக்காக மெராரியர் நியமிக்கப்பட்டார்கள்.

  25. எண்ணாகமம் 3:37சுமார் கி.மு. 1490

    அதேபோல், அதைச் சுற்றியிருந்த முற்றத்தின் கம்பங்கள், அடித்தளங்கள், கூடார முளைகள், கயிறுகள் ஆகியவற்றின் பராமரிப்புக்காகவும் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.