Skip to content

Sinai

17 verses

28.5300, 33.9700 கூகுள் வரைபடத்தில் காண்க

Sinai பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அதன் பின்னர் முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஏலிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய இரண்டாம் மாதம் பதினைந்தாம்நாள் ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் பாலைவனத்தை வந்தடைந்தார்கள்.

  2. இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வெளியேறிய மூன்றாம் மாதம் முடிந்த அதே நாளில், அவர்கள் சீனாய் பாலைவனத்தை வந்தடைந்தார்கள்.

  3. ரெவிதீமைவிட்டுப் புறப்பட்டபின் அவர்கள் சீனாய் பாலைவனத்துக்குள் வந்தார்கள். இஸ்ரயேலர் மலைக்கு முன்பாக உள்ள அந்த பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.

  4. இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொண்டுவர வேண்டுமென, யெகோவா சீனாய் பாலைவனத்தில் கட்டளையிட்ட நாளிலே, அவர் சீனாய் மலையில் இந்த ஒழுங்குமுறைகளை மோசேக்குக் கொடுத்தார்.

  5. இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது:

  6. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான்.

  7. ஆனால் நாதாபும், அபியூவும் சீனாய் பாலைவனத்தில் யெகோவாவுக்கு முன்பாக அங்கீகரிக்கப்படாத நெருப்பினால், காணிக்கையைச் செலுத்தியபோது, அவருக்கு முன்னால் செத்து விழுந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. அதனால் எலெயாசாரும், இத்தாமாரும் மட்டுமே தங்கள் தந்தையான ஆரோனின் வாழ்நாட்களில் ஆசாரியர்களாகப் பணிசெய்து வந்தார்கள்.

  8. சீனாய் பாலைவனத்தில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  9. இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதத்தில், யெகோவா சீனாய் பாலைவனத்தில் மோசேயுடன் பேசினார். அவர் அவனிடம்,

  10. அவ்வாறே அவர்கள், முதலாம் மாதம் பதினாலாம்தேதி பொழுதுபடும் நேரத்தில், சீனாய் பாலைவனத்தில் பஸ்காவைக் கொண்டாடினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள்.

  11. அப்பொழுது இஸ்ரயேலர் சீனாய் பாலைவனத்தை விட்டுப் புறப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணம்பண்ணி, அந்த மேகம் பாரான் பாலைவனத்தில் தங்கும்வரை போய்க்கொண்டிருந்தார்கள்.

  12. ஆனால் முன்பு மோசேயினாலும், ஆசாரியன் ஆரோனாலும் சீனாய் வனாந்திரத்தில் கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்களில் ஒருவனும் இவர்கள் மத்தியில் இருக்கவில்லை.

  13. ரெவிதீமிலிருந்து புறப்பட்டு, சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.

  14. சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள்.

  15. அவன் சொல்லியதாவது: “யெகோவா சீனாயிலிருந்து வந்து, சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார். பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார். ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும், மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார்.

  16. சீனாயின் யெகோவாவான யெகோவாவுக்குமுன், மலைகளும் அதிர்ந்தன. இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு முன்பாக அவை அதிர்ந்தன.

  17. இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன; யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார்.