- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
- எண்ணாகமம் 1:1சுமார் கி.மு. 1490
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது:
- எண்ணாகமம் 1:2சுமார் கி.மு. 1490
“நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.
- எண்ணாகமம் 1:3சுமார் கி.மு. 1490
நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.
- எண்ணாகமம் 1:4சுமார் கி.மு. 1490
இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.
- எண்ணாகமம் 1:5சுமார் கி.மு. 1490
“உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;
- எண்ணாகமம் 1:6சுமார் கி.மு. 1490
சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,
- எண்ணாகமம் 1:7சுமார் கி.மு. 1490
யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,
- எண்ணாகமம் 1:8சுமார் கி.மு. 1490
இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,
- எண்ணாகமம் 1:9சுமார் கி.மு. 1490
செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,
- எண்ணாகமம் 1:10சுமார் கி.மு. 1490
யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,
- எண்ணாகமம் 1:11சுமார் கி.மு. 1490
பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான்,
- எண்ணாகமம் 1:12சுமார் கி.மு. 1490
தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,
- எண்ணாகமம் 1:13சுமார் கி.மு. 1490
ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்,
- எண்ணாகமம் 1:14சுமார் கி.மு. 1490
காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,
- எண்ணாகமம் 1:15சுமார் கி.மு. 1490
நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.”
- எண்ணாகமம் 1:16சுமார் கி.மு. 1490
தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் இவர்களே.
- எண்ணாகமம் 1:17சுமார் கி.மு. 1490
மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள்.
- எண்ணாகமம் 1:18சுமார் கி.மு. 1490
இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
- எண்ணாகமம் 1:19சுமார் கி.மு. 1490
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான்.
- எண்ணாகமம் 1:20சுமார் கி.மு. 1490
இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
- எண்ணாகமம் 1:21சுமார் கி.மு. 1490
ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர்.
- எண்ணாகமம் 1:22சுமார் கி.மு. 1490
சிமியோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
- எண்ணாகமம் 1:23சுமார் கி.மு. 1490
சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர்.
- எண்ணாகமம் 1:24சுமார் கி.மு. 1490
காத்தின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
- எண்ணாகமம் 1:25சுமார் கி.மு. 1490
காத் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 45,650 பேர்.