உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எண்ணாகமம் 32:37சுமார் கி.மு. 1452

    ரூபனியர் எஸ்போன், எலெயாலே, கீரியாத்தாயீம் பட்டணங்களைத் திரும்பக்கட்டினார்கள்.

  2. எண்ணாகமம் 32:38சுமார் கி.மு. 1452

    நேபோ, பாகால் மெயோன் பட்டணங்களையும் கட்டினார்கள். அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டன. சிப்மா பட்டணத்தையும் கட்டினார்கள். அவர்கள் தாங்கள் திரும்பக்கட்டிய பட்டணங்களுக்கு வேறு பெயர்களை வைத்தார்கள்.

  3. எண்ணாகமம் 32:39சுமார் கி.மு. 1452

    மனாசேயின் மகனாகிய மாகீரின் சந்ததிகள் கீலேயாத்திற்குப்போய், அதைக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள்.

  4. எண்ணாகமம் 32:40சுமார் கி.மு. 1452

    எனவே மோசே, மனாசேயின் சந்ததியான மாகீரியருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தான். அவர்கள் அங்கே குடியேறினார்கள்.

  5. எண்ணாகமம் 32:41சுமார் கி.மு. 1452

    மனாசேயின் சந்ததியான யாவீர் என்பவன் கீலேயாத்தியர்களின் கிராமங்களைக் கைப்பற்றி, அவற்றிற்கு அவோத்யாவீர் எனப் பெயரிட்டான்.

  6. எண்ணாகமம் 32:42சுமார் கி.மு. 1452

    நோபாக் என்பவன் போய், கேனாத் பட்டணத்தையும் அதைச் சுற்றியுள்ள அதன் குடியிருப்புகளையும் கைப்பற்றி, அதற்கு நோபாக் என்னும் தன் பெயரிட்டான்.

  7. இஸ்ரயேலர், மோசே ஆரோன் என்பவர்களின் தலைமையின்கீழ் தங்கள் பிரிவுகளின்படியே எகிப்தைவிட்டு வெளியேறியபோது, அவர்கள் பயணத்தில் தரித்துநின்ற இடங்களாவன.

  8. யெகோவாவின் கட்டளைப்படியே, இஸ்ரயேலர் பயணித்த பயணங்களை, மோசே எழுதிவைத்தான். அவர்கள் பயணித்த பயணங்களின் விவரங்கள்:

  9. பஸ்காவுக்கு அடுத்தநாளான முதலாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் இஸ்ரயேலர் ராமசேஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டார்கள். எல்லா எகிப்தியர்களும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் துணிச்சலுடன் அணிவகுத்து வெளியே போனார்கள்.

  10. எகிப்தியர்களோ தங்களுக்குள்ளே யெகோவா சாகடித்த முதற்பேறானவர்களையெல்லாம் அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். ஏனெனில், யெகோவா அவர்களுடைய தெய்வங்களின்மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்திருந்தார்.

  11. இஸ்ரயேலர் ராமசேஸை விட்டுப் புறப்பட்டு, சுக்கோத்தில் முகாமிட்டார்கள்.

  12. சுக்கோத்திலிருந்து புறப்பட்டு, பாலைவனத்தின் ஓரமாயுள்ள ஏத்தாமில் முகாமிட்டார்கள்.

  13. ஏத்தாமிலிருந்து புறப்பட்டு, பாகால் செபோனுக்கு கிழக்கேயுள்ள பிகாஈரோத் பள்ளத்தாக்கிற்குத் திரும்பி, மிக்தோலுக்கு அருகே முகாமிட்டார்கள்.

  14. ஈரோத் பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு, கடலைக் கடந்து பாலைவனத்திற்குப் போய், ஏத்தாம் பாலைவனத்தில் மூன்றுநாள் பயணம்பண்ணி மாராவில் முகாமிட்டார்கள்.

  15. மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்கு வந்தார்கள். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன. அங்கே அவர்கள் முகாமிட்டார்கள்.

  16. ஏலிமிலிருந்து புறப்பட்டு, செங்கடலுக்கு அருகே முகாமிட்டார்கள்.

  17. செங்கடலில் இருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.

  18. சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, தொப்காவில் முகாமிட்டார்கள்.

  19. தொப்காவிலிருந்து புறப்பட்டு, ஆலூசில் முகாமிட்டார்கள்.

  20. ஆலூசிலிருந்து புறப்பட்டு, ரெவிதீமில் முகாமிட்டார்கள். அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்கவில்லை.

  21. ரெவிதீமிலிருந்து புறப்பட்டு, சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.

  22. சீனாய் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, கிப்ரோத் அத்தாவில் முகாமிட்டார்கள்.

  23. கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டு, ஆஸ்ரோத்தில் முகாமிட்டார்கள்.

  24. ஆஸ்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் முகாமிட்டார்கள்.

  25. ரித்மாவிலிருந்து புறப்பட்டு, ரிம்மோன் பேரேசில் முகாமிட்டார்கள்.