உள்ளடக்கத்திற்குச் செல்க

Creation Era

The Tower of Babel

Scattered nations and confused languages mark the beginning of the diversity of peoples across the earth.

64 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. ஆதியாகமம் 10:26சுமார் கி.மு. 2247

    யொக்தான் என்பவன், அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,

  2. ஆதியாகமம் 10:27சுமார் கி.மு. 2247

    அதோராம், ஊசால், திக்லா,

  3. ஆதியாகமம் 10:28சுமார் கி.மு. 2207

    ஓபால், அபிமாயேல், சேபா,

  4. ஆதியாகமம் 10:29சுமார் கி.மு. 2207

    ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.

  5. ஆதியாகமம் 10:30சுமார் கி.மு. 2207

    இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது.

  6. ஆதியாகமம் 10:31சுமார் கி.மு. 2207

    அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே.

  7. ஆதியாகமம் 10:32சுமார் கி.மு. 2207

    தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின.

  8. ஆதியாகமம் 11:1சுமார் கி.மு. 2247

    அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது.

  9. ஆதியாகமம் 11:2சுமார் கி.மு. 2247

    மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள்.

  10. ஆதியாகமம் 11:3சுமார் கி.மு. 2247

    அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள்.

  11. ஆதியாகமம் 11:4சுமார் கி.மு. 2247

    பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள்.

  12. ஆதியாகமம் 11:5சுமார் கி.மு. 2247

    மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார்.

  13. ஆதியாகமம் 11:6சுமார் கி.மு. 2247

    யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது.

  14. ஆதியாகமம் 11:7சுமார் கி.மு. 2247

    ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார்.

  15. ஆதியாகமம் 11:8சுமார் கி.மு. 2247

    அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார்.

  16. ஆதியாகமம் 11:9சுமார் கி.மு. 2247

    முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார்.

  17. ஆதியாகமம் 11:10சுமார் கி.மு. 2346

    சேமின் வம்சவரலாறு இதுவே: பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான்.

  18. ஆதியாகமம் 11:11சுமார் கி.மு. 1846

    அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் 500 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  19. ஆதியாகமம் 11:12சுமார் கி.மு. 2311

    அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான்.

  20. ஆதியாகமம் 11:13சுமார் கி.மு. 1908

    சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  21. ஆதியாகமம் 11:14சுமார் கி.மு. 2281

    சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான்.

  22. ஆதியாகமம் 11:15சுமார் கி.மு. 1878

    ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  23. ஆதியாகமம் 11:16சுமார் கி.மு. 2247

    ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான்.

  24. ஆதியாகமம் 11:17சுமார் கி.மு. 1817

    பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  25. ஆதியாகமம் 11:18சுமார் கி.மு. 2217

    பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான்.