Creation Era
The Tower of Babel
Scattered nations and confused languages mark the beginning of the diversity of peoples across the earth.
பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.
யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
- ஆதியாகமம் 10:4சுமார் கி.மு. 2338
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம்.
- ஆதியாகமம் 10:5சுமார் கி.மு. 2247
இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.
- ஆதியாகமம் 10:6சுமார் கி.மு. 2228
காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
- ஆதியாகமம் 10:7சுமார் கி.மு. 2228
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா. ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
- ஆதியாகமம் 10:8சுமார் கி.மு. 2289
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
- ஆதியாகமம் 10:9சுமார் கி.மு. 2289
அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று.
- ஆதியாகமம் 10:10சுமார் கி.மு. 2259
சிநெயார் நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன.
- ஆதியாகமம் 10:11சுமார் கி.மு. 2304
அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான்.
- ஆதியாகமம் 10:12சுமார் கி.மு. 2304
நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
- ஆதியாகமம் 10:13சுமார் கி.மு. 2304
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
- ஆதியாகமம் 10:14சுமார் கி.மு. 2304
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
- ஆதியாகமம் 10:15சுமார் கி.மு. 2304
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
- ஆதியாகமம் 10:16சுமார் கி.மு. 2304
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
- ஆதியாகமம் 10:17சுமார் கி.மு. 2304
ஏவியர், அர்கீயர், சீனியர்,
- ஆதியாகமம் 10:18சுமார் கி.மு. 2304
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
- ஆதியாகமம் 10:19சுமார் கி.மு. 2304
கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.
- ஆதியாகமம் 10:20சுமார் கி.மு. 2304
அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.
- ஆதியாகமம் 10:21சுமார் கி.மு. 2304
சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
- ஆதியாகமம் 10:22சுமார் கி.மு. 2304
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
- ஆதியாகமம் 10:23சுமார் கி.மு. 2304
ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
- ஆதியாகமம் 10:24சுமார் கி.மு. 2304
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
- ஆதியாகமம் 10:25சுமார் கி.மு. 2247
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.