உள்ளடக்கத்திற்குச் செல்க

Creation Era

The Tower of Babel

Scattered nations and confused languages mark the beginning of the diversity of peoples across the earth.

64 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. ஆதியாகமம் 11:19சுமார் கி.மு. 2008

    ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  2. ஆதியாகமம் 11:20சுமார் கி.மு. 2185

    ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.

  3. ஆதியாகமம் 11:21சுமார் கி.மு. 1978

    செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  4. ஆதியாகமம் 11:22சுமார் கி.மு. 2155

    செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.

  5. ஆதியாகமம் 11:23சுமார் கி.மு. 1955

    நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  6. ஆதியாகமம் 11:24சுமார் கி.மு. 2126

    நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான்.

  7. ஆதியாகமம் 11:25சுமார் கி.மு. 2007

    தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

  8. ஆதியாகமம் 11:26சுமார் கி.மு. 2056

    தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

  9. ஆதியாகமம் 11:27சுமார் கி.மு. 1996

    தேராகின் வம்சவரலாறு இதுவே: ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான்.

  10. ஆதியாகமம் 11:28சுமார் கி.மு. 1996

    தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான்.

  11. ஆதியாகமம் 11:29சுமார் கி.மு. 1996

    ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன்.

  12. ஆதியாகமம் 11:30சுமார் கி.மு. 1996

    சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை.

  13. ஆதியாகமம் 11:31சுமார் கி.மு. 1926

    தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள்.

  14. ஆதியாகமம் 11:32சுமார் கி.மு. 1921

    தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.