- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446 BC
Sinai & The Law
God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.
- யாத்திராகமம் 36:7சுமார் கி.மு. 1491
ஏனெனில், எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதற்குத் தேவையானவற்றைவிட அதிகமான பொருட்கள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன.
- யாத்திராகமம் 36:8சுமார் கி.மு. 1491
வேலையாட்களில் திறமையானவர்கள் எல்லோரும், தரமாய் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்தார்கள். அதில் கேருபீன்களை சித்திரத் தையல்காரனுடைய வேலையால் அலங்கரித்து, அவற்றால் இறைசமுகக் கூடாரத்தை அமைத்தார்கள்.
- யாத்திராகமம் 36:9சுமார் கி.மு. 1491
எல்லா திரைகளும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.
- யாத்திராகமம் 36:10சுமார் கி.மு. 1491
பின்பு ஐந்து திரைகளை ஒன்றாக இணைத்து, மற்ற ஐந்து திரைகளையும் அதேவிதமாகவே இணைத்தார்கள்.
- யாத்திராகமம் 36:11சுமார் கி.மு. 1491
இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத்திரையின் தொகுப்பின் விளிம்பு நெடுகிலும் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:12சுமார் கி.மு. 1491
வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கும்படி, ஒரு தொகுப்பு திரையின் கடைசி திரையின் ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும், மறு தொகுப்பு திரையின், ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும் அமைத்தார்கள்.
- யாத்திராகமம் 36:13சுமார் கி.மு. 1491
பின் ஐம்பது தங்கக்கொக்கிகளைச் செய்து, இரண்டு தொகுப்புத் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைசமுகக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது.
- யாத்திராகமம் 36:14சுமார் கி.மு. 1491
இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினோரு திரைகளைச் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:15சுமார் கி.மு. 1491
அந்த பதினொரு திரைகளும், ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் உள்ள ஒரே அளவுள்ளதாய் இருந்தன.
- யாத்திராகமம் 36:16சுமார் கி.மு. 1491
அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளை இன்னொரு தொகுப்பாகவும் இணைத்தார்கள்.
- யாத்திராகமம் 36:17சுமார் கி.மு. 1491
பின்பு அவர்கள் ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்ற தொகுப்பு கடைசி திரையின் ஒரு விளிம்பு நெடுகிலும் அவ்வாறே அமைத்தார்கள்.
- யாத்திராகமம் 36:18சுமார் கி.மு. 1491
அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்காக ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:19சுமார் கி.மு. 1491
பின்பு சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் அக்கூடாரத்திற்கு ஒரு மூடுதிரையைச் செய்தார்கள். அந்த மூடுதிரைக்கு மேலாகப் போடுவதற்குக் கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையையும் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:20சுமார் கி.மு. 1491
இறைசமுகக் கூடாரத்திற்காக நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் சித்தீம் மரத்தினால் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:21சுமார் கி.மு. 1491
ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது.
- யாத்திராகமம் 36:22சுமார் கி.மு. 1491
அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாய் இருக்கும்படி இரண்டு முளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாகவே செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:23சுமார் கி.மு. 1491
இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்திற்காக அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:24சுமார் கி.மு. 1491
ஒவ்வொரு முளை முனையையும் தாங்கி நிற்க ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்திற்கும் கீழே இரு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:25சுமார் கி.மு. 1491
இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கமான மறுபக்கத்திற்கும் அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:26சுமார் கி.மு. 1491
ஒவ்வொரு மரச்சட்டத்திற்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:27சுமார் கி.மு. 1491
இவ்வாறு அவர்கள் இறைசமுகக் கூடாரத்தின் கடைசியான மேற்குப் பக்கத்திற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்தார்கள்.
- யாத்திராகமம் 36:28சுமார் கி.மு. 1491
இறைசமுகக் கூடாரத்தின் கடைசியில் உள்ள இரு பக்கத்து மூலைகளுக்கும் இரண்டு சட்டப்பலகைகள் செய்யப்பட்டன.
- யாத்திராகமம் 36:29சுமார் கி.மு. 1491
அந்த இரு மூலைகளிலும் சட்டப்பலகைகள் இரட்டையாக நிறுத்தப்பட்டு, அடியிலிருந்து நுனிவரை ஒரே வளையத்தினால் இணைக்கப்பட்டன. இரு மூலைகளும் ஒரேவிதமாகவே அமைக்கப்பட்டன.
- யாத்திராகமம் 36:30சுமார் கி.மு. 1491
இவ்விதமாக பின்புறத்தில் எட்டு இணைப்புப் பலகைகள் நிறுத்தப்பட்டன. ஒவ்வொரு இணைப்பு பலகையின் கீழும் இரு அடித்தளங்களாக பதினாறு வெள்ளி அடித்தளங்களும் வைக்கப்பட்டன.
- யாத்திராகமம் 36:31சுமார் கி.மு. 1491
அத்துடன் சித்தீம் மரத்தினால் குறுக்குச் சட்டங்களைச் செய்தார்கள். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும்,