உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. ஆதியாகமம் 36:28சுமார் கி.மு. 1756

    திஷானுடைய மகன்கள். ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

  2. ஆதியாகமம் 36:29சுமார் கி.மு. 1756

    ஓரியரின் வம்சத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,

  3. ஆதியாகமம் 36:30சுமார் கி.மு. 1756

    திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள்.

  4. ஆதியாகமம் 36:31சுமார் கி.மு. 1756

    இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:

  5. ஆதியாகமம் 36:32சுமார் கி.மு. 1756

    பேயோரின் மகன் பேலா ஏதோமில் அரசனானான். அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.

  6. ஆதியாகமம் 36:33சுமார் கி.மு. 1869

    பேலா இறந்தபின்பு, போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.

  7. ஆதியாகமம் 36:34சுமார் கி.மு. 1827

    யோபாப் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.

  8. ஆதியாகமம் 36:35சுமார் கி.மு. 1785

    உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.

  9. ஆதியாகமம் 36:36சுமார் கி.மு. 1743

    ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.

  10. ஆதியாகமம் 36:37சுமார் கி.மு. 1701

    சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.

  11. ஆதியாகமம் 36:38சுமார் கி.மு. 1659

    சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.

  12. ஆதியாகமம் 36:39சுமார் கி.மு. 1617

    அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.

  13. ஆதியாகமம் 36:40சுமார் கி.மு. 1617

    பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,

  14. ஆதியாகமம் 36:41சுமார் கி.மு. 1617

    அகோலிபாமா, ஏலா, பினோன்,

  15. ஆதியாகமம் 36:42சுமார் கி.மு. 1617

    கேனாஸ், தேமான், மிப்சார்,

  16. ஆதியாகமம் 36:43சுமார் கி.மு. 1617

    மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே. இவையே ஏசாவின் வம்சவரலாறு, இவன் ஏதோமியருக்குத் தகப்பன்.

  17. ஆதியாகமம் 37:1சுமார் கி.மு. 1728

    யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் நாட்டிற்குத் திரும்பவும் வந்து அங்கே வாழ்ந்தான்.

  18. ஆதியாகமம் 37:2சுமார் கி.மு. 1728

    யாக்கோபின் வம்சவரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தகப்பனின் மனைவிகளான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்களாகிய தனது சகோதரருடன் மந்தை மேய்ப்பது வழக்கம். அவர்களின் கெட்டசெயல்களைப் பற்றி யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்தான்.

  19. ஆதியாகமம் 37:3சுமார் கி.மு. 1728

    இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருக்கையில் யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், அவனைத் தன் மற்ற மகன்களைவிட அதிகமாக நேசித்தான்; இதனால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலுடையை அவனுக்காக செய்வித்தான்.

  20. ஆதியாகமம் 37:4சுமார் கி.மு. 1728

    தங்கள் தகப்பன் தங்களைப்பார்க்கிலும் யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவன் சகோதரர் கண்டார்கள்; அதனால் அவர்கள் அவனுடன் தயவாய்ப் பேசாமல் அவனை வெறுத்தார்கள்.

  21. ஆதியாகமம் 37:5சுமார் கி.மு. 1728

    யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதை அவன் தன் சகோதரருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள்.

  22. ஆதியாகமம் 37:6சுமார் கி.மு. 1728

    அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்:

  23. ஆதியாகமம் 37:7சுமார் கி.மு. 1728

    நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது திடீரென எனது கதிர்க்கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க்கட்டுகள் என் கதிர்க்கட்டைச் சுற்றி நின்று குனிந்து வணங்கின” என்றான்.

  24. ஆதியாகமம் 37:8சுமார் கி.மு. 1728

    அப்பொழுது அவன் சகோதரர் அவனிடம், “நீ எங்கள்மேல் ஆளுகைசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறாயோ? நீ உண்மையாகவே எங்களை ஆளப்போகிறாயோ?” என்று கேட்டார்கள். அவர்கள் அவனுடைய கனவின் நிமித்தமும், அவன் சொன்னவற்றின் நிமித்தமும் அவனை மேலும் வெறுத்தார்கள்.

  25. ஆதியாகமம் 37:9சுமார் கி.மு. 1728

    யோசேப்பு இன்னுமொரு கனவு கண்டான், அதையும் அவன் தன் சகோதரரிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான்.