உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. உபாகமம் 2:17சுமார் கி.மு. 1453

    யெகோவா என்னிடம் சொன்னதாவது:

  2. உபாகமம் 2:18சுமார் கி.மு. 1453

    “நீங்கள் இன்று மோவாப் பிரதேசத்தின் எல்லையை ஆர் என்ற இடத்தில் கடந்துசெல்வீர்கள்.

  3. உபாகமம் 2:19சுமார் கி.மு. 1453

    நீங்கள் அம்மோனியரின் நாட்டின் வழியாக வருகிறபோது, அவர்களைத் தொல்லைப்படுத்தாமலும், யுத்தம்செய்யத் தூண்டாமலும் இருங்கள். ஏனெனில் அம்மோனியருக்குச் சொந்தமான எந்த நிலத்தையும் நான் உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கமாட்டேன். அந்த நாட்டை லோத்தின் சந்ததிக்கே உரிமையாகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

  4. உபாகமம் 2:20சுமார் கி.மு. 1453

    முற்காலத்தில் அந்த நாட்டிலே அரக்கர் வாழ்ந்தபடியால் அது, அரக்கர்களுடைய நாடு என்று கருதப்பட்டது. அம்மோனியர் அவர்களை சம்சூமியர் என்று அழைத்தார்கள்.

  5. உபாகமம் 2:21சுமார் கி.மு. 1453

    அவர்கள் பலமும், எண்ணிக்கையில் அதிகமும், ஏனாக்கியரைப் போலவே உயரமுமாய் இருந்தார்கள். ஆனால் யெகோவா அவர்களை அம்மோனியரின் முன்னின்று துரத்திவிட்டார். இவ்வாறு அம்மோனியர் அவர்களைத் துரத்திவிட்டு அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள்.

  6. உபாகமம் 2:22சுமார் கி.மு. 1453

    சேயீரில் வாழ்ந்த ஓரியரை ஏசாவின் சந்ததியின் முன்பாக அழித்தபோதும், யெகோவா இவ்விதமாகவே ஏசாவின் சந்ததிக்கும் செய்தார். அவர்கள் ஓரியரை வெளியே துரத்திவிட்டு, அவர்களுடைய இடத்தில் இந்நாள்வரை வாழ்கிறார்கள்.

  7. உபாகமம் 2:23சுமார் கி.மு. 1453

    அதேபோல் காசா வரையுள்ள கிராமங்களில் வாழ்கிற ஆவியரை, கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள்.

  8. உபாகமம் 2:24சுமார் கி.மு. 1453

    “இப்பொழுது புறப்பட்டு, அர்னோன் பள்ளத்தாக்கைக் கடந்துசெல்லுங்கள். பாருங்கள், எமோரியனான எஸ்போனின் அரசன் சீகோனையும், அவனுடைய நாட்டையும் உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன். நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கும்படி அவனுடன் சண்டையிடுங்கள்.

  9. உபாகமம் 2:25சுமார் கி.மு. 1453

    அந்த நாளிலேயே வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாடுகள்மேலும் உங்களைப்பற்றிய திகிலையும், பயத்தையும் போடத் தொடங்குவேன். அவர்கள் உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்தவுடன் நடுங்கி, உங்களால் வேதனைப்படுவார்கள்” என்றார்.

  10. உபாகமம் 2:26சுமார் கி.மு. 1453

    நான் கெதெமோத் பாலைவனத்திலிருந்து எஸ்போனிலிருந்த சீகோன் அரசனுக்குச் சமாதான செய்தி சொல்லும்படி தூதுவர்களை அனுப்பிச் சொன்னதாவது:

  11. உபாகமம் 2:27சுமார் கி.மு. 1453

    “உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். பிரதான வீதியிலேயே நாங்கள் தங்குவோம்; வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பமாட்டோம்.

  12. உபாகமம் 2:28சுமார் கி.மு. 1453

    நாங்கள் சாப்பிடுவதற்காக உணவையும், குடிக்கத் தண்ணீரையும் விலைக்குக் கொடுங்கள். வெள்ளிப்பணத்தை அதன் விலையாகச் செலுத்துவோம். நாங்கள் கால்நடையாய் கடந்துபோகுமட்டும் அனுமதியுங்கள்.

  13. உபாகமம் 2:29சுமார் கி.மு. 1453

    நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போகும்வரை, சேயீரில் வாழ்கிற ஏசாவின் சந்ததியும் ஆர் என்னும் பிரதேசத்தில் வசிக்கும் மோவாபியரும் எங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்”

  14. உபாகமம் 2:30சுமார் கி.மு. 1453

    ஆனால் எஸ்போனின் அரசனாகிய சீகோன் தன் நாட்டைக் கடந்துசெல்ல நமக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டான். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா இப்பொழுது செய்திருக்கிறதுபோல், அவனை உங்கள் கைகளில் கொடுக்கும்படி அவனுடைய மனதைப் பிடிவாதமாகவும், அவனுடைய இருதயத்தைக் கடினமாகவும் ஆக்கினார்.

  15. உபாகமம் 2:31சுமார் கி.மு. 1453

    பின்பு யெகோவா என்னிடம் சொன்னதாவது: “பார், நான் சீகோனையும், அவனுடைய நாட்டையும் உன்னிடத்தில் ஒப்புவிக்கத் தொடங்கிவிட்டேன். இப்பொழுது அவர்களைக் கைப்பற்றத் தொடங்கி அவனுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

  16. உபாகமம் 2:32சுமார் கி.மு. 1453

    சீகோனும், அவனுடைய எல்லாப் படைகளும் யாகாசில் நம்முடன் யுத்தம் செய்ய எதிர்கொண்டு வந்தபோது,

  17. உபாகமம் 2:33சுமார் கி.மு. 1453

    நம்முடைய இறைவனாகிய யெகோவா அவனை நம்மிடம் ஒப்படைத்தார். நாம் அவனை அவனுடைய மகன்களுடனும், அனைத்துப் படைகளுடனும் முறியடித்தோம்.

  18. உபாகமம் 2:34சுமார் கி.மு. 1453

    நாம் அக்காலத்திலேயே பட்டணங்கள் யாவற்றையும் கைப்பற்றி, ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் முழுவதும் அழித்தோம்; ஒருவரையும் தப்பவிடவில்லை.

  19. உபாகமம் 2:35சுமார் கி.மு. 1453

    அங்கிருந்த வளர்ப்பு மிருகங்களையும், நாம் கைப்பற்றியிருந்த பட்டணங்களிலிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் நாம் நமக்காகக் கொண்டுவந்தோம்.

  20. உபாகமம் 2:36சுமார் கி.மு. 1453

    அர்னோன் பள்ளத்தாக்கின் அருகே உள்ள அரோயேரிலும், அப்பள்ளத்தாக்கிலிருந்த பட்டணத்திலுமிருந்து கீலேயாத்வரைக்கும் ஒரு பட்டணமாவது நாம் கைப்பற்றிக்கொள்ள முடியாத அளவு பலமுள்ளவையாய் இருக்கவில்லை. நமது இறைவனாகிய யெகோவா அவற்றையெல்லாம் நமக்குக் கொடுத்தார்.

  21. உபாகமம் 2:37சுமார் கி.மு. 1453

    நமது இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படியே அம்மோனியரின் நாட்டையும், யாப்போக்கு ஆற்றங்கரையிலுள்ள ஊர்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும் நீங்கள் பிடித்துக்கொள்ளவில்லை.

  22. உபாகமம் 3:1சுமார் கி.மு. 1452

    பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாகச் சென்றோம். அப்பொழுது பாசானின் அரசனாகிய ஓக் என்பவன் தன் முழு படையுடனும் அணிவகுத்து நம்முடன் யுத்தம் செய்வதற்கு எத்ரேயில் நம்மை எதிர்கொண்டான்.

  23. உபாகமம் 3:2சுமார் கி.மு. 1452

    யெகோவா என்னிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். ஏனெனில் நான் அவனையும், அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் உன்னிடத்தில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.

  24. உபாகமம் 3:3சுமார் கி.மு. 1452

    அவ்வாறே நமது இறைவனாகிய யெகோவா பாசானின் அரசன் ஓகையும், அவனுடைய முழு படையையும் நம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் ஒருவரும் தப்பிப் போகாதபடி நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம்.

  25. உபாகமம் 3:4சுமார் கி.மு. 1452

    அக்காலத்தில் நாம் அவனுடைய பட்டணங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து அவர்களுடைய அறுபது பட்டணங்களில் ஒன்றையாகிலும் நாம் கைப்பற்றாமல் விடவில்லை. பாசானில் ஓகின் ஆளுகைக்கு உட்பட்ட முழு அர்கோப் பிரதேசத்தையும் கைப்பற்றினோம்.