உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. உபாகமம் 1:38சுமார் கி.மு. 1451

    ஆனால் உன்னுடைய உதவியாளன் நூனின் மகனாகி யோசுவா அதற்குள் போவான். அவனைத் தைரியப்படுத்து, இஸ்ரயேலர் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி அவனே அவர்களை வழிநடத்துவான்.

  2. உபாகமம் 1:39சுமார் கி.மு. 1451

    கைதிகளாய் செல்வார்கள் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுபிள்ளைகளும், நன்மை தீமை அறியாதிருக்கிற உங்கள் பிள்ளைகளாகிய அவர்களே அந்நாட்டிற்குள் போவார்கள். நான் அந்நாட்டை அவர்களுக்கே கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

  3. உபாகமம் 1:40சுமார் கி.மு. 1451

    நீங்களோ, திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியான பாலைவனத்தை நோக்கிப் போங்கள்.”

  4. உபாகமம் 1:41சுமார் கி.மு. 1451

    அப்பொழுது நீங்கள் அதற்கு மறுமொழியாக, “நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம். எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியே போய் யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டிற்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் தரித்துக்கொண்டீர்கள்.

  5. உபாகமம் 1:42சுமார் கி.மு. 1451

    ஆனால் யெகோவா என்னிடம், “நீங்கள் மேலே யுத்தம்செய்யப் போகவேண்டாம். நான் உங்களுடன் இருக்கமாட்டேன். நீங்கள் உங்கள் பகைவரால் தோற்கடிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்” என்று சொன்னார்.

  6. உபாகமம் 1:43சுமார் கி.மு. 1451

    நான் அதை உங்களுக்குச் சொல்லியும், நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம்செய்து, உங்கள் அகந்தையில் அணிவகுத்து மலைநாட்டிற்கு ஏறினீர்கள்.

  7. உபாகமம் 1:44சுமார் கி.மு. 1451

    அப்பொழுது மலைநாட்டில் வாழ்ந்த எமோரியர் உங்களுக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் தேனீக்கள் கூட்டம்போல் உங்களைத் துரத்தி, சேயீரிலிருந்து ஓர்மாவரை உள்ள வழியெல்லாம் உங்களை அடித்து வீழ்த்தினார்கள்.

  8. உபாகமம் 1:45சுமார் கி.மு. 1451

    நீங்கள் திரும்பிவந்தபோது, யெகோவாவிடம் போய்ப் புலம்பி அழுதீர்கள்; ஆனால் அவர் உங்கள் புலம்பலைச் செவிசாய்த்து கவனிக்கவில்லை.

  9. உபாகமம் 1:46சுமார் கி.மு. 1451

    ஆனபடியால் நீங்கள் காதேசில் தங்கி, அநேக காலத்தை அங்கே கழித்தீர்கள்.

  10. உபாகமம் 2:1சுமார் கி.மு. 1453

    பின்பு, யெகோவா எனக்கு வழிகாட்டியபடியே நாம் திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியாக பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டோம். நீண்டகாலமாக நாம் சேயீர் மலைநாட்டைச் சுற்றியுள்ள வழியாகப் போனோம்.

  11. உபாகமம் 2:2சுமார் கி.மு. 1453

    அதன்பின் யெகோவா என்னிடம்,

  12. உபாகமம் 2:3சுமார் கி.மு. 1453

    “நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றிவந்தது போதும். இப்பொழுது வடக்கே திரும்புங்கள்.

  13. உபாகமம் 2:4சுமார் கி.மு. 1453

    நீ இந்த மக்களுக்குக் கொடுக்கவேண்டிய உத்தரவுகளாவன: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் சந்ததியார் வசிக்கும் சேயீர் பிரதேசத்தைக் கடந்துசெல்லப் போகிறீர்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள், ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்.

  14. உபாகமம் 2:5சுமார் கி.மு. 1453

    அவர்களை யுத்தத்திற்குத் தூண்டாதீர்கள்; ஏனென்றால் அவர்களின் நாட்டில் ஒரு அடி அளவான நிலத்தைக்கூட தரமாட்டேன். சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.

  15. உபாகமம் 2:6சுமார் கி.மு. 1453

    அங்கே அவர்களுக்கு நீங்கள் உண்ணும் உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் வெள்ளிப்பணம் கொடுங்கள்” என்றார்.

  16. உபாகமம் 2:7சுமார் கி.மு. 1453

    உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கைகளின் வேலை எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதித்தார். அவர் இந்த விசாலமான பாலைவனத்தின் வழியாக உங்கள் பிரயாணத்திலும் உங்கள்மேல் கண்காணிப்பாய் இருந்தார். இந்த நாற்பது வருடங்களும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் இருந்திருக்கிறார்; நீங்கள் ஒன்றுக்கும் குறைவில்லாமலும் இருந்திருக்கிறீர்கள்.

  17. உபாகமம் 2:8சுமார் கி.மு. 1453

    நாம் சேயீரில் வாழ்கின்ற ஏசாவின் சந்ததியாரான நம்முடைய சகோதரரைக் கடந்துசென்றோம். நாம் ஏலாத்திலிருந்தும், எசியோன் கேபேரிலிருந்தும் வருகிற அரபா வழியாகத் திரும்பி மோவாபுக்குப் போகும் பாலைவனப் பாதை வழியாகப் பயணம் செய்தோம்.

  18. உபாகமம் 2:9சுமார் கி.மு. 1453

    அப்பொழுது யெகோவா என்னிடம், “மோவாபியர்களைத் தொல்லைப்படுத்தவோ, அவர்களை யுத்தம்செய்யத் தூண்டவோ வேண்டாம். ஏனென்றால் அவர்களின் நாட்டில் எதையும், நான் உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். நான் ஆர் என்னும் பிரதேசத்தை லோத்தின் சந்ததியாருக்கு உரிமையாகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

  19. உபாகமம் 2:10சுமார் கி.மு. 1453

    முற்காலத்தில் அங்கு ஏமியர் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் பலமும், எண்ணிக்கையில் அதிகமும், ஏனாக்கியரைப்போல் உயரமுமாய் இருந்தார்கள்.

  20. உபாகமம் 2:11சுமார் கி.மு. 1453

    ஏனாக்கியரைப் போலவே அவர்களும் அரக்கர்களாகக் கருதப்பட்டார்கள், மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைத்தார்கள்.

  21. உபாகமம் 2:12சுமார் கி.மு. 1453

    முற்காலத்தில் ஓரியர் சேயீரில் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் ஏசாவின் சந்ததியார் அவர்களைத் துரத்திவிட்டார்கள். யெகோவா தங்களுக்கு உரிமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேலர் செய்ததுபோலவே, ஏசாவின் சந்ததியார் ஓரியரைத் தங்கள் முன்னின்று துரத்திவிட்டு, அவர்களுடைய இடத்தில் குடியேறினார்கள்.

  22. உபாகமம் 2:13சுமார் கி.மு. 1453

    அப்பொழுது யெகோவா, “நீங்கள் எழுந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடந்துபோங்கள்” என்றார். அப்படியே நாமும் பள்ளத்தாக்கைக் கடந்துசென்றோம்.

  23. உபாகமம் 2:14சுமார் கி.மு. 1453

    நாம் காதேஸ் பர்னேயாவிலிருந்து புறப்பட்டு, சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்கும்வரை முப்பத்தெட்டு வருடங்கள் எடுத்தன. அதற்குள்ளாக யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியே, யுத்தம் செய்யும் மனிதரான அந்தச் சந்ததி முழுவதும் முகாமிலிருந்து அழிந்துபோனார்கள்.

  24. உபாகமம் 2:15சுமார் கி.மு. 1453

    அவர்களை முகாமிலிருந்து முற்றிலும் அகற்றிப்போடும்வரை, யெகோவாவினுடைய கரம் அவர்களுக்கு எதிராக இருந்தது.

  25. உபாகமம் 2:16சுமார் கி.மு. 1453

    மக்கள் மத்தியில் கடைசியில் இருந்த யுத்தமனிதர் இறந்தபின்,