உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 2 சாமுயேல் 23:20சுமார் கி.மு. 1055

    கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான்.

  2. 2 சாமுயேல் 23:21சுமார் கி.மு. 1055

    அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான்.

  3. 2 சாமுயேல் 23:22சுமார் கி.மு. 1055

    இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான்.

  4. 2 சாமுயேல் 23:23சுமார் கி.மு. 1055

    அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.

  5. 2 சாமுயேல் 23:24சுமார் கி.மு. 1055

    அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,

  6. 2 சாமுயேல் 23:25சுமார் கி.மு. 1055

    ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,

  7. 2 சாமுயேல் 23:26சுமார் கி.மு. 1055

    பல்தியனான ஏலேஸ், தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,

  8. 2 சாமுயேல் 23:27சுமார் கி.மு. 1055

    ஆனதோத்தியனான அபியேசர், ஊஷாத்தியனான மெபுன்னாயி,

  9. 2 சாமுயேல் 23:28சுமார் கி.மு. 1055

    அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,

  10. 2 சாமுயேல் 23:29சுமார் கி.மு. 1055

    நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,

  11. 2 சாமுயேல் 23:30சுமார் கி.மு. 1055

    பிரத்தோனியனான பெனாயா, காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,

  12. 2 சாமுயேல் 23:31சுமார் கி.மு. 1055

    அர்பாத்தியனான அபிஅல்போன், பர்குமியனான அஸ்மாவேத்,

  13. 2 சாமுயேல் 23:32சுமார் கி.மு. 1055

    சால்போனியனான எலியாபா, யாசேனின் மகன்களில் ஒருவனான யோனத்தான்,

  14. 2 சாமுயேல் 23:33சுமார் கி.மு. 1055

    ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,

  15. 2 சாமுயேல் 23:34சுமார் கி.மு. 1055

    மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத், கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,

  16. 2 சாமுயேல் 23:35சுமார் கி.மு. 1055

    கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,

  17. 2 சாமுயேல் 23:36சுமார் கி.மு. 1055

    சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால், காதியனான பானி,

  18. 2 சாமுயேல் 23:37சுமார் கி.மு. 1055

    அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,

  19. 2 சாமுயேல் 23:38சுமார் கி.மு. 1055

    இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப்,

  20. 2 சாமுயேல் 23:39சுமார் கி.மு. 1055

    ஏத்தியனான உரியா என்பவர்களே. எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள்.

  21. 2 சாமுயேல் 24:1சுமார் கி.மு. 1017

    யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்.

  22. 2 சாமுயேல் 24:2சுமார் கி.மு. 1017

    எனவே அரசன் யோவாபிடமும் அவனோடிருந்த தளபதிகளிடமும், “நான் சண்டையிடக்கூடிய வீரர்களின் தொகையை அறியும்படிக்குத் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள இஸ்ரயேலரின் எல்லாக் கோத்திரங்களிடமும் சென்று தொகையைக் கணக்கிடு” என்றான்.

  23. 2 சாமுயேல் 24:3சுமார் கி.மு. 1017

    ஆனால் யோவாப் அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் காணும்படி, இறைவனாகிய யெகோவா இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. ஆனால் என் தலைவனாகிய அரசர் ஏன் இப்படியான செயலைச் செய்ய விரும்புகிறீர்?” என்றான்.

  24. 2 சாமுயேல் 24:4சுமார் கி.மு. 1017

    ஆனாலும், அரசனின் வார்த்தைக்கு யோவாபும், தளபதிகளும் கட்டுப்படவேண்டியதால், இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடும்படி அரசனிடமிருந்து சென்றார்கள்.

  25. 2 சாமுயேல் 24:5சுமார் கி.மு. 1017

    அவர்கள் யோர்தானைக் கடந்தபின் பள்ளத்தாக்கிலிருந்து போய் பட்டணத்துக்குத் தெற்கிலிருந்து அரோயேருக்கு அருகில் முகாமிட்டார்கள். பின் காத் வழியாகச் சென்று யாசேருக்குப் போனார்கள்.