- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1010–970 BC
The Reign of David
David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.
- 2 சாமுயேல் 22:21சுமார் கி.மு. 1018
“யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
- 2 சாமுயேல் 22:22சுமார் கி.மு. 1018
ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.
- 2 சாமுயேல் 22:23சுமார் கி.மு. 1018
அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.
- 2 சாமுயேல் 22:24சுமார் கி.மு. 1018
நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
- 2 சாமுயேல் 22:25சுமார் கி.மு. 1018
யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்; அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.
- 2 சாமுயேல் 22:26சுமார் கி.மு. 1018
“உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.
- 2 சாமுயேல் 22:27சுமார் கி.மு. 1018
தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.
- 2 சாமுயேல் 22:28சுமார் கி.மு. 1018
நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும்.
- 2 சாமுயேல் 22:29சுமார் கி.மு. 1018
யெகோவாவே, நீர் என் விளக்கு; யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.
- 2 சாமுயேல் 22:30சுமார் கி.மு. 1018
உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
- 2 சாமுயேல் 22:31சுமார் கி.மு. 1018
“இறைவனுடைய வழி முழு நிறைவானது: யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
- 2 சாமுயேல் 22:32சுமார் கி.மு. 1018
யெகோவாவைத்தவிர இறைவன் யார்? நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?
- 2 சாமுயேல் 22:33சுமார் கி.மு. 1018
இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து, என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
- 2 சாமுயேல் 22:34சுமார் கி.மு. 1018
அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.
- 2 சாமுயேல் 22:35சுமார் கி.மு. 1018
யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
- 2 சாமுயேல் 22:36சுமார் கி.மு. 1018
நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
- 2 சாமுயேல் 22:37சுமார் கி.மு. 1018
என் கணுக்கால்கள் புரளாதபடி, நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
- 2 சாமுயேல் 22:38சுமார் கி.மு. 1018
“நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்; அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.
- 2 சாமுயேல் 22:39சுமார் கி.மு. 1018
அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்; அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.
- 2 சாமுயேல் 22:40சுமார் கி.மு. 1018
யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.
- 2 சாமுயேல் 22:41சுமார் கி.மு. 1018
நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; நான் அவர்களை அழித்தேன்.
- 2 சாமுயேல் 22:42சுமார் கி.மு. 1018
அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.
- 2 சாமுயேல் 22:43சுமார் கி.மு. 1018
நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்; நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.
- 2 சாமுயேல் 22:44சுமார் கி.மு. 1018
“நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர். நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
- 2 சாமுயேல் 22:45சுமார் கி.மு. 1018
வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.