- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- ஓசியா 9:6சுமார் கி.மு. 760
உங்களில் சிலர் அழிவிலிருந்து தப்பி ஓடினாலுங்கூட, எகிப்து அவர்களை அழிவுக்கு ஒன்றுசேர்க்கும்; மெம்பிஸ் அவர்களை அடக்கம்பண்ணும். அவர்களுடைய வெள்ளியினாலான திரவியங்களை நெரிஞ்சில்கள் மூடும்; அவர்களுடைய கூடாரத்தையும் முட்செடிகள் மூடும்.
- ஓசியா 9:7சுமார் கி.மு. 760
தண்டனையின் நாட்கள் சமீபமாயிருக்கின்றன; கணக்குக் கேட்கும் நாட்களும் நெருங்கிவிட்டன. இதை இஸ்ரயேல் தெரிந்துகொள்ளட்டும். உனது பாவங்கள் அநேகமாயிருக்கிறதினாலும், உனது பகைமையுணர்வு அதிகமாயிருக்கிறதினாலும் இறைவாக்கினன் மூடனாக எண்ணப்படுகிறான். இறைவனால் தூண்டுதல் பெற்றவன் பைத்தியக்காரனாய் எண்ணப்படுகிறான்.
- ஓசியா 9:8சுமார் கி.மு. 760
என் இறைவனோடு இறைவாக்கினனே எப்பிராயீமுக்குக் காவலாளியாய் இருக்கிறேன். ஆயினும் அவனுடைய வழிகளிலெல்லாம் கண்ணிகள் காத்திருக்கின்றன; அவனுடைய இறைவனின் ஆலயத்தில் பகைமை காத்திருக்கிறது.
- ஓசியா 9:9சுமார் கி.மு. 760
கிபியாவின் நாட்களில் இருந்ததுபோல், அவர்கள் சீர்கேட்டில் மூழ்கியிருக்கிறார்கள். யெகோவா அவர்களின் கொடுமையை நினைவிற்கொண்டு, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
- ஓசியா 9:10சுமார் கி.மு. 760
நான் இஸ்ரயேலை முதன்முதல் கண்டபோது, அது பாலைவனத்தில் திராட்சைப் பழங்களைக் கண்டுபிடித்ததுபோல் எனக்கு இருந்தது; நான் உனது முற்பிதாக்களைக் கண்டபோது, அது அத்திமரத்தில் அதன் பருவகாலத்தின் முதல் பழங்களைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஆனால், அவர்கள் பாகால் பேயோரிடத்திற்கு வந்தபோது, வெட்கக்கேடான பாகால் விக்கிரகத்திற்கு தங்களை அர்ப்பணித்து, தாங்கள் நேசித்த அந்த விக்கிரகத்தைப் போலவே, கேவலமானவர்களானார்கள்.
- ஓசியா 9:11சுமார் கி.மு. 760
எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்தோடிவிடும்; அவர்களுக்குள் பிறப்போ, கருவில் சுமப்பதோ அல்லது கருத்தரிப்பதோ இல்லை.
- ஓசியா 9:12சுமார் கி.மு. 760
அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலுங்கூட, அவர்களுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்கள் இழக்கும்படி நான் செய்வேன். நான் அவர்களைவிட்டு விலகும்போது, அவர்களுக்கு ஐயோ கேடு!
- ஓசியா 9:13சுமார் கி.மு. 760
இன்பமான இடத்தில் அமைந்திருக்கும் தீரு நாட்டைப்போல், நான் எப்பிராயீமை கண்டேன். ஆனால், எப்பிராயீம் தன் பிள்ளைகளைக் கொலைக்குக் கொடுக்கும்படி பகைவனைக் கூட்டிவருவான்.
- ஓசியா 9:14சுமார் கி.மு. 760
யெகோவாவே, அவர்களுக்கு எதைக் கொடுப்பீர்? கருச்சிதைவு உண்டாகும் கர்ப்பப்பைகளையும், பால் சுரக்க முடியாத மார்பகங்களையும் அவர்களுக்குக் கொடும்.
- ஓசியா 9:15சுமார் கி.மு. 760
“கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய பாவச் செயல்களின் நிமித்தம், நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன். நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்கமாட்டேன், அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள்.
- ஓசியா 9:16சுமார் கி.மு. 760
எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள், அவர்களின் வேர் உலர்ந்துபோயிற்று; இனிமேல் அவர்கள் கனி கொடுப்பதில்லை. அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய அருமையான சந்ததிகளை நான் நீக்கிப்போடுவேன்.”
- ஓசியா 9:17சுமார் கி.மு. 760
என் இறைவன் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை; அவர்கள் பிற நாடுகளுக்குள்ளே அலைந்து திரிகிறவர்களாயிருப்பார்கள்.
- ஓசியா 10:1சுமார் கி.மு. 740
இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி, அவன் தனக்கென கனிகொடுக்கிறது. அவனுடைய கனிகள் பெருகியபோது, அதற்கேற்ற மிகுதியான பலிபீடங்களைக் கட்டினான். அவனுடைய நாடு செழித்தபோது, தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான்.
- ஓசியா 10:2சுமார் கி.மு. 740
அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது. இப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். யெகோவா அவர்களுடைய மேடைகளை இடித்து, புனிதக் கற்களை அழித்துப்போடுவார்.
- ஓசியா 10:3சுமார் கி.மு. 740
அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால், எங்களுக்கு அரசன் இல்லை; அரசன் இருந்தாலுங்கூட, அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள்.
- ஓசியா 10:4சுமார் கி.மு. 740
அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், பொய் சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் வழக்குகள் தோன்றுகின்றன.
- ஓசியா 10:5சுமார் கி.மு. 740
சமாரியாவில் வாழ்கிற மக்கள் பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள். அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, நாடுகடத்தப்படும். அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்; அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள்.
- ஓசியா 10:6சுமார் கி.மு. 740
அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக அங்கு கொண்டுபோகப்படும். அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும். இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.
- ஓசியா 10:7சுமார் கி.மு. 740
சமாரியாவும் அதன் அரசனும் தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள்.
- ஓசியா 10:8சுமார் கி.மு. 740
இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்; இதுவே இஸ்ரயேலின் பாவம். முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து அதன் மேடைகளை மூடும். அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள்.
- ஓசியா 10:9சுமார் கி.மு. 740
இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்; அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய். கிபியாவிலே தீமை செய்தவர்கள்மேல் யுத்தம் வரவில்லையோ?
- ஓசியா 10:10சுமார் கி.மு. 740
ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்; உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென, பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும்.
- ஓசியா 10:11சுமார் கி.மு. 740
எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு. நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன். நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்; யூதாவும் நிலத்தை உழவேண்டும், யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும்.
- ஓசியா 10:12சுமார் கி.மு. 740
உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே; ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள். உழப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள், ஏனெனில் யெகோவா வந்து உங்கள்மேல் நியாயத்தை பொழியும் வரைக்கும் இது யெகோவாவைத் தேடும் காலமாயிருக்கிறது.
- ஓசியா 10:13சுமார் கி.மு. 740
ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள், தீமையை அறுவடை செய்தீர்கள், வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பெலத்திலும், உங்கள் அநேக போர் வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள்.