- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- ஓசியா 1:1சுமார் கி.மு. 785
யூதாவில் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய அரசர்கள் ஆட்சி செய்த காலங்களில், பெயேரியின் மகன் ஓசியாவிற்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அக்காலத்தில் இஸ்ரயேலில் யோவாசின் மகன் யெரொபெயாம் அரசன் ஆட்சிசெய்தான்.
- ஓசியா 1:2சுமார் கி.மு. 785
ஓசியாவின்மூலம் யெகோவா பேசத் தொடங்கியபோது, யெகோவா அவனிடம், “நீ போய் ஒரு வேசியை மனைவியாகக்கொண்டு, வேசிப் பிள்ளைகளையும் பெற்றுக்கொள். ஏனெனில் நாடு யெகோவாவுக்கு விரோதமாக, மிகக் கேவலமான விபசாரக் குற்றத்தைச் செய்திருக்கிறது என்றார்.”
- ஓசியா 1:3சுமார் கி.மு. 785
அவ்வாறே அவன் போய் திப்லாயிமின் மகள் கோமேர் என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
- ஓசியா 1:4சுமார் கி.மு. 785
யெகோவா ஓசியாவிடம், “இவனுக்கு யெஸ்ரயேல் என்று பெயரிடு. ஏனெனில் நான் வெகு சீக்கிரமாய் யெஸ்ரயேலில் நடந்த படுகொலைக்காக, யெகூவின் குடும்பத்தைத் தண்டிப்பேன். இஸ்ரயேல் அரசுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
- ஓசியா 1:5சுமார் கி.மு. 785
அந்த நாளில், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறிப்பேன் என்றார்.”
- ஓசியா 1:6சுமார் கி.மு. 785
மீண்டும் கோமேர் கருவுற்று பெண் குழந்தையொன்றைப் பெற்றாள். அப்பொழுது இறைவன் ஓசியாவிடம், “இவளுக்கு, லோருகாமா எனப் பெயரிடு. ஏனெனில் நான் திரும்பவும் ஒருபோதும் இஸ்ரயேல் குடும்பத்தை மன்னிக்கும்படி அவர்களுக்கு அன்புகாட்டமாட்டேன்.
- ஓசியா 1:7சுமார் கி.மு. 785
ஆனால் யூதா குடும்பத்திற்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும், வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன் என்றார்.”
- ஓசியா 1:8சுமார் கி.மு. 785
லோருகாமா பால்குடி மறந்தபின், கோமேர் இன்னொரு ஆண்குழந்தையைப் பெற்றாள்.
- ஓசியா 1:9சுமார் கி.மு. 785
அப்பொழுது யெகோவா, “அவனுக்கு, லோகம்மீ என்று பெயரிடு; ஏனெனில் நீங்கள் எனது மக்களல்ல, நான் உங்கள் இறைவனுமல்ல.
- ஓசியா 1:10சுமார் கி.மு. 785
“ஆயினும் ஒரு நாள் வரும்; அப்பொழுது இஸ்ரயேலர்கள் அளவிடவோ, எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போலிருப்பார்கள். ‘நீங்கள் என்னுடைய மக்களல்ல’ என்று சொல்லப்பட்ட அதே இடத்தில், அவர்கள், ‘ஜீவனுள்ள இறைவனின் பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவார்கள்.
- ஓசியா 1:11சுமார் கி.மு. 785
யூதாவின் மக்களும், இஸ்ரயேல் மக்களும் திரும்பவும் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரே தலைவனை நியமிப்பார்கள். அவர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கும் நாட்டைவிட்டு வெளியே வருவார்கள். ஏனெனில் யெஸ்ரயேலின் நாள் மேன்மையுள்ளதாயிருக்கும்.
- ஓசியா 2:1சுமார் கி.மு. 785
“அந்நாளிலே உங்கள் சகோதரர்களைப் பார்த்து, ‘நீங்கள் என் மக்கள்’ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து, ‘என் அன்புக்குரியவள்’ என்றும் சொல்லுங்கள்.
- ஓசியா 2:2சுமார் கி.மு. 785
“உங்கள் தாயைக் கண்டியுங்கள், அவளைக் கண்டியுங்கள், அவள் என் மனைவி அல்ல, நான் அவள் கணவனும் அல்ல. அவள் தன் விபசாரப் பார்வையை தன் முகத்தை விட்டகற்றட்டும்; தன் உண்மையற்ற தன்மையைத் தன் மார்பகங்களிடையே இருந்தும் விலக்கட்டும்.
- ஓசியா 2:3சுமார் கி.மு. 785
இல்லாவிட்டால் நான் அவளை உரிந்து நிர்வாணமாக்கி, அவள் பிறந்த நாளில் இருந்ததுபோலவே அவளை வெறுமையாக வைப்பேன்; அவளைப் பாலைவனத்தைப் போலாக்குவேன், வறண்ட நிலமாக்கி, அவளைத் தாகத்தினால் சாகப்பண்ணுவேன்.
- ஓசியா 2:4சுமார் கி.மு. 785
நான் அவளது பிள்ளைகளில் அன்புகாட்டமாட்டேன். ஏனெனில் அவர்கள் வேசிப்பிள்ளைகள்.
- ஓசியா 2:5சுமார் கி.மு. 785
அவர்களின் தாய் எனக்கு உண்மையற்றவளாயிருந்தாள்; அவர்களை வெட்கக்கேடான முறையில் கர்ப்பந்தரித்தாள். அவளோ, ‘நான் காதலர்களுக்குப் பின்னே போவேன், அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும், கம்பளி உடையும், மென்பட்டு உடையும், எண்ணெயும், பானமும் தருவார்கள்’ என்றாள்.
- ஓசியா 2:6சுமார் கி.மு. 785
எனவே நான், அவளது பாதையை முட்புதர்களினால் அடைப்பேன்; அவள் தன் வழியை கண்டுபிடிக்க முடியாதபடி அவளைச்சுற்றி மதில் கட்டுவேன்.
- ஓசியா 2:7சுமார் கி.மு. 785
அவள் தன் காதலர்கள் பின்னால் ஓடுவாள்; ஆயினும் அவர்களைக் கண்டுபிடிக்கமாட்டாள். அவள் அவர்களைத் தேடுவாள், ஆனாலும் கண்டுபிடிக்கமாட்டாள். அப்பொழுது அவள், ‘நான் முன்னிருந்ததுபோல என் கணவனிடம் திரும்பிப் போவேன்; ஏனெனில் அப்பொழுது நான் இதைவிட நலமாயிருந்தேன்’ என்பாள்.
- ஓசியா 2:8சுமார் கி.மு. 785
நானே அவளுக்கு தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்றும், நானே அவளுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாய்க் கொடுத்தேன் என்றும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஆயினும் அவர்களோ அவற்றைப் பாகால் தெய்வத்துக்குப் பயன்படுத்தினார்கள்.
- ஓசியா 2:9சுமார் கி.மு. 785
“ஆகையால், நான் எனது தானியம் முதிரும்போது, அதை எடுத்துப்போடுவேன், எனது புதுத் திராட்சை இரசம் ஆயத்தமாகும்போது, அதையும் எடுத்துப்போடுவேன். அவளது நிர்வாணத்தை மூடுவதற்கு நான் கொடுத்திருந்த எனது கம்பளி உடையையும், எனது மென்பட்டு உடையையும் எடுத்துப்போடுவேன்.
- ஓசியா 2:10சுமார் கி.மு. 785
நான் அவளது காதலர்களின் கண்களுக்கு முன்பாக, அவளது வெட்கக்கேட்டை வெளிப்படுத்துவேன்; எனது கைகளிலிருந்து ஒருவராலும் அவளை விடுவிக்க முடியாது.
- ஓசியா 2:11சுமார் கி.மு. 785
நான் அவளது எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்துவேன்: வருடாந்தர விழாக்கள், அமாவாசைகள், ஓய்வுநாட்கள் ஆகிய அவளது நியமிக்கப்பட்ட எல்லா கொண்டாட்டங்களையும் நிறுத்திவிடுவேன்.
- ஓசியா 2:12சுமார் கி.மு. 785
தனது காதலர்களினால் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும், அவளுடைய திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் நான் பாழாக்குவேன். நான் அவற்றை புதர்க் காடாக்குவேன், காட்டு மிருகங்கள் அவற்றை அழித்துப்போடும்.
- ஓசியா 2:13சுமார் கி.மு. 785
அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டிய நாட்களுக்காக, நான் அவளைத் தண்டிப்பேன்; அவள் தன் காதணிகளினாலும் நகைகளினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் காதலர்களைப் பின்தொடர்ந்து போனாள். என்னையோ மறந்துவிட்டாள்” என்று யெகோவா சொல்கிறார்.
- ஓசியா 2:14சுமார் கி.மு. 785
“நான் அவளை வசப்படுத்தப் போகிறேன்; நான் அவளை பாலைவனத்திற்கு அழைத்துச்சென்று, அங்கே அவளோடு அன்பாகப் பேசுவேன்.