உள்ளடக்கத்திற்குச் செல்க

Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்

759 வசனங்கள் · 177 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யுத்தம் செய்த மனிதர்களின் அரைப்பங்குபோக இஸ்ரயேலருக்கு மோசே பிரித்துக்கொடுத்த

  2. மற்ற அரைப்பங்கில் உள்ளவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்,

  3. 36,000 மாடுகள்,

  4. 30,500 கழுதைகள்,

  5. 16,000 மக்களுமே.

  6. மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலரின் அரைப்பங்கில் ஒவ்வொரு ஐம்பது மிருகங்களிலிருந்து ஒன்றையும், ஆட்களிலிருந்து ஒருவரையும் இறைசமுகக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்த லேவியருக்குக் கொடுத்தான்.

  7. அப்பொழுது ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளுமாயிருந்த இராணுவ அதிகாரிகள் மோசேயினிடத்திற்கு வந்தார்கள்.

  8. அவர்கள் மோசேயிடம், “எங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட போர்வீரர்களை உமது பணியாட்களான நாங்கள் கணக்கிட்டோம். ஒருவருமே தவறிப்போகவில்லை.

  9. ஆகையால், எங்களில் ஒவ்வொருவனும் கைப்பற்றிய தங்கநகைகளான காப்புகள், கைவளையல்கள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், அட்டியல்கள் ஆகியவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்காக யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யும்படி இவற்றைக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார்கள்.

  10. மோசேயும் ஆசாரியன் எலெயாசாரும் அவர்கள் கொண்டுவந்த தங்கத்தையும் நகைகளாகச் செய்யப்பட்டிருந்தவைகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.

  11. ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.

  12. ஒவ்வொரு இராணுவவீரனும் தனக்கென்றும் கொள்ளைப்பொருட்களை எடுத்திருந்தான்.

  13. மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் ஆயிரம்பேரின் தளபதிகளிடமும், நூறுபேரின் தளபதிகளிடமும் இருந்து தங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதை யெகோவாவுக்கு முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவந்தார்கள்.

  14. ரூபனியருக்கும், காத்தியருக்கும் திரளான மாட்டு மந்தைகளும், ஆட்டு மந்தைகளும் இருந்தன. யாசேர் நாடும், கீலேயாத் நாடும் தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானது என அவர்கள் கண்டார்கள்.

  15. எனவே அவர்கள் மோசேயிடமும், ஆசாரியன் எலெயாசாரிடமும், மக்கள் சமுதாயத் தலைவர்களிடமும் வந்து,

  16. “அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலே, சேபாம், நேபோ, பெயோன்

  17. ஆகிய நாடுகளை யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினார். அந்த நாடுகள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானவை. உங்கள் அடியாரான எங்களிடம் வளர்ப்பு மிருகங்கள் இருக்கின்றன.

  18. உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியாரான எங்களுக்கு உரிமைச்சொத்தாக இந்த நாடே கொடுக்கப்படட்டும். எங்களை யோர்தானைக் கடக்கச்செய்யவேண்டாம்” என்றார்கள்.

  19. மோசே காத்தியரிடமும், ரூபனியரிடமும், “நீங்கள் இங்கே இருக்க உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போவார்களோ?

  20. யெகோவா இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கும் நாட்டிற்கு அவர்களைப் போகவிடாமல் நீங்கள் ஏன் அவர்களை திடனற்றுப்போகச்செய்கிறீர்கள்?

  21. நான் காதேஸ் பர்னேயாவிலிருந்து உங்கள் முற்பிதாக்களை அந்த நாட்டைப் பார்த்துவரும்படி அனுப்பியபோது, அவர்களும் இப்படியே செய்தார்கள்.

  22. அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்குப் போய் நாட்டைப் பார்த்த பின்னர் யெகோவா இஸ்ரயேலருக்குக் கொடுத்த அந்த நாட்டிற்குள் அவர்களைப் போகவிடாமல் திடனற்றுப்போகச்செய்தார்கள்.

  23. அதனால் அந்நாளில் யெகோவாவுக்குக் கோபம்மூண்டு, அவர் ஆணையிட்டுச் சொன்னதாவது,

  24. ‘அவர்கள் என்னை முழு இருதயத்தோடு பின்பற்றவில்லை. ஆகையால், நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக்கொடுத்த அந்நாட்டை எகிப்திலிருந்து வெளியேவந்த இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையுமுடைய மனிதர்களில் ஒருவருமே காணமாட்டார்கள்.

  25. கேனாசியனான எப்புன்னேயின் மகன் காலேபையும், நூனின் மகன் யோசுவாவையும் தவிர வேறெவரும் அதைக் காண்பதில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் யெகோவாவை முழு இருதயத்தோடும் பின்பற்றினார்கள்’ என்றார்.