உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆமோஸ் 2:10சுமார் கி.மு. 787

    எமோரியர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்காக, எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் உங்களை வழிநடத்தினேன்.

  2. ஆமோஸ் 2:11சுமார் கி.மு. 787

    “நான் உங்கள் மகன்களிலிருந்து இறைவாக்கினரையும், உங்கள் வாலிபரிலிருந்து நசரேயர்களையும் எழுப்பினேன். இஸ்ரயேல் மக்களே, இது உண்மையல்லவா?” என யெகோவா அறிவிக்கிறார்.

  3. ஆமோஸ் 2:12சுமார் கி.மு. 787

    “ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள். இறைவாக்குச் சொல்லக்கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.

  4. ஆமோஸ் 2:13சுமார் கி.மு. 787

    “தானியத்தினால் நிறைந்த வண்டியில் நசுக்குவதுபோல, நான் உங்களை நசுக்குவேன்.

  5. ஆமோஸ் 2:14சுமார் கி.மு. 787

    அப்பொழுது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்கள் தப்பமாட்டார்கள், பலமுள்ளவர்கள் தங்கள் பலத்தை ஒன்றுதிரட்டமாட்டார்கள், இராணுவவீரனுங்கூட தன் உயிரைத் தப்புவிக்கமாட்டான்.

  6. ஆமோஸ் 2:15சுமார் கி.மு. 787

    வில்வீரனும் தனது இடத்தில் நிற்கமாட்டான், வேகமாய் ஓடும் இராணுவவீரனும் ஓடித்தப்பமாட்டான், குதிரைவீரனும் தன் உயிரைக் காப்பாற்றமாட்டான்.

  7. ஆமோஸ் 2:16சுமார் கி.மு. 787

    அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும் நிர்வாணமாய் ஓடித்தப்புவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  8. ஆமோஸ் 3:1சுமார் கி.மு. 787

    இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள்.

  9. ஆமோஸ் 3:2சுமார் கி.மு. 787

    “பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களையே நான் தெரிந்தெடுத்தேன். உங்கள் அநேக பாவங்களுக்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.”

  10. ஆமோஸ் 3:3சுமார் கி.மு. 787

    ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால், அவர்கள் ஒன்றுசேர்ந்து நடப்பது எப்படி?

  11. ஆமோஸ் 3:4சுமார் கி.மு. 787

    இரை அகப்படாமல் இருக்கும்போது, புதருக்குள் இருந்து சிங்கம் கர்ஜிக்குமோ? தான் ஒன்றும் பிடிக்காமல் இருக்கும்போது, அது தன் குகையில் இருந்து உறுமுமோ?

  12. ஆமோஸ் 3:5சுமார் கி.மு. 787

    கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ? பொறியில் ஒன்றும் சிக்காதிருக்கையிலே, பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ?

  13. ஆமோஸ் 3:6சுமார் கி.மு. 787

    பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில் மக்கள் நடுங்காதிருப்பார்களோ? பட்டணத்தில் பேராபத்து வரும்போது, யெகோவா அல்லவா அதை ஏற்படுத்தினார்?

  14. ஆமோஸ் 3:7சுமார் கி.மு. 787

    தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை.

  15. ஆமோஸ் 3:8சுமார் கி.மு. 787

    சிங்கம் கர்ஜித்தது, யார் பயப்படாதிருப்பான்? ஆண்டவராகிய யெகோவா பேசியிருக்கிறார், யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்கமுடியும்?

  16. ஆமோஸ் 3:9சுமார் கி.மு. 787

    அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும், எகிப்தின் கோட்டைகளுக்கும் பிரசித்தப்படுத்துங்கள். “சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள், இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும், அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.”

  17. ஆமோஸ் 3:10சுமார் கி.மு. 787

    “சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும் தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  18. ஆமோஸ் 3:11சுமார் கி.மு. 787

    ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான். அவன் அரண்களை இடித்து, உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.”

  19. ஆமோஸ் 3:12சுமார் கி.மு. 787

    யெகோவா சொல்வது இதுவே: “அப்பொழுது சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு மேய்ப்பன் தன் ஆட்டின் இரு கால் எலும்புகளையோ, காதின் துண்டொன்றையோ மீட்டெடுப்பதுபோல் இஸ்ரயேலர் தப்புவிக்கப்படுவார்கள். சமாரியாவில் படுக்கையின் ஓரங்களுடனும், தமஸ்குவிலுள்ள இருக்கைகளின் மூலைகளுடனும் மட்டுமே அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள்.”

  20. ஆமோஸ் 3:13சுமார் கி.மு. 787

    “இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்திற்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.

  21. ஆமோஸ் 3:14சுமார் கி.மு. 787

    “இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே பெத்தேலிலுள்ள தெய்வத்தின் மேடைகளை அழிப்பேன். மேடைகளின் கொம்புகள் வெட்டுண்டு தரையில் விழும்.

  22. ஆமோஸ் 3:15சுமார் கி.மு. 787

    செல்வந்தர்களின் அழகான வீடுகளை அழிப்பேன். குளிர்க்கால வீடுகளை இடிப்பேன். அவற்றுடன் கோடைகால வீடுகளையும் இடிப்பேன். தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்படும். அரண்மனைகள் பாழாகிவிடும்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  23. ஆமோஸ் 4:1சுமார் கி.மு. 787

    ஏழைகளை ஒடுக்கி, வறியவரை நசுக்கும் பெண்களே, “எங்களுக்குக் குடிவகைகளைக் கொண்டுவாருங்கள்” என உங்கள் கணவர்களிடம் சொல்லுகிறவர்களே, இந்த வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் சமாரியா மலையிலுள்ள பாசானின் கொழுத்த பசுக்களைப்போல் இருக்கிறீர்கள்.

  24. ஆமோஸ் 4:2சுமார் கி.மு. 787

    எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்: “நிச்சயமாய் ஒரு காலம் வரும். அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும், உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும் தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.

  25. ஆமோஸ் 4:3சுமார் கி.மு. 787

    நீங்கள் ஒவ்வொருவரும் சுவர் வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள். அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.