உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆமோஸ் 4:4சுமார் கி.மு. 787

    “சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள். கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள். காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள்.

  2. ஆமோஸ் 4:5சுமார் கி.மு. 787

    புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள். உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி அவற்றைக்குறித்துப் புகழுங்கள், இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  3. ஆமோஸ் 4:6சுமார் கி.மு. 787

    “ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும், பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன். அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  4. ஆமோஸ் 4:7சுமார் கி.மு. 787

    “அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில் நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன். நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி, இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன். ஒரு வயலுக்கு மழை பெய்தது. இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது.

  5. ஆமோஸ் 4:8சுமார் கி.மு. 787

    மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும், குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  6. ஆமோஸ் 4:9சுமார் கி.மு. 787

    “பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன். நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன். உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  7. ஆமோஸ் 4:10சுமார் கி.மு. 787

    “நான் எகிப்தில் செய்ததுபோல, உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன். உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன். அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்; கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  8. ஆமோஸ் 4:11சுமார் கி.மு. 787

    “நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல், உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன். நீங்கள் நெருப்பினின்று இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல் இருந்தீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  9. ஆமோஸ் 4:12சுமார் கி.மு. 787

    “ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே; இதை நான் செய்யப்போவதால், இஸ்ரயேலே, உன் இறைவனை நீ சந்திக்க ஆயத்தப்படு.”

  10. ஆமோஸ் 4:13சுமார் கி.மு. 787

    மலைகளை உருவாக்குகிறவரும், காற்றை உண்டாக்குகிறவரும் அவரே, மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே, பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே, சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர்.

  11. ஆமோஸ் 5:1சுமார் கி.மு. 787

    இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்:

  12. ஆமோஸ் 5:2சுமார் கி.மு. 787

    “இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள், இவள் இனி ஒருபோதும் எழும்பமாட்டாள். தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள். அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.”

  13. ஆமோஸ் 5:3சுமார் கி.மு. 787

    ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள். நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.”

  14. ஆமோஸ் 5:4சுமார் கி.மு. 787

    இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்.

  15. ஆமோஸ் 5:5சுமார் கி.மு. 787

    பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலுக்குப் போகாதீர்கள், பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள். கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும், பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும்,

  16. ஆமோஸ் 5:6சுமார் கி.மு. 787

    இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார். அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும். அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

  17. ஆமோஸ் 5:7சுமார் கி.மு. 787

    நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே, நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள்.

  18. ஆமோஸ் 5:8சுமார் கி.மு. 787

    அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும், பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே; கடலின் தண்ணீரை அழைத்து, பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே, “யெகோவா” என்பது அவர் பெயர்.

  19. ஆமோஸ் 5:9சுமார் கி.மு. 787

    அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து, அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார்.

  20. ஆமோஸ் 5:10சுமார் கி.மு. 787

    இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள், உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள்.

  21. ஆமோஸ் 5:11சுமார் கி.மு. 787

    ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள். ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும், அதில் வாழமாட்டீர்கள், செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும் அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள்.

  22. ஆமோஸ் 5:12சுமார் கி.மு. 787

    உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன். நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள். நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள்.

  23. ஆமோஸ் 5:13சுமார் கி.மு. 787

    ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும். ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது.

  24. ஆமோஸ் 5:14சுமார் கி.மு. 787

    தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே, அவர் உங்களோடிருப்பார்.

  25. ஆமோஸ் 5:15சுமார் கி.மு. 787

    தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள். ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா, யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார்.