உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Simeon பற்றிய பைபிள் வசனங்கள்

50 வசனங்கள் · 21 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. இரண்டாவது சீட்டு வம்சம் வம்சமாக சிமியோன் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளே அமைந்தது.

  2. அப்பட்டணங்களாவன: பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா,

  3. ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம்,

  4. எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,

  5. சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,

  6. பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும்.

  7. மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும்,

  8. அதோடு பாலாத்பெயேர் வரையுள்ள இந்தப் பட்டணங்களைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களும் ஆகும். ராமாத் நெகேப் பாலைவனத்திலுள்ளது. வம்சம் வம்சமாகச் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை இவையே.

  9. அப்பொழுது யூதாவின் மனிதர்கள் அவர்களின் சகோதரர்களான சிமியோனியரிடம், “நீங்கள் எங்களுடன் சேர்ந்து எங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்துக்குள் சென்று கானானியருடன் சண்டையிட வாருங்கள். அதற்குப் பதில் நாங்களும் உங்களுடன் சேர்ந்து உங்கள் பிரதேசத்துக்காகச் சண்டையிட வருவோம்” என்றார்கள். எனவே சிமியோனியர் அவர்களுடன் சென்றார்கள்.

  10. அதன்பின்பு யூதாவின் மனிதர் தங்கள் சகோதரரான சிமியோனியருடன் சென்று சேப்பாத்தில் வாழ்ந்த கானானியரைத் தாக்கி, அப்பட்டணம் முழுவதையும் அழித்தார்கள். அதனால் அந்த இடம் ஓர்மா என அழைக்கப்பட்டது.

  11. அவர்கள் பெயெர்செபா, மொலாதா, ஆத்சார்சூவால்,

  12. பில்கா, ஏத்சேம், தோலாத்,

  13. பெத்துயேல், ஓர்மா, சிக்லாகு,

  14. பெத்மார்காபோத், ஆத்சார்சூசிம், பெத்பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்தனர். தாவீது அரசனாகும்வரை இந்தப் பட்டணங்களெல்லாம் அவர்களுக்குரியதாகவே இருந்தன.

  15. அவற்றுடன் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆஷான் ஆகிய ஐந்து பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்களும் ஆகும்.

  16. இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள் பாகால்வரை பரந்திருந்தது. இந்த இடங்களே அவர்களுடைய குடியிருப்புகள். இவர்கள் தங்கள் வம்சாவழி அட்டவணையும் வைத்திருந்தார்கள்:

  17. அவர்கள் தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலைத் தேடி கேதோரின் எல்லையான பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிக்குச் சென்றனர்.

  18. அங்கே அவர்கள் மிகச் செழிப்பான மேய்ச்சலுக்குரிய இடத்தைக் கண்டனர். அந்த நிலம் விசாலமானதும், சமாதானமும் அமைதியுமுடையதுமாக இருந்தது. அங்கே காமியர் சிலர் முற்காலத்தில் வாழ்ந்திருந்தனர்.

  19. மேற்கூறப்பட்ட பெயர்களையுடைய இவர்கள், யூதாவில் எசேக்கியா அரசன் ஆட்சி செய்த காலத்தில் அங்கு வந்தார்கள். அவர்கள் அங்கு குடியிருந்த காமியர்களை அவர்களுடைய இடங்களில் தாக்கி, மெயூனியரையும் இன்றுவரை இருப்பதுபோல் முழுவதும் அழித்துவிட்டார்கள். பின்பு அவர்கள் அங்கே தங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சலுக்கு உகந்த வளமான இடம் இருந்ததினால் குடியேறினர்.

  20. பின்பு சிமியோனியரில் ஐந்நூறு பேரும், இஷியின் மகன்களான பெலத்தியா, நெயெரியா, ரெப்பாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் போய் சேயீர் மலைநாட்டைத் தாக்கினார்கள்.

  21. அங்கே தப்பி ஓடிப்போய் மறைந்திருந்த அமலேக்கியரை அவர்கள் கொன்று, அவர்கள் இந்நாள்வரைக்கும் அங்கேயே வாழ்கிறார்கள்.

  22. சிமியோனின் மனிதரில் போருக்கு ஆயத்தமாக வந்த வீரர்கள் 7,100 பேர்.

  23. இஸ்ரயேல் கோத்திரங்களுக்கு மேலாக இருந்த அதிகாரிகள்: ரூபனியருக்கு சிக்ரியின் மகன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் மகன் செபத்தியா;

  24. அதன்பின் அவன் யூதா மக்களையும், பென்யமீன் மக்களையும், அவர்களுக்குள்ளே குடியிருந்த எப்பிராயீம், மனாசே, சிமியோன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்களையும் கூடிவரச் செய்தான். ஏனெனில் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆசாவின் இறைவனாகிய யெகோவா அவனோடிருக்கிறார் என்பதைக் கண்டபோது, இஸ்ரயேலில் இருந்து அவனிடத்திற்கு வந்திருந்தார்கள்.

  25. நப்தலி வரையுள்ள மனாசே, எப்பிராயீம், சிமியோன் பட்டணங்களிலும் அவற்றைச் சுற்றியிருந்த பாழிடங்களிலும் இப்படிச் செய்தான்.