- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- ஏசாயா 33:1சுமார் கி.மு. 713
அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே, ஐயோ உனக்குக் கேடு! காட்டிக்கொடுக்கப்படாதிருந்த துரோகியே, ஐயோ உனக்குக் கேடு! நீ அழிப்பதை நிறுத்தும்போது, நீ அழிக்கப்படுவாய்; நீ காட்டிக்கொடுப்பதை நிறுத்தும்போது, நீ காட்டிக்கொடுக்கப்படுவாய்.
- ஏசாயா 33:2சுமார் கி.மு. 713
யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்; நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். காலைதோறும் எங்கள் பெலனாயும், துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும்.
- ஏசாயா 33:3சுமார் கி.மு. 713
உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்; நீர் எழும்பும்போது நாடுகள் சிதறுண்டு போகிறார்கள்.
- ஏசாயா 33:4சுமார் கி.மு. 713
நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல, உங்கள் கொள்ளைப்பொருள் அழிக்கப்படுகிறது; வெட்டுக்கிளிக் கூட்டம்போல மனிதர் அவைகளின்மேல் பாய்கிறார்கள்.
- ஏசாயா 33:5சுமார் கி.மு. 713
யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார், ஏனென்றால் அவர் உன்னதத்தில் வாழ்கிறார். அவர் சீயோனை நீதியாலும் நியாயத்தாலும் நிரப்புவார்.
- ஏசாயா 33:6சுமார் கி.மு. 713
அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்; அவர் இரட்சிப்பும், ஞானமும், அறிவும் நிறைந்த ஒரு செல்வக் களஞ்சியமுமாயிருப்பார். யெகோவாவுக்குப் பயந்து நடத்தலே இந்தத் திரவியத்தை அடைவதற்கான திறவுகோல்.
- ஏசாயா 33:7சுமார் கி.மு. 713
இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்; சமாதானத் தூதுவர்கள் மனங்கசந்து அழுகிறார்கள்.
- ஏசாயா 33:8சுமார் கி.மு. 713
பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன; தெருக்களிலே பிரயாணிகளைக் காணவில்லை. உடன்படிக்கை மீறப்பட்டிருக்கிறது, அதன் சாட்சிகள் அவமதிக்கப்பட்டார்கள், மதிக்கப்படுவார் ஒருவரும் இல்லை.
- ஏசாயா 33:9சுமார் கி.மு. 713
நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது, லெபனோன் வெட்கப்பட்டு வாடுகிறது. சாரோன் சமவெளி வனாந்திரத்தைப் போலிருக்கிறது, பாசானும், கர்மேலும் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
- ஏசாயா 33:10சுமார் கி.மு. 713
“இப்பொழுது நான் எழும்புவேன், இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன். இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
- ஏசாயா 33:11சுமார் கி.மு. 713
“நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து, வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்; உங்களது சுவாசம் உங்களைச் சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கும்.
- ஏசாயா 33:12சுமார் கி.மு. 713
மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்; அவர்கள் வெட்டப்பட்ட முட்செடிகள்போல் நெருப்புச் சுவாலையில் எரிக்கப்படுவார்கள்.”
- ஏசாயா 33:13சுமார் கி.மு. 713
தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்; அருகில் உள்ளோரே, எனது வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்!
- ஏசாயா 33:14சுமார் கி.மு. 713
சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்; இறைவனை மறுதலிக்கிறவர்களை நடுக்கம் பற்றிக்கொள்கிறது: “சுட்டெரிக்கும் நெருப்புடன் நம்மில் எவர் வாழமுடியும்? நித்தியமாய் எரியும் நெருப்புடன் நம்மில் எவர் குடியிருக்க முடியும்?”
- ஏசாயா 33:15சுமார் கி.மு. 713
நீதியுடன் நடப்பவரும், சரியானதைப் பேசுபவரும், தட்டிப் பறித்த இலாபத்தை வெறுப்பவரும், இலஞ்சம் வாங்க தன் கைகளை நீட்டாதவரும், கொலைசெய்வதற்கான சதித்திட்டங்களைக் கேட்காமல் தன் காதை அடைத்துக்கொள்பவரும், தீயவற்றைப் பாராமல் தன் கண்களை மூடுகிறவரும்,
- ஏசாயா 33:16சுமார் கி.மு. 713
அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்; கன்மலைகளின் கோட்டையே அவர்களுடைய புகலிடமாய் இருக்கும். அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும், அவர்களுக்குத் தண்ணீரும் குறைவில்லாமல் இருக்கும்.
- ஏசாயா 33:17சுமார் கி.மு. 713
உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்; வெகுதூரத்தில் விசாலமாகப் பரந்திருக்கும் நாட்டையும் காணும்.
- ஏசாயா 33:18சுமார் கி.மு. 713
நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து: “அந்த பிரதான அதிகாரி எங்கே? வருமானத்தை எடுத்தவன் எங்கே? கோபுரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி எங்கே?” என்று கேட்பீர்கள்.
- ஏசாயா 33:19சுமார் கி.மு. 713
விளங்காத பேச்சும், புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியும் உள்ள அந்த கொடூரமான மக்களை நீங்கள் இனி காணமாட்டீர்கள்.
- ஏசாயா 33:20சுமார் கி.மு. 713
நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்; உங்கள் கண்கள் அமைதி நிறைந்த இருப்பிடமும், அசைக்கப்படாத கூடாரமுமாகிய எருசலேமைக் காணும். அதன் முளைகள் ஒருபோதும் பிடுங்கப்படமாட்டாது, அதன் கயிறுகள் ஒன்றாவது அறுக்கப்படவுமாட்டாது.
- ஏசாயா 33:21சுமார் கி.மு. 713
யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார். அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும். துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ, பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை.
- ஏசாயா 33:22சுமார் கி.மு. 713
யெகோவாவே நமது நீதிபதி, யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர். யெகோவாவே நமது அரசர்; நம்மைக் காப்பாற்றுபவரும் அவரே.
- ஏசாயா 33:23சுமார் கி.மு. 713
உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன, பாய்மரங்கள் இறுக்கமாகக் கட்டப்படவில்லை, பாய்களும் விரிக்கப்படவில்லை. அப்பொழுது ஏராளமான கொள்ளைப்பொருட்கள் பங்கிடப்படும்; முடவர்கள்கூட கொள்ளைப்பொருட்களைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.
- ஏசாயா 33:24சுமார் கி.மு. 713
சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்; அங்கு வாழ்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
- ஏசாயா 34:1சுமார் கி.மு. 713
நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும்.