Skip to content

Wives பற்றிய பைபிள் வசனங்கள்

73 வசனங்கள் · 37 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து, மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள்.

  2. அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.

  3. அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்; அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.

  4. அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.

  5. மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.

  6. தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்; அவளுடைய விளக்கு இரவிலும் அணைவதில்லை.

  7. அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு, தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.

  8. அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து, தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள்.

  9. அவளின் வீட்டார் எல்லோருக்கும் குளிர்க்கால உடை இருப்பதால், உறைபனிக்காலம் வரும்போது அவள் பயப்படமாட்டாள்.

  10. அவள் தனது படுக்கைக்குரிய போர்வையைத் தானே நெய்கிறாள்; சிறந்த பட்டாடை மற்றும் பலவண்ண உடைகளையும் உடுத்திக்கொள்கிறாள்.

  11. அவளுடைய கணவன் பட்டண வாசலில், குடிமக்களின் தலைவர்களோடு உட்கார்ந்திருக்கையில் மதிக்கப்படுகிறான்.

  12. அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள், அவள் இடைக் கச்சைகளையும் செய்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கிறாள்.

  13. அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்; வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள்.

  14. அவள் ஞானமாய்ப் பேசுகிறாள், அவளுடைய நாவில் தயவான அறிவுரைகள் இருக்கின்றன.

  15. அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்; அவள் சோம்பலாயிருந்து உணவுக்காக எதிர்பார்த்து இருப்பதில்லை.

  16. அவளுடைய பிள்ளைகள் எழுந்து அவளை, “ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்கிறார்கள்; அவளுடைய கணவனும் அவளை இப்படிப் புகழ்கிறான்:

  17. ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைதுசெய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தம் அவன் இதைச் செய்திருந்தான்.

  18. அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.

  19. அனனியா என்னும் பெயருடைய ஒருவன், தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து, ஒரு சிறு நிலத்தை விற்றான்.

  20. விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.

  21. அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான்.

  22. அவன் ஜெப ஆலயத்திலே துணிவுடன் பேச ஆரம்பித்தான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவன் பேசுவதைக் கேட்டபொழுது, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், இறைவனுடைய வழியை அவனுக்கு இன்னும் அதிகத் தெளிவாய் விளக்கிக் கூறினார்கள்.

  23. உதாரணமாக, திருமணமான ஒரு பெண், அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்தால், அவள் அந்தத் திருமணச் சட்டத்திலிருந்து விடுபடுகிறாள்.

  24. எனவே, தன் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் ஒரு விபசாரி என்றே சொல்லப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்து விட்டால், அவள் சட்டத்திலிருந்து விடுபடுவாள். அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தாலும் அவள் விபசாரியல்ல.

  25. கணவன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அதுபோலவே, மனைவியும் தன் கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்.