உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.

  2. இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.

  3. என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.

  4. கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக உமது மகிமையை வைத்திருக்கிறீர்.

  5. உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக வல்லமையை உறுதிப்படுத்தினீர்.

  6. உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,

  7. மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?

  8. நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.

  9. உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்:

  10. எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும்

  11. ஆகாயத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.

  12. எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!

  13. பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: “ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.

  14. பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் இருளிலிருந்து எய்வதற்காக தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.

  15. அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”

  16. யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.

  17. யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, அவர் மனதார வெறுக்கிறார்.

  18. அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.

  19. யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.

  20. செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.

  21. ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.

  22. முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.

  23. “எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

  24. “ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதினால் நான் இப்பொழுது எழுந்து, அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.

  25. யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. அவை களிமண் உலையில் ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.