உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தீயவர்களோ அப்படியல்ல, அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

  2. ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.

  3. ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.

  4. நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?

  5. பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:

  6. “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”

  7. பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; யெகோவா அவர்களை இகழ்கிறார்.

  8. அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:

  9. “நான் எனது அரசனை என் பரிசுத்த மலையாகிய சீயோனில் அமர்த்தியிருக்கிறேன்.”

  10. நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.

  11. என்னிடம் கேளும், நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.

  12. நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; மண்பாண்டத்தை உடைப்பதுபோல், நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”

  13. ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.

  14. பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.

  15. இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  16. தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம். யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்! எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.

  17. அநேகர் என்னைக்குறித்து, “இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.

  18. ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும், என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.

  19. நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.

  20. நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்; யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.

  21. எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும், நான் பயப்படமாட்டேன்.

  22. யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.

  23. யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

  24. கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.

  25. மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?