உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்: Intercessional Psalms

40 வசனங்கள் · 16 அம்சங்கள்

Intercessional Psalms பற்றிய வசனங்கள்

  1. பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக; யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக.

  2. யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி, சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக.

  3. யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து, உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக.

  4. யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து, உனது திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வாராக.

  5. யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்; நமது இறைவனுடைய பெயரில் நாங்கள் வெற்றிக்கொடிகளை உயர்த்துவோம். யெகோவா உன் வேண்டுதல்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பாராக.

  6. நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்: யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார். அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார்.

  7. சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம்.

  8. அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள், நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம்.

  9. யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்! நாங்கள் கூப்பிடும்போது எங்களுக்குப் பதில் தாரும்.

  10. கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.

  11. இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.

  12. இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

  13. நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.

  14. இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.

  15. அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

  16. இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.

  17. சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.

  18. எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன.

  19. நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.

  20. யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.

  21. தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.

  22. எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.

  23. உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”

  24. என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.

  25. எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன்.