உள்ளடக்கத்திற்குச் செல்க

Genealogy பற்றிய பைபிள் வசனங்கள்

114 வசனங்கள் · 8 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான்.

  2. ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன்.

  3. சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை.

  4. தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள்.

  5. தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.

  6. பேரேசின் குடும்ப அட்டவணை இதுவே: பேரேஸ் எஸ்ரோனின் தகப்பன்,

  7. எஸ்ரோன் ராமின் தகப்பன், ராம் அம்மினதாபின் தகப்பன்,

  8. அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,

  9. சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸ் ஓபேதின் தகப்பன்,

  10. ஓபேத் ஈசாயின் தகப்பன், ஈசாய் தாவீதின் தகப்பன்.

  11. ஆதாம், சேத், ஏனோஸ்,

  12. கேனான், மகலாலெயேல், யாரேத்,

  13. ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.

  14. நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.

  15. யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.

  16. கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.

  17. யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.

  18. காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.

  19. கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.

  20. கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.

  21. மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,

  22. பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.

  23. கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,

  24. எபூசியர், எமோரியர், கிர்காசியர்,

  25. ஏவியர், அர்கீயர், சீனியர்,