- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
- எண்ணாகமம் 22:30சுமார் கி.மு. 1452
அதற்குக் கழுதை பிலேயாமிடம், “இன்றுவரை நீர் எப்பொழுதுமே சவாரி செய்துவந்த உமது சொந்தக் கழுதையல்லவா நான்? உமக்கு இப்படிச் செய்யும் வழக்கம் என்னிடம் இருந்ததுண்டோ?” என்று கேட்டது. அதற்கு அவன், “இல்லை” என்றான்.
- எண்ணாகமம் 22:31சுமார் கி.மு. 1452
அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார். அங்கே யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் வீதியில் நிற்பதை அவன் கண்டான். உடனே பிலேயாம் வணங்கி, முகங்குப்புற விழுந்தான்.
- எண்ணாகமம் 22:32சுமார் கி.மு. 1452
அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் அவனிடம், “நீ ஏன் உன் கழுதையை இவ்வாறு மூன்றுமுறை அடித்தாய்? நான் உன்னை எதிர்க்கவே இங்கு வந்திருக்கிறேன். உன்னுடைய பாதை எனக்கு முன்பாகத் துணிகரமானதாய் இருக்கிறது.
- எண்ணாகமம் 22:33சுமார் கி.மு. 1452
கழுதை என்னைக் கண்டு இந்த மூன்றுதரமும் மறுபக்கமாகத் திரும்பியது. அது அப்படி திரும்பியிராவிட்டால் நிச்சயமாக எப்பொழுதோ நான் உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால் கழுதையையோ தப்பவிட்டிருப்பேன்” என்றார்.
- எண்ணாகமம் 22:34சுமார் கி.மு. 1452
அப்பொழுது பிலேயாம் யெகோவாவினுடைய தூதனானவரிடம், “நான் பாவம் செய்தேன். என்னை எதிர்ப்பதற்கு நீர் வீதியில் நின்றுகொண்டிருந்ததை நான் அறியவில்லை. இதினிமித்தம் இப்பொழுது நீர் கோபங்கொள்வீரானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றான்.
- எண்ணாகமம் 22:35சுமார் கி.மு. 1452
யெகோவாவினுடைய தூதனானவர் பிலேயாமிடம், “நீ இந்த மனிதர்களுடன் போ. ஆனால் நான் உனக்குச் சொல்வதையே நீ பேசு” என்றார். எனவே பிலேயாம் பாலாக்கின் தலைவர்களுடன் போனான்.
- எண்ணாகமம் 22:36சுமார் கி.மு. 1452
பிலேயாம் வருகிறான் என்பதை பாலாக் கேள்விப்பட்டபோது பிலேயாமைச் சந்திப்பதற்குத் தன் பிரதேசத்தின் ஓரத்திலுள்ள அர்னோன் ஆற்று எல்லையிலுள்ள மோவாப் பட்டணத்திற்குப் போனான்.
- எண்ணாகமம் 22:37சுமார் கி.மு. 1452
அப்பொழுது பாலாக் பிலேயாமிடம், “நான் உனக்கு அவசர அழைப்பு அனுப்பவில்லையா? நீ ஏன் என்னிடம் வரவில்லை? உனக்குத் தகுந்த வெகுமதி கொடுக்க எனக்கு முடியாதா?” என்றான்.
- எண்ணாகமம் 22:38சுமார் கி.மு. 1452
பிலேயாம் பாலாக்கிடம், “இப்பொழுது நான் உன்னிடம் வந்துவிட்டேன். என்னால் எதையாவது சொல்லமுடியுமோ? இறைவன் என் வாயில் தரும் வார்த்தைகளை மட்டுமே நான் பேசவேண்டும்” என்றான்.
- எண்ணாகமம் 22:39சுமார் கி.மு. 1452
அப்பொழுது பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குப் போனான்.
- எண்ணாகமம் 22:40சுமார் கி.மு. 1452
பாலாக் மாடுகளையும், செம்மறியாடுகளையும் பலியிட்டு அதிலிருந்து கொஞ்சத்தை பிலேயாமுக்கும், அவனோடிருந்த தலைவர்களுக்கும் கொடுத்தனுப்பினான்.
- எண்ணாகமம் 22:41சுமார் கி.மு. 1452
அடுத்தநாள் காலை பிலேயாமை பாமோத் பாகாலுக்குக் கூட்டிக்கொண்டு போனான். அங்கேயிருந்து இஸ்ரயேல் மக்களின் ஒரு பகுதியினரைப் பிலேயாம் கண்டான்.
- எண்ணாகமம் 23:1சுமார் கி.மு. 1452
பிலேயாம் பாலாக்கிடம், “இங்கே எனக்காக ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஆயத்தப்படுத்து” என்றான்.
- எண்ணாகமம் 23:2சுமார் கி.மு. 1452
பிலேயாம் சொன்னதுபோலவே பாலாக் செய்தான். அவர்கள் இருவரும் ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலியிட்டார்கள்.
- எண்ணாகமம் 23:3சுமார் கி.மு. 1452
பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “நீ உன் காணிக்கைக்கு அருகில் நில். நான் அப்பால் போகிறேன். ஒருவேளை யெகோவா என்னைச் சந்திக்கவரலாம். அவர் எனக்கு எதை வெளிப்படுத்துகிறாரோ அதை நான் உனக்குச் சொல்வேன்” என்று சொல்லி அவன் ஒரு வறண்ட மேட்டை நோக்கிப் போனான்.
- எண்ணாகமம் 23:4சுமார் கி.மு. 1452
அங்கே இறைவன் பிலேயாமைச் சந்தித்தார். பிலேயாம் யெகோவாவிடம், “நான் ஏழு பலிபீடங்களை உண்டுபண்ணி ஒவ்வொன்றிலும் ஒரு காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலியிட்டேன்” என்றான்.
- எண்ணாகமம் 23:5சுமார் கி.மு. 1452
அப்பொழுது யெகோவா பிலேயாமின் வாயில் ஒரு செய்தியைக் கொடுத்து, “நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இந்தச் செய்தியை அவனுக்குச் சொல்” என்றார்.
- எண்ணாகமம் 23:6சுமார் கி.மு. 1452
பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிவந்து, அவன் மோவாப் தலைவர்களுடன் தன் காணிக்கைக்கு அருகே நிற்பதைக் கண்டான்.
- எண்ணாகமம் 23:7சுமார் கி.மு. 1452
அங்கே பிலேயாம் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது: “பாலாக் என்னை ஆராமிலிருந்து கொண்டுவந்தான், மோவாபின் அரசன் கிழக்கு மலைகளிலிருந்து கொண்டுவந்தான். ‘வா,’ எனக்காக யாக்கோபைச் ‘சபி; வந்து இஸ்ரயேலைப் பகிரங்கமாகக் குற்றப்படுத்து’ என்றான்.
- எண்ணாகமம் 23:8சுமார் கி.மு. 1452
இறைவன் சபிக்காதவர்களை நான் எப்படி சபிக்கலாம்? யெகோவா பகிரங்கமாய்க் குற்றப்படுத்தாதவர்களை நான் எப்படிக் குற்றப்படுத்தலாம்?
- எண்ணாகமம் 23:9சுமார் கி.மு. 1452
கற்பாறை உச்சியிலிருந்து நான் அவர்களைக் காண்கிறேன்; மேடுகளிலிருந்து நான் அவர்களைப் பார்க்கிறேன். அங்கே தங்களை வேறு நாடுகளிலிருந்து வேறுபிரித்துக்கொண்டு தனியாக வாழ்கிற மக்களைக் காண்கிறேன்.
- எண்ணாகமம் 23:10சுமார் கி.மு. 1452
யாக்கோபின் புழுதியை யாரால் எண்ண முடியும்? இஸ்ரயேலின் காற்பங்கை யாரால் கணக்கிட முடியும்? நேர்மையானவர்கள் இறப்பது போலவே நானும் இறக்கவேண்டும்; அவர்களுடைய முடிவைப்போலவே என் முடிவும் இருக்கட்டும்.”
- எண்ணாகமம் 23:11சுமார் கி.மு. 1452
அப்பொழுது பாலாக் பிலேயாமிடம், “நீ எனக்கு என்ன செய்தாய்? நான் என் பகைவர்களைச் சபிக்கவே உன்னைக் கொண்டுவந்தேன். ஆனால் நீயோ, அவர்களை ஆசீர்வதிக்கிறாயே அல்லாமல் வேறெதையும் செய்யவில்லையே” என்றான்.
- எண்ணாகமம் 23:12சுமார் கி.மு. 1452
அதற்கு பிலேயாம், “யெகோவா எனக்குச் சொல்லும்படி வாயில் கொடுக்கிறதை நான் பேச வேண்டாமோ?” என்றான்.
- எண்ணாகமம் 23:13சுமார் கி.மு. 1452
அதற்கு பாலாக் பிலேயாமிடம், “நீ அவர்களைப் பார்க்கக்கூடிய வேறு இடத்திற்கு என்னுடன் வா. அங்கு இஸ்ரயேலர் எல்லோரையும் அல்ல; அவர்களில் ஒரு பகுதியினரை மட்டுமே காண்பாய். அங்கிருந்து அவர்களை எனக்காகச் சபி” என்றான்.