உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யாத்திராகமம் 39:34சுமார் கி.மு. 1491

    அத்துடன் சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, மறைக்கும் திரை,

  2. யாத்திராகமம் 39:35சுமார் கி.மு. 1491

    சாட்சிப்பெட்டியுடன் அதன் கம்புகள், அதன் கிருபாசனம்,

  3. யாத்திராகமம் 39:36சுமார் கி.மு. 1491

    மேஜையுடன் அதற்குரிய எல்லா பொருட்கள், இறைசமுக அப்பம்,

  4. யாத்திராகமம் 39:37சுமார் கி.மு. 1491

    சுத்தத் தங்கத்தாலான குத்துவிளக்கு, அதில் வரிசையாக உள்ள அகல்விளக்குகள், அதன் உபகரணங்கள், வெளிச்சத்துக்கான எண்ணெய்,

  5. யாத்திராகமம் 39:38சுமார் கி.மு. 1491

    தங்கத் தூபபீடம், அபிஷேக எண்ணெய், நறுமணத்தூள், கூடார வாசலின் திரை,

  6. யாத்திராகமம் 39:39சுமார் கி.மு. 1491

    வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கலச் சல்லடை, அதன் கம்புகள், அதன் எல்லா பாத்திரங்கள், தொட்டி, அதன் கால்கள்,

  7. யாத்திராகமம் 39:40சுமார் கி.மு. 1491

    முற்றத்திற்கான திரைகள், அதற்குரிய கம்புகள், அடித்தளங்கள், முற்ற வாசலுக்கான திரைகள், அதன் கயிறுகள், முற்றத்திலுள்ள முளைகள், சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் எல்லா பொருட்கள்;

  8. யாத்திராகமம் 39:41சுமார் கி.மு. 1491

    உட்பட ஆசாரியனான ஆரோனுக்கான பரிசுத்த உடைகளும், அவன் மகன்கள் பரிசுத்த இடத்தில் ஆசாரியப் பணிசெய்யும்போது உடுத்தும் உடைகளுமான நெய்யப்பட்ட உடைகளையும் கொண்டுவந்தார்கள்.

  9. யாத்திராகமம் 39:42சுமார் கி.மு. 1491

    யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்திருந்தார்கள்.

  10. யாத்திராகமம் 39:43சுமார் கி.மு. 1491

    மோசே அவைகளையெல்லாம் பார்வையிட்டான். அப்பொழுது யெகோவா கட்டளையிட்டபடியே அவைகளைச் செய்திருக்கிறார்கள் என்று மோசே கண்டான். எனவே மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

  11. யாத்திராகமம் 40:1சுமார் கி.மு. 1491

    பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  12. யாத்திராகமம் 40:2சுமார் கி.மு. 1491

    “நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும்.

  13. யாத்திராகமம் 40:3சுமார் கி.மு. 1491

    அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.

  14. யாத்திராகமம் 40:4சுமார் கி.மு. 1491

    மேஜையைக் கொண்டுவந்து, அதற்குரியவற்றை மேஜையின்மேல் வைக்கவேண்டும். அதன்பின் குத்துவிளக்குகளைக் கொண்டுவந்து அதன் அகல்விளக்குகளை வைக்கவேண்டும்.

  15. யாத்திராகமம் 40:5சுமார் கி.மு. 1491

    தங்கத் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டியின் முன் வைத்து, இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைப்போட வேண்டும்.

  16. யாத்திராகமம் 40:6சுமார் கி.மு. 1491

    “பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும்.

  17. யாத்திராகமம் 40:7சுமார் கி.மு. 1491

    தொட்டியை சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றவேண்டும்.

  18. யாத்திராகமம் 40:8சுமார் கி.மு. 1491

    அவற்றைச் சுற்றிலும் முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப்போட வேண்டும்.

  19. யாத்திராகமம் 40:9சுமார் கி.மு. 1491

    “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, இறைசமுகக் கூடாரத்தையும், அங்குள்ள எல்லாவற்றையும் அபிஷேகம்பண்ணு. அதையும் அதன் பணிமுட்டுகளையும் அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது அது பரிசுத்தமாயிருக்கும்.

  20. யாத்திராகமம் 40:10சுமார் கி.மு. 1491

    பின்பு தகன பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து, பீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும்.

  21. யாத்திராகமம் 40:11சுமார் கி.மு. 1491

    பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம்பண்ணி, அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.

  22. யாத்திராகமம் 40:12சுமார் கி.மு. 1491

    “அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும்.

  23. யாத்திராகமம் 40:13சுமார் கி.மு. 1491

    ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை உடுத்தி, அவன் ஆசாரியராக எனக்குப் பணிசெய்வதற்கு அவனை அபிஷேகம்பண்ணி, அர்ப்பணம் செய்யவேண்டும்.

  24. யாத்திராகமம் 40:14சுமார் கி.மு. 1491

    அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து.

  25. யாத்திராகமம் 40:15சுமார் கி.மு. 1491

    அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.”