உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.

  2. சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  3. உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.

  4. உன் மனைவி உன் வீட்டிற்குள் கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.

  5. ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

  6. யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; உன் வாழ்நாட்களெல்லாம் எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.

  7. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.

  8. சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்று இஸ்ரயேலர் சொல்லட்டும்;

  9. “என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள், ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.

  10. உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

  11. ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்; அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”

  12. சீயோனை வெறுக்கிற அனைவரும் வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.

  13. அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே.

  14. அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது; அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.

  15. வழிப்போக்கர்கள் அவர்களிடம், “யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்; யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்றும் சொல்லாதிருக்கட்டும்.

  16. சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

  17. யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.

  18. யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?

  19. ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

  20. நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

  21. விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும், என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.

  22. இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக; ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும், அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.

  23. அவர்தாமே இஸ்ரயேலரை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.

  24. சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.

  25. பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.