உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 1 நாளாகமம் 23:32சுமார் கி.மு. 1015

    எனவே லேவியரான இவர்கள் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர்களின் தலைமையின்கீழ், யெகோவாவின் ஆலயப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திற்கும், மகா பரிசுத்த இடத்திற்கும் பொறுப்புகளைச் செய்தார்கள்.

  2. 1 நாளாகமம் 24:1சுமார் கி.மு. 1015

    ஆரோனின் மகன்களின் பிரிவுகள் இவையே: ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர்.

  3. 1 நாளாகமம் 24:2சுமார் கி.மு. 1015

    நாதாப்பும், அபியூவும் தங்கள் தகப்பன் இறப்பதற்கு முன்னே இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு மகன்கள் இருக்கவில்லை. அதனால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரியர்களாகப் பணிபுரிந்தனர்.

  4. 1 நாளாகமம் 24:3சுமார் கி.மு. 1015

    எலெயாசாரின் வழித்தோன்றலான சாதோக்கின் உதவியுடனும், இத்தாமாரின் வழித்தோன்றலான அகிமெலேக்கின் உதவியுடனும் நியமிக்கப்பட்ட பணியைச் செய்வதற்கென, தாவீது அவர்களைப் பிரிவுகளாகப் பிரித்தான்.

  5. 1 நாளாகமம் 24:4சுமார் கி.மு. 1015

    இத்தாமாரின் வழித்தோன்றலைவிட எலெயாசாரின் வழித்தோன்றலில் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதற்கேற்ப எலெயாசாரின் சந்ததியிலிருந்து பதினாறுபேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், இத்தாமாரின் சந்ததியிலிருந்து எட்டுபேர் குடும்பத் தலைவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.

  6. 1 நாளாகமம் 24:5சுமார் கி.மு. 1015

    எலெயாசாரின் சந்ததியிலும், இத்தாமாரின் சந்ததியிலும் பரிசுத்த இடத்து அலுவலர்களும், இறைவனுக்குப் பணிசெய்யும் அலுவலர்களும் இருந்தபடியால், அவர்களைப் பாரபட்சமின்றி சீட்டுப்போட்டுப் பிரித்தார்கள்.

  7. 1 நாளாகமம் 24:6சுமார் கி.மு. 1015

    லேவியனும் எழுத்தாளனுமான நெதனெயேலின் மகன் செமாயா அரசன், அதிகாரிகள், ஆசாரியன் சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலேக்கு, ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் குடும்பத் தலைவர்கள் ஆகியோர் முன்பாக அவர்களுடைய பெயர்களைப் பதிவுசெய்தான். எலெயாசாரின் குடும்பத்திலிருந்து ஒருவனும், இத்தாமாரின் குடும்பத்திலிருந்து ஒருவனுமாக சீட்டின் மூலம் மாறிமாறி தெரிவு செய்யப்பட்டனர்.

  8. 1 நாளாகமம் 24:7சுமார் கி.மு. 1015

    முதலாவது சீட்டு யோயாரீபுக்கும், இரண்டாவது யெதாயாவுக்கும்,

  9. 1 நாளாகமம் 24:8சுமார் கி.மு. 1015

    மூன்றாவது ஆரீமுக்கும், நான்காவது செயோரீமுக்கும் விழுந்தன.

  10. 1 நாளாகமம் 24:9சுமார் கி.மு. 1015

    ஐந்தாவது சீட்டு மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனுக்கும்,

  11. 1 நாளாகமம் 24:10சுமார் கி.மு. 1015

    ஏழாவது அக்கோத்ஸிற்கும், எட்டாவது அபியாவிற்கும் விழுந்தன.

  12. 1 நாளாகமம் 24:11சுமார் கி.மு. 1015

    ஒன்பதாவது சீட்டு யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும் விழுந்தன.

  13. 1 நாளாகமம் 24:12சுமார் கி.மு. 1015

    பதினோராவது எலியாசீபிற்கும், பன்னிரண்டாவது யாக்கீமினுக்கும்,

  14. 1 நாளாகமம் 24:13சுமார் கி.மு. 1015

    பதிமூன்றாவது சீட்டு உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும் விழுந்தன.

  15. 1 நாளாகமம் 24:14சுமார் கி.மு. 1015

    பதினைந்தாவது சீட்டு பில்காவிற்கும், பதினாறாவது இம்மேருக்கும் விழுந்தன.

  16. 1 நாளாகமம் 24:15சுமார் கி.மு. 1015

    பதினேழாவது சீட்டு ஏசீரினுக்கும், பதினெட்டாவது அப்சேஸிற்கும் விழுந்தன.

  17. 1 நாளாகமம் 24:16சுமார் கி.மு. 1015

    பத்தொன்பதாவது சீட்டு பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும் விழுந்தன.

  18. 1 நாளாகமம் 24:17சுமார் கி.மு. 1015

    இருபத்தோராவது சீட்டு யாகினிற்கும், இருபத்திரெண்டாவது காமுலிற்கும் விழுந்தன.

  19. 1 நாளாகமம் 24:18சுமார் கி.மு. 1015

    இருபத்துமூன்றாவது சீட்டு தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தன.

  20. 1 நாளாகமம் 24:19சுமார் கி.மு. 1015

    யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் அவர்கள் போய், பணிசெய்வதற்கான ஒழுங்குமுறை இதுவே: இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அவர்கள் முற்பிதாவான ஆரோனுக்குக் கட்டளையிட்டபடியே, பணிசெய்வதற்கென நியமிக்கப்பட்டார்கள்.

  21. 1 நாளாகமம் 24:20சுமார் கி.மு. 1015

    லேவியின் வழித்தோன்றலில் மிகுதியாயிருந்தோர் யாரெனில்: அம்ராமின் மகன்களில் சூபயேல், சூபயேலின் மகன்களில் எகேதியா,

  22. 1 நாளாகமம் 24:21சுமார் கி.மு. 1015

    ரெகேபியாவின் மகன்களில் மூத்தவனான இஷியா,

  23. 1 நாளாகமம் 24:22சுமார் கி.மு. 1015

    இத்சாரியரில் செலெமோத்து, செலெமோத்தின் மகன்களில் யாகாத்,

  24. 1 நாளாகமம் 24:23சுமார் கி.மு. 1015

    எப்ரோனின் மகன்களில் மூத்தவன் யெரியா, இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்,

  25. 1 நாளாகமம் 24:24சுமார் கி.மு. 1015

    ஊசியேலின் மகன்களில் மீகா, மீகாவின் மகன்களில் சாமீர்,