உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 1 நாளாகமம் 24:25சுமார் கி.மு. 1015

    மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன்களில் சகரியா,

  2. 1 நாளாகமம் 24:26சுமார் கி.மு. 1015

    மெராரியின் மகன்களில் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். யாசியாவின் மகன் பேனோவா,

  3. 1 நாளாகமம் 24:27சுமார் கி.மு. 1015

    மெராரியின் மகன்களில் யாசியாவின் மகன்களிலிருந்து பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்கள்.

  4. 1 நாளாகமம் 24:28சுமார் கி.மு. 1015

    மகேலியின் மகன்களில் எலெயாசார், இவனுக்கு மகன்கள் இருக்கவில்லை.

  5. 1 நாளாகமம் 24:29சுமார் கி.மு. 1015

    கீஸின் மகன்களில் யெராமியேல்,

  6. 1 நாளாகமம் 24:30சுமார் கி.மு. 1015

    மூஷியின் மகன்களில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்கள் ஆவர். இவர்களும் தங்களுடைய குடும்பங்களின்படியே லேவியர்கள் ஆவர்.

  7. 1 நாளாகமம் 24:31சுமார் கி.மு. 1015

    இவர்களும் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர் செய்ததுபோல, அரசன் தாவீது முன்பும், சாதோக்குக்கும், அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களுக்கும், லேவியருக்கும் முன்பாகத் தங்கள் பணிகளுக்காக சீட்டுப்போட்டார்கள். மூத்த சகோதரனின் குடும்பங்களும், இளைய சகோதரனின் குடும்பங்களும் ஒரேவிதமாக நடத்தப்பட்டன.

  8. 1 நாளாகமம் 25:1சுமார் கி.மு. 1015

    மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:

  9. 1 நாளாகமம் 25:2சுமார் கி.மு. 1015

    ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அசரேலா என்பவர்கள், ஆசாப்பின் மகன்கள் ஆசாப்பின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் இறைவாக்கு உரைத்தனர்.

  10. 1 நாளாகமம் 25:3சுமார் கி.மு. 1015

    எதுத்தூனின் மகன்களில் கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர்.

  11. 1 நாளாகமம் 25:4சுமார் கி.மு. 1015

    ஏமானின் மகன்கள் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுயேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்தீர், மகாசியோத் ஆகியோர்.

  12. 1 நாளாகமம் 25:5சுமார் கி.மு. 1015

    இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார்.

  13. 1 நாளாகமம் 25:6சுமார் கி.மு. 1015

    இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.

  14. 1 நாளாகமம் 25:7சுமார் கி.மு. 1015

    இவர்கள் யாவரும் யெகோவாவின் பாடல்களைப் பாடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், திறமைசாலிகளுமாக இருந்தார்கள். தங்கள் உறவினர்களுடன் அவர்கள் இருநூற்று எண்பத்தெட்டுபேராய் இருந்தனர்.

  15. 1 நாளாகமம் 25:8சுமார் கி.மு. 1015

    அவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளுக்கென சீட்டுப்போட்டார்கள்.

  16. 1 நாளாகமம் 25:9சுமார் கி.மு. 1015

    முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது.

  17. 1 நாளாகமம் 25:10சுமார் கி.மு. 1015

    மூன்றாவது சீட்டு சக்கூருக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  18. 1 நாளாகமம் 25:11சுமார் கி.மு. 1015

    நான்காவது சீட்டு இஸ்ரிக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  19. 1 நாளாகமம் 25:12சுமார் கி.மு. 1015

    ஐந்தாவது சீட்டு நெதானியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  20. 1 நாளாகமம் 25:13சுமார் கி.மு. 1015

    ஆறாவது சீட்டு புக்கியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  21. 1 நாளாகமம் 25:14சுமார் கி.மு. 1015

    ஏழாவது சீட்டு எசரேலாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  22. 1 நாளாகமம் 25:15சுமார் கி.மு. 1015

    எட்டாவது சீட்டு எஷாயாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  23. 1 நாளாகமம் 25:16சுமார் கி.மு. 1015

    ஒன்பதாவது சீட்டு மத்தனியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  24. 1 நாளாகமம் 25:17சுமார் கி.மு. 1015

    பத்தாவது சீட்டு சீமேயிவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.

  25. 1 நாளாகமம் 25:18சுமார் கி.மு. 1015

    பதினோராவது சீட்டு அசாரியேலுக்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது.