- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 970–930 BC
Solomon & The Temple
Solomon builds the great Temple in Jerusalem and rules with unprecedented wisdom and wealth before foreign gods divide his heart.
- 2 நாளாகமம் 3:7சுமார் கி.மு. 1011
உட்கூரை மரங்கள், கதவு நிலைகள், சுவர்கள், ஆலயத்தின் கதவுகள் ஆகியவற்றைத் தங்கத் தகட்டினால் மூடி, சுவர்களில் கேருபீன் உருவங்களையும் செதுக்கினான்.
- 2 நாளாகமம் 3:8சுமார் கி.மு. 1011
அவன் மகா பரிசுத்த இடத்தையும் கட்டினான். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தை ஒத்திருந்தது. நீளம் இருபது முழமும், அகலம் இருபது முழமுமாயிருந்தது. இவற்றை அறுநூறு தாலந்து சிறந்த தங்கத்தினால் மூடியிருந்தான்.
- 2 நாளாகமம் 3:9சுமார் கி.மு. 1011
தங்கத்தினால் செய்யப்பட்ட ஆணிகள் ஐம்பது சேக்கல் எடையுள்ளன. மேல் பகுதிகளும் தங்கத் தகட்டினால் மூடப்பட்டிருந்தது.
- 2 நாளாகமம் 3:10சுமார் கி.மு. 1011
மகா பரிசுத்த இடத்தில் அவன் இரண்டு செதுக்கப்பட்ட கேருபீன்களை அமைத்து, அவற்றையும் தங்கத்தகட்டால் மூடினான்.
- 2 நாளாகமம் 3:11சுமார் கி.மு. 1011
கேருபீன்களின் இறக்கைகளின் முழு நீளம் இருபது முழமாய் இருந்தது. முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், ஆலயத்தின் சுவரைத் தொடுவதாயும் இருந்தது. அதன் மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாய் இருந்தது. அதுவும் மற்ற கேருபீனின் சிறகை தொட்டபடி இருந்தது.
- 2 நாளாகமம் 3:12சுமார் கி.மு. 1011
இவ்வாறு இரண்டாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாக இருந்தது. அது ஆலயத்தின் மற்ற சுவரைத் தொட்டது. மற்ற சிறகும் ஐந்துமுழ நீளமுடையதாயிருந்தது. அது முதலாவது கேருபீனின் சிறகை தொட்டுக்கொண்டிருந்தது.
- 2 நாளாகமம் 3:13சுமார் கி.மு. 1011
இந்த கேருபீன்களின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழமாய் நீண்டிருந்தன. அவை ஆலயத்தின் உட்புறத்தை நோக்கியபடி காலூன்றி நின்றன.
- 2 நாளாகமம் 3:14சுமார் கி.மு. 1011
சாலொமோன் நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், மென்பட்டினாலும் திரைச்சீலையைச் செய்து, அதில் கேருபீன்களின் உருவங்கள் தைக்கப்பட்டிருந்தன.
- 2 நாளாகமம் 3:15சுமார் கி.மு. 1011
ஆலயத்தின் முன்பகுதியில் அவன் இரண்டு தூண்களைச் செய்திருந்தான், அவை இரண்டும் சேர்ந்து ஒவ்வொன்றும் முப்பத்தைந்து முழ நீளமாயிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றின் உச்சியிலும் ஐந்துமுழ அளவுள்ள கும்பம் இருந்தது.
- 2 நாளாகமம் 3:16சுமார் கி.மு. 1011
பின்னப்பட்ட சங்கிலிகளைச் செய்து, அவற்றை அதன் தூண்களின் உச்சியில் வைத்தான். அதோடு நூறு மாதுளம்பழ வடிவங்களைச் செய்து அவற்றை சங்கிலியில் பிணைத்தான்.
- 2 நாளாகமம் 3:17சுமார் கி.மு. 1011
அந்தத் தூண்களை ஆலயத்தின் முன்பகுதியில் தெற்குப் பக்கத்திற்கு ஒன்றும், வடக்குப் பக்கத்திற்கு ஒன்றுமாக நிறுத்தினான். தெற்கிலிருந்த தூணுக்கு யாகீன் என்றும், வடக்கிலிருந்த தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.
- 2 நாளாகமம் 4:1சுமார் கி.மு. 1011
சாலொமோன் இருபதுமுழ நீளம், முப்பதுமுழ அகலம், பத்துமுழ உயரமுடைய ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தான்.
- 2 நாளாகமம் 4:2சுமார் கி.மு. 1011
அவன் வார்ப்பிக்கப்பட்ட உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
- 2 நாளாகமம் 4:3சுமார் கி.மு. 1011
அதன் விளிம்பின் கீழ்ப்பகுதியில் ஒரு முழத்திற்கு பத்து காளைகளின் உருவங்கள் இருக்கும்படி சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன.
- 2 நாளாகமம் 4:4சுமார் கி.மு. 1011
வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன.
- 2 நாளாகமம் 4:5சுமார் கி.மு. 1011
தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 60,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
- 2 நாளாகமம் 4:6சுமார் கி.மு. 1011
அதன்பின் அவன், கழுவுவதற்காக பத்து தண்ணீர்த் தொட்டிகளையும் செய்து, ஐந்து தொட்டிகளை தெற்குப் பக்கத்திலும் ஐந்து தொட்டிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அவைகளிலேயே தகன காணிக்கைக்குரிய பொருட்கள் கழுவப்பட்டன. ஆனால் அந்தப் பெரிய தொட்டியோ ஆசாரியர்கள் கழுவுவதற்கென இருந்தது.
- 2 நாளாகமம் 4:7சுமார் கி.மு. 1011
அவன் பத்து தங்க விளக்குத் தாங்கிகளைக் குறிக்கப்பட்ட விதிப்படி செய்தான். அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான்.
- 2 நாளாகமம் 4:8சுமார் கி.மு. 1011
அவன் பத்து மேஜைகளையும் செய்து, அவற்றில் ஐந்தை தெற்குப் பக்கத்திலும், ஐந்தை வடக்குப் பக்கத்திலுமாக ஆலயத்தில் வைத்தான். அத்துடன் தங்கத்தினால் நூறு தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான்.
- 2 நாளாகமம் 4:9சுமார் கி.மு. 1011
அவன் ஆசாரியருக்கான முற்றத்தையும், பெரிய முற்றத்தையும், அந்த முற்றங்களுக்குரிய கதவுகளையும் செய்து, கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினான்.
- 2 நாளாகமம் 4:10சுமார் கி.மு. 1011
அவன் அந்தப் பெரிய தொட்டியைத் தெற்கு பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் வைத்தான்.
- 2 நாளாகமம் 4:11சுமார் கி.மு. 1011
அத்துடன் ஈராம் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, இறைவனின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்:
- 2 நாளாகமம் 4:12சுமார் கி.மு. 1011
இரண்டு தூண்கள், தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள், தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்,
- 2 நாளாகமம் 4:13சுமார் கி.மு. 1011
தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள்,
- 2 நாளாகமம் 4:14சுமார் கி.மு. 1011
தாங்கும் கால்களுடன் அதன் தொட்டிகள்;