உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 970–930 BC

Solomon & The Temple

Solomon builds the great Temple in Jerusalem and rules with unprecedented wisdom and wealth before foreign gods divide his heart.

635 வசனங்கள் · 2 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. 1 இராஜாக்கள் 11:35சுமார் கி.மு. 984

    தாவீதின் மகனின் கையிலிருந்து பத்து கோத்திரங்களை எடுத்து உனக்குத் தருவேன்.

  2. 1 இராஜாக்கள் 11:36சுமார் கி.மு. 984

    என் பெயர் தங்கும்படி, நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமில் எனக்கு முன்பாக என் அடியவனான தாவீதுக்கு எப்பொழுதும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

  3. 1 இராஜாக்கள் 11:37சுமார் கி.மு. 984

    ஆயினும் உன்னையோ நான் தெரிந்தெடுப்பேன். நீ உன் இருதய விருப்பப்படி எல்லோருக்கும் மேலாக அரசாள்வாய். இஸ்ரயேலுக்கு மேல் அரசனாய் இருப்பாய்.

  4. 1 இராஜாக்கள் 11:38சுமார் கி.மு. 984

    அப்போது நான் உனக்குக் கட்டளையிடுவதெல்லாவற்றையும் நீ செய்து, என் வழிகளில் நடந்து, என் விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் அடியானாகிய தாவீது செய்ததுபோல என் பார்வையில் சரியானதைச் செய்வாயானால், நான் உன்னோடுகூட இருப்பேன். தாவீதுக்கு நான் கட்டியது போல, நீடித்திருக்கும் ஒரு வம்சத்தை உனக்கும் கட்டி இஸ்ரயேலை உனக்குத் தருவேன்.

  5. 1 இராஜாக்கள் 11:39சுமார் கி.மு. 984

    இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான்.

  6. 1 இராஜாக்கள் 11:40சுமார் கி.மு. 984

    அதனால் சாலொமோன் யெரொபெயாமைக் கொலைசெய்ய முயற்சி செய்தான். ஆனால் அவன் சீஷாக் அரசனிடம் எகிப்திற்குத் தப்பி ஓடி, சாலொமோனின் மரணம்வரை அங்கே தங்கியிருந்தான்.

  7. 1 இராஜாக்கள் 11:41சுமார் கி.மு. 984

    சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தில் செய்தவை அனைத்தும், அவன் காண்பித்த ஞானமும் சாலொமோனின் வரலாறுகளின் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.

  8. 1 இராஜாக்கள் 11:42சுமார் கி.மு. 984

    சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான்.

  9. 1 இராஜாக்கள் 11:43சுமார் கி.மு. 975

    இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.

  10. 2 நாளாகமம் 1:1சுமார் கி.மு. 1015

    தாவீதின் மகன் சாலொமோன் தனது அரசாட்சியின்மேல் தன்னை மிகவும் உறுதியாக நிலைப்படுத்தினான்; இறைவனாகிய யெகோவா அவனோடிருந்து அவனை மிகவும் மேன்மைப்படுத்தினார்.

  11. 2 நாளாகமம் 1:2சுமார் கி.மு. 1015

    பின்பு சாலொமோன் எல்லா இஸ்ரயேலருடனும் பேசினான். அவன் ஆயிரம்பேரின் தளபதிகளுடனும், நூறுபேரின் தளபதிகளுடனும், நீதிபதிகளுடனும், இஸ்ரயேலின் தலைவர்களுடனும், குடும்பங்களின் தலைவர்களுடனும் பேசினான்.

  12. 2 நாளாகமம் 1:3சுமார் கி.மு. 1015

    சாலொமோனும் கூடியிருந்தவர்கள் எல்லோரும் கிபியோனில் உள்ள உயரமான இடத்திற்குப் போனார்கள். ஏனெனில் அங்கேயே யெகோவாவின் ஊழியக்காரரான மோசே பாலைவனத்தில் அமைத்த இறைவனின் ஆசரிப்புக்கூடாரம் இருந்தது.

  13. 2 நாளாகமம் 1:4சுமார் கி.மு. 1015

    அப்பொழுது தாவீது இறைவனின் பெட்டியை கீரியாத்யாரீமிலிருந்து அதற்கென தான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவந்தான். ஏனெனில் அவன் எருசலேமில் அதற்காக ஒரு கூடாரம் அமைத்திருந்தான்.

  14. 2 நாளாகமம் 1:5சுமார் கி.மு. 1015

    ஆனால் கூரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேல் செய்திருந்த ஒரு வெண்கல பலிபீடம் கிபியோனில் யெகோவாவின் இருப்பிடத்திற்கு முன்னால் இருந்தது. எனவே அந்த இடத்தில்தான் சாலொமோனும் கூடியிருந்த மக்களும் யெகோவாவிடத்தில் விசாரித்தார்கள்.

  15. 2 நாளாகமம் 1:6சுமார் கி.மு. 1015

    சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்குமுன் அமைந்திருந்த வெண்கல பலிபீடத்திற்கு சாலொமோன் சென்றான். அங்கே ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான்.

  16. 2 நாளாகமம் 1:7சுமார் கி.மு. 1015

    அந்த இரவில் இறைவன் சாலொமோனுக்குக் காணப்பட்டு, “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார்.

  17. 2 நாளாகமம் 1:8சுமார் கி.மு. 1015

    சாலொமோன் இறைவனிடம், “நீர் எனது தகப்பன் தாவீதிற்கு உமது மிகுந்த தயவைக் காட்டி, அவருடைய இடத்தில் என்னை அரசனாக்கினீர்.

  18. 2 நாளாகமம் 1:9சுமார் கி.மு. 1015

    இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, எனது தகப்பன் தாவீதிற்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தம் உறுதிப்படட்டும். ஏனெனில் பூமியின் தூளைப்போல் எண்ணிக்கையுடைய மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர்.

  19. 2 நாளாகமம் 1:10சுமார் கி.மு. 1015

    எனவே இந்த மக்களை வழிநடத்துவதற்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும் எனக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” எனப் பதிலளித்தான்.

  20. 2 நாளாகமம் 1:11சுமார் கி.மு. 1015

    இறைவன் சாலொமோனிடம், “நீ செல்வத்தையோ, செழிப்பையோ, கனத்தையோ, உன் பகைவர்களின் மரணத்தையோ, அல்லது உனக்கு நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக என் மக்களை ஆளும்படி நான் உன்னை அரசனாக்கினேன். நீ அவர்களை ஆளுவதற்கு ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய். இதுவே உனது இருதயத்தின் ஆசையாயிருந்தபடியால்,

  21. 2 நாளாகமம் 1:12சுமார் கி.மு. 1015

    உனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுக்கிறேன். அத்துடன் உனக்கு முன்னிருந்த எந்த அரசனுக்கும் உனக்குப் பின்வரும் எந்த அரசனுக்கும் இல்லாத செல்வத்தையும், செழிப்பையும், கனத்தையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.

  22. 2 நாளாகமம் 1:13சுமார் கி.மு. 1015

    அதன்பின்பு சாலொமோன் கிபியோனின் சபைக் கூடாரத்திற்கு முன்பாக இருந்த, உயர்ந்த இடத்திலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே இஸ்ரயேலை அரசாண்டான்.

  23. 2 நாளாகமம் 1:14சுமார் கி.மு. 1015

    சாலொமோன் தேர்களையும், குதிரைகளையும் திரளாய் சேர்த்தான். அவனிடம் 1,400 தேர்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றிற்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.

  24. 2 நாளாகமம் 1:15சுமார் கி.மு. 1015

    அரசன் எருசலேமில் தங்கத்தையும், வெள்ளியையும் கற்களைப்போல் சாதரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரங்களில் வளரும் காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான்.

  25. 2 நாளாகமம் 1:16சுமார் கி.மு. 1015

    சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும் சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள்.