உள்ளடக்கத்திற்குச் செல்க

The Rich பற்றிய பைபிள் வசனங்கள்

145 வசனங்கள் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும், உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும்,

  2. அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.

  3. அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும், காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான்.

  4. அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.

  5. பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன; இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது.

  6. கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்; அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது.

  7. அது இரக்கமின்றி அவனை விரட்டும்; இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள்.

  8. மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”

  9. “நான் என் நம்பிக்கையை பொன்னின்மேல் வைத்து, சுத்த தங்கத்தைப் பார்த்து, ‘நீயே என் பாதுகாப்பு’ எனச் சொல்லியிருந்தால்,

  10. என் செல்வம் பெரியதென்றும், அதை என் கைகளே சேர்த்ததென்றும் நான் மகிழ்ந்திருந்தால்,

  11. அப்பொழுது இவைகளும் தண்டனைக்குரிய பாவங்களாய் இருந்திருக்கும்; நான் என் உன்னதத்திலுள்ள இறைவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருப்பேன்.

  12. பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;

  13. ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.

  14. அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.

  15. தாவீது அகிமெலேக்கின் வீட்டிற்கு சென்றான் என்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு சொன்னபோது பாடிய மஸ்கீல் என்னும் சங்கீதம். பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்? இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு எந்நாளும் உள்ளது.

  16. வஞ்சகம் செய்கிறவனே, உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது; அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது.

  17. நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.

  18. வஞ்சக நாவே, நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்!

  19. இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்: அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி, வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார்.

  20. இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்; அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து,

  21. “இதோ பாருங்கள், இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்; தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள்.

  22. பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன்.

  23. அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன.

  24. அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை.

  25. ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள்.