Skip to content

Praise பற்றிய பைபிள் வசனங்கள்

490 வசனங்கள் · 106 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. நீதிமான்களின் கூடாரங்களில், வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: “யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.

  2. நீதியின் வாசல்களை எனக்காகத் திறவுங்கள்; நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.

  3. இதுவே யெகோவாவின் வாசல்; நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.

  4. நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; என் இரட்சிப்பு நீரே.

  5. நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.

  6. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  7. உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.

  8. உமது நியாயமான சட்டங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தும்படி, நான் நள்ளிரவில் விழித்தெழுகிறேன்.

  9. யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும்.

  10. நீதியான உமது சட்டங்களுக்காக நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.

  11. எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர்.

  12. எனது நாவு உமது வார்த்தையைக் குறித்துப் பாடட்டும்; ஏனெனில், உமது கட்டளைகள் எல்லாம் நியாயமானவை.

  13. நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக.

  14. அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.

  15. சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.

  16. பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, யெகோவாவைத் துதியுங்கள்.

  17. யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்,

  18. நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்.

  19. யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது.

  20. இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்;

  21. லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள்.

  22. எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். யெகோவாவைத் துதியுங்கள்.

  23. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  24. தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  25. கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.