Praise பற்றிய பைபிள் வசனங்கள்: Accompanied with musical instruments
Accompanied with musical instruments பற்றிய வசனங்கள்
அவர்களோடு ஏமானும், எதுத்தூனும், பெயரின்படி தெரிந்துகொள்ளப்பட்டு நியமிக்கப்பட்ட மற்றவர்களும், “அவரது அன்பு என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி இருந்தார்கள்.
இறைவனைப் பாடும் பரிசுத்த பாடல்களுக்காக எக்காளங்களையும் கைத்தாளங்களையும் ஒலிக்கவும், மற்ற வாத்தியங்களை மீட்டவும் ஏமானும் எதுத்தூனும் பொறுப்பாக இருந்தார்கள். எதுத்தூனின் மகன்கள் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.