Skip to content

Edomites பற்றிய பைபிள் வசனங்கள்

154 வசனங்கள் · 14 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அரசன் அமத்சியாவே உப்புப் பள்ளத்தாக்கில் பத்தாயிரம் ஏதோமியரைத் தோற்கடித்து, தலைநகரான சேலா பட்டணத்தைக் கைப்பற்றி அதன் பெயரையும் யொக்தியேல் என்று மாற்றியவன். இன்று மட்டும் அந்த நகரம் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.

  2. இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.

  3. பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.

  4. யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.

  5. உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.

  6. ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.

  7. சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.

  8. சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.

  9. பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.

  10. ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,

  11. அகோலிபாமா, ஏலா, பினோன்,

  12. கேனாஸ், தேமான், மிப்சார்,

  13. மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.

  14. யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர்.

  15. எனவே யெகோராம் தனது அதிகாரிகளோடும், தேர்களோடும் அங்கே போனான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்தான்.

  16. இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெகோராம் தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைவிட்டு விலகியபடியால், அக்காலத்தில் லிப்னாவைச் சேர்ந்தவர்கள் கலகம் செய்தார்கள்.

  17. அமத்சியா தனது பெலத்தைத் திரட்டிக்கொண்டு இராணுவத்தை உப்புப் பள்ளத்தாக்கிற்கு நடத்திச்சென்று, அங்கே அவன் சேயீர் மனிதரில் 10,000 பேரைக் கொன்றான்.

  18. அத்துடன் யூதாவின் இராணுவமும் 10,000 மனிதரை உயிருடன் பிடித்து, அவர்களை ஒரு செங்குத்தான மலை உச்சிக்கு கொண்டுபோய் அங்கேயிருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்கள் மோதுண்டு விழுந்து நொறுங்கினார்கள்.

  19. தூமாவைப் பற்றிய ஒரு இறைவாக்கு: சேயீரிலிருந்து ஒருவன் என்னைக் கூப்பிட்டு, “காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்? காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான்.

  20. காவலாளி பதிலளித்து, “காலை வருகிறது, ஆனால் இரவும் வருகிறது. நீ கேட்க விரும்பினால் திரும்பவும் வந்து கேள்” என்று கூறினான்.

  21. ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? கருஞ்சிவப்பு கறைபடிந்த உடையுடன் போஸ்றா பட்டணத்திலிருந்து வருகிற இவர் யார்? தனது சிறப்பான அங்கியுடன் தமது வல்லமையின் மகத்துவத்தில் எழுந்தருளி வருகிற இவர் யார்? “நான்தான் அவர்! நியாயமாய் பேசி, இரட்சிக்க வல்லவர்.”

  22. உமது உடைகள் சிவப்பாய், திராட்சையைப் பிழியும் ஆலையில் மிதிக்கிறவனுடைய உடையைப்போல் இருப்பது ஏன்?

  23. “நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்; மக்கள் கூட்டங்களில் ஒருவனும் என்னுடன் இருந்ததில்லை. அவர்களை என் கோபத்தில் மிதித்து, என் கடுங்கோபத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்களுடைய இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் உடைகளெல்லாம் கறைப்பட்டன.

  24. பழிவாங்கும் நாள் என் உள்ளத்தில் இருந்தது; நான் மீட்டுக்கொள்ளும் வருடம் வந்துவிட்டது.

  25. “மாம்சத்தில் மாத்திரம் விருத்தசேதனம் செய்யப்பட்ட எல்லோரையும் தண்டிக்கும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.