- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
- எசேக்கியேல் 22:10சுமார் கி.மு. 593
தங்கள் தந்தையின் மனைவிகளுடன் உடலுறவுகொண்டு, தந்தையரை அவமானப்படுத்துவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். பெண்களின் மாதவிடாய் நேரத்தில், அவர்கள் சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருக்கையில், அவர்களைப் பலவந்தப்படுத்துவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்.
- எசேக்கியேல் 22:11சுமார் கி.மு. 593
ஒருவன் தன் அயலானின் மனைவியுடன் வெறுக்கத்தக்க குற்றம் புரிகிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளை வெட்கக்கேடாய் கறைப்படுத்துகிறான். இன்னொருவன் தன் சொந்தத் தகப்பனின் மகளாகிய தனது சகோதரியையே பலவந்தம்பண்ணுகிறான். இப்படியானவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்.
- எசேக்கியேல் 22:12சுமார் கி.மு. 593
இலஞ்சம் வாங்கி, இரத்தம் சிந்துகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். நீ அதிக வட்டி வாங்குகிறாய். அதிக இலாபத்தையும் நாடுகிறாய். உன் அயலானை வற்புறுத்தி அவனிடமிருந்து அநியாய இலாபத்தைப் பெறுகிறாய். என்னையும் மறந்துபோனாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
- எசேக்கியேல் 22:13சுமார் கி.மு. 593
“ ‘நீ அநீதியாய் இலாபம் சம்பாதித்த பொருட்களுக்காகவும், உன் மத்தியில் இரத்தம் சிந்தியமைக்காகவும் நான் சீற்றத்துடன் என் கரங்களைச் சேர்த்து அடிப்பேன்.
- எசேக்கியேல் 22:14சுமார் கி.மு. 593
நான் உன்னைத் தண்டிக்கும் நாளிலே உன் தைரியம் நிலைத்திருக்குமோ? அல்லது உன் கைகள் பெலனாய் இருக்குமோ? யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். நானே இதைச் செய்வேன்.
- எசேக்கியேல் 22:15சுமார் கி.மு. 593
நான் உன்னை நாடுகளுக்குள் சிதறுண்டு போகப்பண்ணுவேன். நாடுகளுக்குள்ள உன்னைச் சிதறடிப்பேன். உன் தூய்மையற்ற தன்மைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
- எசேக்கியேல் 22:16சுமார் கி.மு. 593
பல நாடுகளின் பார்வையிலும் நீ கறைப்பட்டிருக்கும்போது, நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய்’ ” என்றார்.
- எசேக்கியேல் 22:17சுமார் கி.மு. 593
பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
- எசேக்கியேல் 22:18சுமார் கி.மு. 593
“மனுபுத்திரனே, இஸ்ரயேல் குடும்பத்தார் எனக்கு உலோகக் களிம்பாகிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் சூளையில் எஞ்சிய செம்பும், தகரமும், இரும்பும், ஈயமுமாயிருக்கிறார்கள். அவர்களோ வெள்ளியின் களிம்புகளே.
- எசேக்கியேல் 22:19சுமார் கி.மு. 593
ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, ‘நீங்களெல்லோரும் உலோகக் களிம்பாகிவிட்டதால், நான் உங்களை எருசலேமில் கூட்டிச்சேர்ப்பேன்.
- எசேக்கியேல் 22:20சுமார் கி.மு. 593
வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், தகரம் அனைத்தையும், ஜூவாலையில் எரியும் நெருப்பினால் உருக்குவதற்கென சூளைக்குள் சேர்ப்பதுபோல, நான் உங்களையும் சேர்ப்பேன். என் கோபத்திலும் கடுங்கோபத்திலும் நான் உங்களை நகரத்தினுள்ளே வைத்து உருக்குவேன்.
- எசேக்கியேல் 22:21சுமார் கி.மு. 593
நான் உங்களைக் கூட்டிச்சேர்த்து, கோபமாகிய நெருப்பை உங்கள்மேல் ஊதுவேன். நீங்கள் எருசலேமுக்குள் உருக்கப்படுவீர்கள்.
- எசேக்கியேல் 22:22சுமார் கி.மு. 593
சூளையில் வெள்ளி உருக்கப்படுவதுபோல், நீங்களும் எருசலேமுக்குள் உருக்கப்படுவீர்கள். அப்பொழுது, யெகோவாவாகிய நானே என் கடுங்கோபத்தை உங்கள்மேல் ஊற்றினேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்’ ” என்றார்.
- எசேக்கியேல் 22:23சுமார் கி.மு. 593
மறுபடியும் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
- எசேக்கியேல் 22:24சுமார் கி.மு. 593
“மனுபுத்திரனே, நீ நாட்டுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘நீயோ கடங்கோபத்தின் நாளிலே, தூய்மையாக்கப்படாத, மழை பெய்யாத நாடாக இருப்பாய்.’
- எசேக்கியேல் 22:25சுமார் கி.மு. 593
அங்கே கர்ஜிக்கும் சிங்கமொன்று தன் இரையைக் கிழிப்பதுபோல, பட்டணத்தில் இருக்கும் இளவரசர்களுக்குள்ளேயே சதித்திட்டம் ஒன்றுண்டு. அவர்கள் மக்களை விழுங்குகிறார்கள். செல்வங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். அங்குள்ள அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.
- எசேக்கியேல் 22:26சுமார் கி.மு. 593
அவளது ஆசாரியர்கள் என் சட்டங்களை மீறி, என் பரிசுத்த பொருட்களின் தூய்மையைக் கெடுக்கிறார்கள். அவர்கள் பரிசுத்தமானதற்கும் சாதாரணமானதற்கும் இடையில் வித்தியாசம் காண்பதில்லை. சுத்தமானதற்கும், சுத்தமற்றதற்கும் இடையில் வித்தியாசம் இல்லையென போதிக்கிறார்கள். என் ஓய்வுநாட்களை கைக்கொள்வதில் கண்மூடித்தனமாய் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மத்தியில் நான் அவமதிக்கப்படுகிறேன்.
- எசேக்கியேல் 22:27சுமார் கி.மு. 593
அங்கிருக்கும் அவளது அதிகாரிகள் தங்கள் இரைகளைக் கிழிக்கும் ஓநாய் போன்றவர்கள். அநீதியான இலாபம் பெறுவதற்காய் இரத்தம் சிந்தி மக்களைக் கொல்கிறார்கள்.
- எசேக்கியேல் 22:28சுமார் கி.மு. 593
அவளது தீர்க்கதரிசிகள் உண்மையற்ற தரிசனங்களாலும், பொய்யான குறிகளாலும் இச்செயல்களுக்கு மேற்பூச்சுப் பூசுகிறார்கள். யெகோவா கூறாதிருக்க, ‘ஆண்டவராகிய யெகோவா கூறியது இது’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
- எசேக்கியேல் 22:29சுமார் கி.மு. 593
நாட்டு மக்களை பயமுறுத்தி பலவந்தம்பண்ணி பறிக்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள். ஏழைகளையும், சிறுமைப்பட்டவர்களையும் ஒடுக்குகிறார்கள். அயல்நாட்டினரைத் துன்புறுத்தி அவர்களுக்கு நீதிசெய்ய மறுக்கிறார்கள்.
- எசேக்கியேல் 22:30சுமார் கி.மு. 593
“நாட்டைப் பாதுகாக்கும் சுவரை கட்டுவதற்கும், நான் நாட்டை அழிக்காதபடி மதில் வெடிப்பில் நாட்டிற்காக நிற்பதற்கும், அவர்களுக்குள்ளே ஒரு மனிதனைத் தேடினேன். ஆனால் நான் ஒருவனையும் காணவில்லை.
- எசேக்கியேல் 22:31சுமார் கி.மு. 593
ஆகவே, நான் எனது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, என் பயங்கர கோபத்தால் அவர்களைச் சுட்டெரித்து அவர்கள் செய்த எல்லாவற்றையும், அவர்களுடைய தலைகளின் மேலே விழப்பண்ணுவேன். என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.”
- எசேக்கியேல் 23:1சுமார் கி.மு. 593
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது:
- எசேக்கியேல் 23:2சுமார் கி.மு. 593
“மனுபுத்திரனே, இரண்டு பெண்கள் இருந்தார்கள், அவர்கள் ஒரு தாயின் மகள்களாய் இருந்தார்கள்.
- எசேக்கியேல் 23:3சுமார் கி.மு. 593
அவர்கள் தங்கள் இளவயதிலிருந்தே விபசாரம் செய்து எகிப்தில் விபசாரிகளானார்கள். அந்நாட்டில் அவர்களுடைய மார்பகங்கள் தடவப்பட்டன. அவர்களுடைய கன்னிமையான மார்பகங்கள் தொடப்பட்டது.