உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. மோசே இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்களிடம் சொன்னதாவது: “யெகோவா கட்டளையிடுவது இதுவே:

  2. ஒரு மனிதன் யெகோவாவுடன் பொருத்தனைபண்ணுகிறபோதோ அல்லது ஒரு வாக்குறுதியின்படி தான் நடப்பதாக ஆணையிடும்போதோ, அவன் தன் வாக்கை மீறாமல் தான் சொன்ன எல்லாவற்றின்படியும் செய்யவேண்டும்.

  3. “ஒரு இளம்பெண் தன் தகப்பன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, யெகோவாவுக்கு ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருக்கலாம் அல்லது ஒரு வாக்குறுதியின்படி நடப்பதற்குத் தன்னைக் கடமைப்படுத்தி இருக்கலாம்.

  4. ஆனால் அவளுடைய தகப்பன் அதைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவளை தடைசெய்தால், அவள் தான் செய்வதாகச் சொன்ன எந்தவொரு நேர்த்திக்கடனோ வாக்குறுதியோ நிறைவேற்றப்படத் தேவையில்லை. அவள் தகப்பன் அவளைத் தடைசெய்தபடியால், யெகோவா அவளை அதிலிருந்து நீங்கலாக்குகிறார்.

  5. ஆனால் அவள் கணவன் அதைப்பற்றிக் கேள்விப்படும்போது அவளைத் தடுத்தால், அவள் தான் செய்வதாகச் சொன்ன நேர்த்திக்கடனையும், தான் கைக்கொண்டு நடப்பதாகச்சொன்ன அவளுடைய முன்யோசனையின்றிச் செய்த வாக்குறுதிகளையும் அவளுடைய கணவன் இல்லாமலாக்கிவிடுகிறான். ஆகவே யெகோவா அவளை அதிலிருந்து நீங்கலாக்குகிறார்.

  6. ஆனால் அவள் கணவன் அவற்றைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவற்றை இல்லாமல் செய்தால் அவளின் வாயிலிருந்து புறப்பட்ட நேர்த்திக்கடனையோ வாக்குறுதியையோ அவள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அவளுடைய கணவன் அவற்றை இல்லாமல் செய்துவிட்டான். ஆகவே யெகோவாவும் அவளை அவைகளிலிருந்து நீங்கலாக்கிவிடுவார்.

  7. ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையிலும், ஒரு தகப்பனுக்கும், அவனுடைய வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளவயதான மகளுக்கும் இடையிலும் உள்ள உறவுகளைப்பற்றி யெகோவா மோசேக்குக் கொடுத்த விதிமுறைகள் இவையே.

  8. யெகோவா மோசேயிடம்,

  9. எனவே மோசே மக்களிடம், “மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் செய்யவும், அவர்களைப் பழிவாங்கும்படியான யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றவும் உங்கள் மனிதரில் சிலருக்கு ஆயுதங்களைத் தரிப்பியுங்கள்.

  10. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் மீதியானியருக்கு எதிராக யுத்தம்செய்து எல்லா மனிதரையும் கொன்றார்கள்.

  11. பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.

  12. ஆசாரியன் எலெயாசார் யுத்தத்திற்குப் போன இராணுவவீரர்களிடம் சொன்னதாவது, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டத்தின்படி செய்யப்பட வேண்டியதாவது:

  13. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  14. அத்துடன் யுத்தத்தில் சண்டையிட்ட போர்வீரர்களிடமிருந்து எல்லாவற்றிலும் ஐந்நூறில் ஒரு பங்கை யெகோவாவுக்கான அன்பளிப்பாக வேறுபிரித்து வைக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அவை ஒதுக்கப்படவேண்டும்.

  15. இராணுவவீரர் பெற்றுக்கொண்ட அரைப்பங்கிலிருந்து இந்த அன்பளிப்பை எடுத்து, யெகோவாவின் பங்காக ஆசாரியன் எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.

  16. அதேபோல் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட மற்ற அரைப்பங்கிலிருந்து எல்லாவற்றிலும் ஐம்பதில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அல்லது வேறுமிருகங்களானாலும் அவற்றிலிருந்து தெரிவு செய்யவேண்டும். அவற்றை யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்குப் பொறுப்பாயிருக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.

  17. மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

  18. இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.

  19. 36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.

  20. 30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.

  21. 16,000 மக்கள்; இவர்களில் 32 பேர் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டனர்.

  22. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் பங்காக இதை ஆசாரியன் எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.

  23. மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலரின் அரைப்பங்கில் ஒவ்வொரு ஐம்பது மிருகங்களிலிருந்து ஒன்றையும், ஆட்களிலிருந்து ஒருவரையும் இறைசமுகக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்த லேவியருக்குக் கொடுத்தான்.

  24. ஆகையால், எங்களில் ஒவ்வொருவனும் கைப்பற்றிய தங்கநகைகளான காப்புகள், கைவளையல்கள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், அட்டியல்கள் ஆகியவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்காக யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யும்படி இவற்றைக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார்கள்.

  25. ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.